தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Assam Traditional Dance : 11,304 கலைஞர்கள் பிஹீ நடனமாடி கின்னஸ் சாதனை

Assam Traditional Dance : 11,304 கலைஞர்கள் பிஹீ நடனமாடி கின்னஸ் சாதனை

Priyadarshini R HT Tamil
Apr 14, 2023 12:03 PM IST

Chief Minister of Assam : அஸ்ஸாம் மாநிலத்தின் பாரம்பரிய நடனமான பிஹீவை 11,304 நாட்டுப்புற கலைஞர்கள் ஒரே நேரத்தில் ஆடி கின்னஸ் உலக சாதனையை படைத்தார்கள்.

அஸ்ஸாமின் பாரம்பரிய நடனமாடும் பிஹீ கலைஞர்கள்.
அஸ்ஸாமின் பாரம்பரிய நடனமாடும் பிஹீ கலைஞர்கள்.

ட்ரெண்டிங் செய்திகள்

மாபெரும் பிஹீ நடனமாடி அஸ்ஸாம் வரலாற்று சாதனையை படைத்தது. ஓரிடத்தில் அவர்கள் ஆடிய பாரம்பரிய நடனம் உலகத்திற்கு அவர்களின் பாரம்பரியத்தை பறைசாற்றியது. இந்த கின்னஸ் உலக சாதனை குவஹாத்தியின் சருசாஜெய் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. 11,304 நாட்ப்புற நடன கலைஞர்கள் பிஹீ நடனம் ஆடினார்கள். அவர்கள் அம்மாநில முதல் ஹிமந்தா பிஸ்வா சர்மா முன்னிலையில் நடனமாடினர். 2,500க்கும் மேற்பட்டோர் டிரம்களை வாசித்தனர். அவர்களுடன் சேர்ந்து நடனக்கலைஞர்கள் நடனமாடினர். இந்த நிகழ்ச்சிகள் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றது.

இந்த நிகழ்ச்சியை அஸ்ஸாம் அரசு, கலாச்சார பாரம்பரியத்தை ஊக்குவிக்கும் வகையில் ஏற்பாடு செய்திருந்தது. அங்கு கின்னஸ் உலக சாதனை குழுவினரும் இருந்தனர். “நாங்கள் பிஹீ நடனம் மற்றம் பிஹீ மேளக்கருவிகள் இரண்டுக்கும் சேர்ந்த ஒரே இடத்தில் ஒரே மேடையில் உலக சாதனையை நிகழ்த்திவிட்டோம். 11,304 நடன கலைஞர்கள் மற்றும் டிரம்மர்கள் இதில் கலந்துகொண்டார்கள். ஒரே இடத்தில் நடத்தப்படும் மாபெரும் பிஹீ நடனம் மற்றும் பிஹீ மேளக்கருவி இசைக்கும் நிகழ்ச்சியாகும்” என்று சர்மா கூறினார்.

இதுகுறித்து அஸ்ஸாம் அமைச்சம் அசோக் சிங்கால் தனது டிவீட்டில் தெரிவித்துள்ளதாவது, எங்கள் பிஹீ இன்று கின்னஸ் சாதனை படைக்கிறது. சருசஜெய் ஸ்டேடியத்தில் நடைபெறும் பிஹீ நடனம் எங்கள் பாரம்பரிய நடனம் முதல்வர் சர்மா முன்னிலையில் நிகழ்த்திக்காட்டப்பட்டது என்று அவரை டேக் செய்து கூறியுள்ளார்.

பிஹீ நடனம் இரண்டு கின்னஸ் உலக சாதனைகளை செய்கிறது. முதலாவது, மாபெரும் பாரம்பரிய நடனம், மற்றொன்று மாபெரும் இசைக்குழுவினருடன் நடத்தப்பட்டதற்காக என இரண்டு சாதனைகளை செய்கிறது. இதற்கான செலவுகளை மாநிலத்தில் கலாச்சார துறை ஏற்றுக்கொண்டது. அஸ்ஸாம் அரசு இந்நடனத்தின் கின்னஸ் உலக சாதனைக்கு பதிவு செய்வதை முன்னெடுத்தது.

பிரதமர் நரேந்திர மோடி குவஹாத்தி வரும்போது, அவர் முன்னிலையில் பிஹீ நடன நிகழ்ச்சி நிகழ்த்தப்படும். அவரது முன்னிலையில் கின்னஸ் சாதனை சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக 2015ம் ஆண்டு மாபெரும் பாரம்பரிய நடன நிகழ்ச்சி நடைபெற்றது. சீனாவில் 7,700 நடன கலைஞர்கள் அதில் கலந்துகொண்டார்கள். இதற்கிடையில், மாபெரும் இசை நிகழ்ச்சி இந்தியாவில், 2019ம் ஆண்டு 3,730 கலைஞர்களுடன் நடத்தப்பட்டது.

IPL_Entry_Point

டாபிக்ஸ்