THE GOAT BOX OFFICE: இந்தியாவில் 3 நாட்களில் தி கோட் திரைப்படத்தின் பிரமிக்க வைக்கும் வசூல் - பலரை அரளவைத்த விஜய்-amazing box office collection of the goat in 3 days in india and do you know how much - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  The Goat Box Office: இந்தியாவில் 3 நாட்களில் தி கோட் திரைப்படத்தின் பிரமிக்க வைக்கும் வசூல் - பலரை அரளவைத்த விஜய்

THE GOAT BOX OFFICE: இந்தியாவில் 3 நாட்களில் தி கோட் திரைப்படத்தின் பிரமிக்க வைக்கும் வசூல் - பலரை அரளவைத்த விஜய்

Marimuthu M HT Tamil
Sep 08, 2024 11:03 AM IST

THE GOAT BOX OFFICE: இந்தியாவில் 3 நாட்களில் தி கோட் திரைப்படத்தின் பிரமிக்க வைக்கும் வசூல் கணக்கால், பலரை அரளவைத்த விஜய் குறித்துப் பார்ப்போம்.

THE GOAT BOX OFFICE: இந்தியாவில் 3 நாட்களில் தி கோட் திரைப்படத்தின் பிரமிக்க வைக்கும் வசூல் - பலரை அரளவைத்த விஜய்
THE GOAT BOX OFFICE: இந்தியாவில் 3 நாட்களில் தி கோட் திரைப்படத்தின் பிரமிக்க வைக்கும் வசூல் - பலரை அரளவைத்த விஜய்

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி ரிலீஸான திரைப்படம், தி கோட். அதாவது தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (The Greatest Of All Time) என்பதின் சுருக்கமே ‘ தி கோட்’. இது விஜய்யின் 68ஆவது படமாகும். இப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி செளத்ரி நடித்திருக்கிறார்.

தவிர, இந்தப் படத்தில் பிரசாத், பிரபுதேவா, மோகன், ஜெயராம், சினேகா, லைலா, அஜ்மல், வைபவ், பிரேம்ஜி அமரன், யுகேந்திரன் ஆகியோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தி கோட் தொழில்நுட்பக் குழுவினர் விவரம்:

இந்தப் படத்தின் மூலம் நடிகர் விஜய்யின் படத்துக்கு, பல ஆண்டுகளுக்குப் பின், யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். இப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் ரிலீஸாகியிருக்கிறது. இப்படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் சார்பாக, கல்பாத்தி அகோரம்,கல்பாத்தி கணேஷ், கல்பாத்தி சுரேஷ் என சகோதரர்கள் மூவர் இணைந்து தயாரிக்கின்றனர்.

‘’தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்'' படத்துக்கு உண்டான ஒளிப்பதிவினை சித்தார்த்தா நுனி புரிய, வெங்கட் ராஜின் என்பவர் எடிட் செய்கிறார். இப்படத்துக்குண்டான வசனத்தை விஜி மற்றும் வெங்கட் பிரபு ஆகிய இருவரும் இணைந்து எழுதியுள்ளனர்.

இப்படத்தில் கங்கை அமரன், மதன் கார்க்கி, கபிலன் வைரமுத்து, விவேக் ஆகிய நால்வர் சேர்ந்து, படத்துக்குண்டான பாடல்களை எழுதியுள்ளனர்.

தி கோட் படத்தின் கதை:

கென்யாவில் ரயிலில் கொண்டு செல்லப்படும் யுரேனியத்தையும், பயங்கவாதி ஓபரையும் பத்திரமாக கொண்டு வர Special Anti terrorist squad team சார்பில் காந்தி ( விஜய்), அஜய் (அஜ்மல்), சுனில் (பிரசாந்த்), கல்யாண் ( பிரபு தேவா) ஆகியோர் கொண்டு செல்ல ஆயுதங்களுடன் களமிறங்க, அந்த சண்டையில் ரயில் வெடித்து தீவிரவாதி மேனன் ( மோகன்) இறந்துவிடுவதாக காட்டப்படுகிறது.

இதற்கிடையே தாய்லாந்திற்கு மனைவி அனு ( சினேகா) உடன் செல்லும் காந்தி, தன்னுடைய மகனைப் பறி கொடுப்பதாக காட்டப்படுகிறது. ஆனால், பின்னாளில் அவனை காந்தி பிரச்சினை ஒன்றில் சந்திக்கிறார். அந்தப் பிரச்சினை என்ன? அதில் காந்திக்கு வில்லனாக மகன் மாறியது ஏன்? என்பது படத்தின் மீதிக்கதை.

தி கோட் திரைப்படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரம்

கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி ரிலீஸான நடிகர் விஜய்யின் ‘தி கோட்’ படம், ரிலீஸாகி மூன்று நாட்களிலேயே இந்தியாவில் ரூ.100 கோடியைத் தாண்டியுள்ளது.

தி கோட் திரைப்படம் ரிலீஸான முதல் நாள் ரூ.44 கோடி வசூல் செய்துள்ளது. அதன்படி, தமிழில் ரூ.39.15 கோடியும், இந்தியில் ரூ.1.85 கோடியும், தெலுங்கில் ரூ.3 கோடியும் என மொத்தமாக 44 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. இரண்டாவது நாளில் 25.5 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. குறிப்பாக, தமிழில் ரூ.22.75 கோடியும், இந்தியில் ரூ.1.4 கோடியும், தெலுங்கில் ரூ.1.35 கோடியும் வசூல் செய்துள்ளது.

மூன்றாவது நாளில், ரூ.33 கோடி வசூலித்து இருக்கிறது. அதன்படி தமிழில் ரூ.29.1 கோடியும், இந்தியில் ரூ. 2.15 கோடியும், தெலுங்கில் ரூ. 1.75 கோடியும் வசூலித்துள்ளது. இதன்மூலம் தி கோட் திரைப்படம் ரிலீஸாகி மூன்று நாட்களில் ரூ.102.5 கோடி வசூலித்துள்ளது. இன்னும் தமிழ்நாட்டிலும் பிறமாநிலங்களிலும் ஹவுஸ் ஃபுல் காட்சிகளாக ஓடி வருகிறது.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.