Saindhavi gv Prakash: நடிகைகளுடன் படு நெருக்கம்.. ‘முதல்தடவை பார்த்தப்ப ரொம்ப கஷ்டமா போச்சு’ -சைந்தவி
Saindhavi gv Prakash: அவருக்கு நான் பல கண்டிஷன்களை போட்டேன். ஆனால் எந்த கண்டிஷனையும் அவர் பின்பற்றவில்லை. நான் அதுவரை வேறு பெண்ணுடன் அவர் நெருக்கமாக இருந்தெல்லாம் பார்த்ததில்லை. அப்போது, முதல் முறையாக அவர் டார்லிங் படத்தில் நடித்திருந்தார். - சைந்தவி
Saindhavi gv Prakash: ஜிவி பிரகாஷ்குமார் நடிகைகளுடன் மிகவும் நெருக்கமாக நடித்த காட்சியை பார்க்கும் போது, தான் மிகவும் வருத்தப்பட்டதாக சைந்தவி முன்னதாக இந்தியா கிளிட்ஸ் சேனலுக்கு கொடுத்த பேட்டியில் பேசி இருந்தார். அந்த பேட்டியை இங்கே பார்க்கலாம்.
கண்டிஷன்களை போட்டேன்:
இது குறித்து அவர் பேசும் போது, “ திரைப்படங்களில் நடிக்கப் போகிறேன் என்று அவர் சொன்னவுடன், அவருக்கு நான் பல கண்டிஷன்களை போட்டேன். ஆனால் எந்த கண்டிஷனையும் அவர் பின்பற்றவில்லை. நான் அதுவரை வேறு பெண்ணுடன் அவர் நெருக்கமாக இருந்தெல்லாம் பார்த்ததில்லை. அப்போது, முதல் முறையாக அவர் டார்லிங் படத்தில் நடித்திருந்தார்.
அந்த படத்தின் முதல் காட்சியை, நான் பார்க்கச் சென்று இருந்தேன். அந்த படத்தில் சில நெருக்கமான காட்சிகள் இடம் பெற்று இருந்தன. அதை முதல் முறை நான் பார்க்கும் பொழுது, எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. ஆனால், அந்த படம் அதை மறக்கடிக்கும் வகையில், மிகவும் பொழுது போக்காக, ரசிக்கும் வகையில் இருந்தது. அதன் பின்னர் ஒரு நடிகர் என்றால், இதெல்லாம் இயல்பாக இருக்கும்.
புரிந்து கொண்டேன்:
நடிகர்களுக்கும் கல்யாணம் முடிந்து இருக்கிறது. அவர்களுக்கும் வீட்டில் மனைவி இருக்கிறார்கள். அவர்களும் என்னைப் போன்றுதானே உணர்வார்கள் என்பதை புரிந்து கொண்டேன். ஆனால் தற்போது எனக்கு அது பழகி விட்டது. ஆனாலும் சில சமயங்களில், அவரை சில நடிகைகளுடன் நெருக்கமான காட்சிகளில் பார்க்கும் பொழுது, வருத்தமாகத்தான் இருக்கும்.
ஆனால், அவர் ஏற்று இருக்கும் தொழிலானது, அந்த வகையைச் சார்ந்தது. அதனால் அதற்கு நான் பழகிக் கொள்ள வேண்டும் என்று முடிவு எடுத்தேன். நடிப்பிற்காக அவர் பல விஷயங்களை செய்தார். நேரம் பார்க்காமல் வேலைகளை செய்து கொடுத்திருக்கிறார். குறிப்பாக பாலா இயக்கிய நாச்சியார் திரைப்படத்தில், அவர் அவரின் சௌகரியமான சூழ்நிலையை விட்டு வெளியே வந்து நடித்தார். அதனால் தான் அந்த படத்தில் அவரால் அப்படிப்பட்ட ஒரு நடிப்பை வெளிப்படுத்த முடிந்தது. அவர் நடிப்பிற்காக மிகவும் கடினமாக உழைக்கிறார்" என்று பேசினார்.
தாங்கள் பிரிவதாக கூறி ஜிவி பிரகாஷ்குமார் வெளியிட்ட அறிக்கை பின்வருமாறு:
இது குறித்து அவர்கள் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில், “ ஒருவருக்கொருவர் மேல் இருக்கும் பரஸ்பர மரியாதையை பேணுவதின் வாயிலாக, எங்களின் மன அமைதி மற்றும் முன்னேற்றத்திற்காக, நீண்ட யோசனைகளுக்கு பிறகு, 11 வருட திருமணவாழ்க்கையை முடித்துக்கொண்டு,
அவரவர் பாதைகளில் செல்ல முடிவெடுத்து இருக்கிறோம். எங்களது இந்த தனிப்பட்ட மாற்றத்தை ஊடகங்கள், ரசிகர்கள், நண்பர்கள் புரிந்துகொண்டு, எங்களது தனிப்பட்ட விவகாரத்திற்கு மதிப்பளிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.” என்று குறிப்பிட்டு இருந்தார்.
பொறுப்பு துறப்பு, இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பேட்டியில் பேசிய நபரின் தனிப்பட்ட கருத்துக்கள் ஆகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இந்த தகவல்களுக்கும் ஹிந்துஸ்தான் தமிழ் இணையதளத்திற்கும் சம்பந்தம் கிடையாது.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
டாபிக்ஸ்