G.V.Prakash:விவாகரத்திற்குப் பின் மருமகள் குறித்து பேசிய ஜி.வி.யின் தாய்... இனி இதைத்தான் செய்வேன்!
G.V.Prakash: இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ் மனைவி சைந்தவி உடனான திருமண உறவிலிருந்து பிரிந்த நிலையில், ஜி.வி.பிரகாஷின் தாயார் ஏ.ஆர்.ரிஹானா இவர்களது பிரிவு குறித்தும், சைந்தவி குறித்தும் சில கருத்துகளை தெரிவித்துள்ளார்.
தமிழ் திரையுலக ரசிகர்களை தனது இசையாலும் குரலாலும் மயக்கி வருபவர் ஜி.வி.பிரகாஷ். இவர் பாடகி சைந்தவியை பள்ளி காலத்திலிருந்து காதலித்து பின் பெற்றோர் சம்மதத்துடன் பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அன்வி என்ற பெண் குழந்தையும் உள்ளது.
இந்நிலையில், ஜி.வி. பிரகாஷ்- சைந்தவி தம்பதி தங்களது திருமண வாழ்க்கையை முடிவுக்கு கொண்டுவர் விரும்புவதாகவும், பரஸ்பர சம்மதத்துடன் இருவரும் பிரிந்து வாழ்வதாகவும் அறிவித்தனர். இது இவர்களின் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதுமட்டுமல்லாமல், இவர்களின் பிரிவுக்கு காரணம் இதுதான் என பல வதந்திகளும் வந்த வண்ணம் இருந்தன.
தற்போது, ஜி.வி.பிரகாஷின் தாயார் ஏ.ஆர்.ரிஹானா ஜி.வி.பிரகாஷ்- சைந்தவி விவாகரத்து குறித்தும், இது தனக்கு ஏற்படுத்திய பாதிப்பு குறித்தும் யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டி அளித்திருந்தார். இவர் சர்வதேச தரத்தில் மாத்திகலாம் மாலை எனும் ஆல்பம் பாடலை பாடியுள்ளார். இந்த ஆல்பம் குறித்த நேர்காணல் ஒன்றின் போது தான் இவர் ஜி.வி பிரகாஷ்- சைந்தவி தம்பதி குறித்து கூறியுள்ளார்.
டீன் ஏஜ் பெண் போல பாடினேன்
அந்தப் பேட்டியில், தற்போதுள்ள திரையுலகில் பாடல்களுக்கான முக்கியத்துவம் குறைந்துகொண்டே வருகிறது. அதற்கு தகுந்தாற்போல் பாடல்களின் எண்ணிக்கையும் குறைந்து கொண்டே வருகிறது. ஆனால், மாறாக உலகம் முழுவதும் சுயாதீன பாடகர்கள் அதிகரித்து வருவதுடன் அவர்களின் பாடல்கள் மூலம் இசைக் கலைஞர்கள் நம்பர் 1ஆக இருக்கின்றனர்.
பாடல்கள் சினிமாவில் இருந்தாலும், அவற்றை தனி ஆல்பமாக வெளியிட்டாலும் ரசிகர்கள் கேட்கத்தான் போகிறார்கள். இந்த ஆல்பத்தின் ஒரு டீன் ஏஜ் பெண் போல பாடியுள்ளேன். இது ரசிகர்களுக்கு பிடிக்கும். இந்த பாடலின் இசையமைப்பாளர் எமில் அனிருத், ரஹ்மானை போன்ற திறமை கொண்டவர் எனக் கூறினார்.
ஜிவி பிரகாஷ்- சைந்தவி சேரப் போகிறார்களா?
இதைத்தொடர்ந்து ஜிவி பிரகாஷ்- சைந்தவி விவாகரத்து குறித்து பேசுகையில், இவர்கள் இருவரும் ஒன்றாக வாழ்க்கையில் பயணிக்க அவர்கள் தான் முடிவெடுத்தனர். இப்போது பிரிய வேண்டுமெனவும் அவர்கள் தான் முடிவெடுத்துள்ளனர். இப்போது நான் இருவரும் சேர வேண்டும் எனக் கூறினால் சேரப் போகிறார்களா? அது ஒன்றும் இல்லை. அனைத்திற்கும் விதி என ஒன்று உண்டு. இவையெல்லாம் இறைவனால் நடத்தப்படுகிறதா எனத் தெரியவில்லை.
சைந்தவி போல நல்ல பெண்ணை பார்க்க முடியாது
இருப்பினும், சைந்தவி திரும்ப வீட்டிற்கு வரவேண்டும் என்றே நான் எண்ணுகிறேன். நான் ஜிவியைக் காட்டிலும் சைந்தவியுடன் அதிக அளவில் மனம் விட்டு பேசுவேன். இந்த சூழலிலும் என்னால் அவரிடம் பேச முடியும். சைந்தவி மிக நல்ல பெண். அவரைப் போல நல்ல பெண்ணை பார்க்க முடியாது. இவர்கள் விவாகரத்து குறித்து ஜிவியிடம் விசாரித்த போது அவர்கள் கூறிய காரணத்தை என்னால் ஜீரணிக்க முடியவில்லை.
இறைவனிடமே விட்டு விடுகிறேன்
சைந்தவி எப்போதும் அட்ஜெஸ்ட் செய்து கொள்ளும் பெண் தான். ஆனால், ஜிவி அப்படி கிடையாது. இருந்தும் இவர்கள் இருவரும் திருமண வாழ்வில் பல இடங்களில் விட்டுக் கொடுத்து சென்றுள்ளனர். இனி என்னால் செய்ய எதுவும் இல்லை என்பதால், இந்த விவகாரத்தை இறைவனிடம் விட்டு விடுகிறேன். இனி இவர்கள் சேர வேண்டும் என பிரார்த்தனை செய்வது ஒன்றே வழி என அவர் கூறினார்.