Jayam Ravi: ‘எதுக்கெடுத்தாலும் சந்தேகம்.. மாமியார் கொடுத்த டார்ச்சர்..’ - ஜெயம் ரவி - ஆர்த்தி விவாகரத்து காரணம்?
Jayam Ravi: இது ஜெயம் ரவிக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. பொறுத்து, பொறுத்து பார்த்த அவர், இப்படி நாம் வாழ்வதற்கு ஆர்த்தியை விவாகரத்தே செய்து கொண்டு வாழ்ந்து விடலாம் என்று முடிவெடுத்து விட்டார். - விவாகரத்து காரணம்?
பிரபல நடிகரான ஜெயம்ரவி தன்னுடைய மனைவியான ஆர்த்தியை பிரிவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கும் நிலையில், இவர்களின் பிரிவுக்கான காரணம் குறித்து பிரபல பத்திரிகையாளரான சபிதா ஜோசப் கடந்த 2 மாதங்களுக்கு முன்பாக ஃபிலிம் ஃபிளிக் யூடியூப் சேனலுக்கு பேட்டிக்கொடுத்திருந்தார்.
அந்தப்பேட்டி இங்கே
இது குறித்து அதில் அவர் பேசும் போது, “ஜெயம் ரவியும், ஆர்த்தியும் கடந்த 2009ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள். அது காதல் திருமணம் என்றாலும், கடைசியில் பெற்றோர்களால் பார்த்து வைக்கப்பட்ட திருமணமாகவே அது மாறிப்போனது. ஜெயம் ரவி தரப்பில் இந்த கல்யாணத்தில் அவர்களுக்கு பெரிதாக விருப்பம் இல்லை. ஆனால் பெண் வீட்டார் தரப்பு, ரவியை நெருக்கிப்பிடித்து கைக்குள் போட்டுக் கொண்டு கல்யாணம் நடத்தி வைத்து விட்டார்கள்.
கலயாணம் முடிந்த பின்னர் அவர்கள் இருவரும் மிகவும் சந்தோஷமாகவே வாழ்ந்து வந்தார்கள். அவர்களுக்கிடையே நல்ல புரிதல் இருந்தது. அவர்களுக்கு இரண்டு மகன்களும் பிறந்தார்கள். முதல் மகன் கூட டிக் டிக் டிக் படத்தில் ஜெயம் ரவியுடன் இணைந்து நடித்திருந்தார்.
மாமியார் கொடுத்த டார்ச்சர்?
ஜெயம் ரவியின் மாமியார் அவரை வைத்து படங்கள் தயாரித்த நிலையில் ஜெயம்ரவி அவரது மாமியார் வீட்டில் இருந்தார். அவரை வைத்து அவர்கள் மூன்று படங்களை தயாரித்தனர். ஆனால், அதில் ஒரு படம் மட்டுமே நன்றாகச் சென்றது. அதில், ஜெயம் ரவியின் மீது அவரது மாமியார் வீட்டு தரப்பு, கொஞ்சம் மனஸ்தாபத்தில் இருந்ததாக சொல்லப்பட்டது.
ஒரு கட்டத்தில் ஜெயம் ரவிக்கான கதைத்தேர்வில் கூட அவர்களின் தலையீடு அதிகம் வந்து விட்டதாம். இது ரவியின் தொழிலை பாதிக்க ஆரம்பித்துவிட்டது. இது ஜெயம் ரவிக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. பொறுத்து, பொறுத்து பார்த்த அவர், இப்படி நாம் வாழ்வதற்கு ஆர்த்தியை விவாகரத்தே செய்து கொண்டு வாழ்ந்து விடலாம் என்று முடிவெடுத்து விட்டார். அதற்கான விண்ணப்பத்தையும் அவர் நீதிமன்றத்தில் கொடுத்துவிட்டார். ஆனால் ஆர்த்தி, ஜெயம் ரவியுடன் இணைந்து வாழ விருப்பப்படுவதாக தெரிவித்துக் கொண்டிருக்கிறார்.” என்று பேசினார்.
வலைப்பேச்சு அந்தணன்
இந்த விவாகரத்து குறித்து வலைப்பேச்சு அந்தணன் பேசும் போது, “ ”ஜெயம் ரவி தனது மாமியாரிடம் சம்பளம் கேட்பது ஒன்றும் பெரிய பிரச்சினை இல்லை. உண்மையில் ஜெயம் ரவி மீது ஆர்த்திக்கு எப்போதும் சந்தேகம். அதனால் ஆர்த்தி, ரவிக்கு எப்போதும் போன் செய்து கொண்டே இருக்கிறாராம்.
நேராக ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு விசிட்
ஜெயம் ரவி ரவி போனை எடுக்கவில்லை என்றால், உடனே ஒளிப்பதிவாளர், உதவி இயக்குனர் போன்ற ஒருவரைக் கூட விடமாட்டார். எல்லோரையும் அழைத்து ரவியைப் பற்றி விசாரிப்பார். ஒருவேளை யாரும் போனை எடுக்கவில்லை என்றால் நேராக ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்று விடுவார். அவுட்டோர் ஷூட்டிங் என்றால் கூட திடீரென்று அங்கேயே நின்றுவிடுவார்.
ஆர்த்திக்கு சந்தேகம்
ஜெயம் ரவியைத் தொடர்ந்து இது போல் செய்து வருவதால் இதை ஒரு கட்டத்திற்கு மேல் அவரால் தாங்க முடியவில்லை, அதனால் தான் பிரச்சினை ஆரம்பித்தது. ஜெயம் ரவி மேல் எப்போதுமே ஆர்த்திக்கு சந்தேகம் இருக்கிறது” என்று பேசினார்.
பொறுப்புத் துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
டாபிக்ஸ்