தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Rajinikanth: என்டிஆர் நூற்றாண்டு விழா; ரஜினிகாந்தை கட்டியணைத்து வரவேற்ற பாலகிருஷ்ணா- வீடியோ

Rajinikanth: என்டிஆர் நூற்றாண்டு விழா; ரஜினிகாந்தை கட்டியணைத்து வரவேற்ற பாலகிருஷ்ணா- வீடியோ

Aarthi V HT Tamil
Apr 28, 2023 01:08 PM IST

என்.டி.ஆரின் நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்வதற்காக விஜயவாடா சென்ற ரஜினிகாந்தை பாலகிருஷ்ணா வரவேற்றார்.

ரஜினிகாந்தை கட்டியணைத்து வரவேற்ற பாலகிருஷ்ணா
ரஜினிகாந்தை கட்டியணைத்து வரவேற்ற பாலகிருஷ்ணா

ட்ரெண்டிங் செய்திகள்

நடிகராக மட்டுமில்லாமல் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநராகவும் ஜொலித்து இருக்கிறார். நடிகர் நந்திமுரி பாலகிருஷ்ணா இவரது மகன். நடிகராக மட்டும் இருந்துவிடாமல் 1982 ஆம் ஆண்டு தெலுங்கு தேசம் என்ற கட்சியை ஆரம்பித்து அரசியலுக்குள் நுழைந்தார்.

1996 ஆம் ஆண்டு ஜனவரி 18ஆம் தேதி உயிரிழந்தார். அவர் பிறந்து 100 வருடங்கள் ஆகும் நிலையில் நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாட அவரது மகனும், நடிகருமான பாலகிருஷ்ணா முடிவு செய்தார். இதற்காக பல பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்த், ஆந்திராவின் முன்னாள் முதல் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, மூத்த பத்திரிகையாளர் வெங்கடேச நாராயணா உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் விழாவில் கலந்து கொள்வதற்காக விமானம் மூலம் விஜயவாடா சென்றார். அவரை வரவேற்கும் விதமாக விமான நிலையத்திற்கே நடிகர் பாலகிருஷ்ணா சென்று உள்ளார். அவரை கட்டிப்பிடித்து அன்பை பரிமாறிக்கொண்டு வரவேற்றது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைராலாகிறது.

ரஜினிகாந்த் இப்போது ஜெயிலர் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இப்படம் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பாலகிருஷ்ணா கடைசியாக வீர சிம்ஹா ரெட்டி படத்தில் காணப்பட்டார். இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையின் போது படம் வெளியிடப்பட்டது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

IPL_Entry_Point

டாபிக்ஸ்