HBD Gangai Amaran: தமிழ் சினிமாவின் சகலகலா வல்லவன்..கலைத்துறை நாயகன் கங்கை அமரன்-76th birth anniversary of film personality gangai amaran is being celebrated today - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Hbd Gangai Amaran: தமிழ் சினிமாவின் சகலகலா வல்லவன்..கலைத்துறை நாயகன் கங்கை அமரன்

HBD Gangai Amaran: தமிழ் சினிமாவின் சகலகலா வல்லவன்..கலைத்துறை நாயகன் கங்கை அமரன்

Suriyakumar Jayabalan HT Tamil
Dec 08, 2023 05:10 AM IST

திரைத்துறை கலைஞர் கங்கை அமரனின் 76 வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.

கங்கை அமரன் பிறந்தநாள்
கங்கை அமரன் பிறந்தநாள்

இயக்குனர், பாடலாசிரியர், இசையமைப்பாளர், பாடகர், கதை ஆசிரியர் என சினிமாவில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கி வந்தார் கங்கை அமரன். 16 வயதினிலே திரைப்படத்தில் செந்தூரப்பூவே என்ற பாடலை எழுதியது இவர்தான். அப்படி ஒரு பூவே கிடையாது. செயற்கையாக ஒரு பூவை உருவாக்கி ஹிட் பாடலாக மாற்றியது இவர்தான்.

பல பாடல்களை இவர் எழுதி ஹிட் கொடுத்துள்ளார். கவியரசன் கண்ணதாசன் மீது ஈடுபாடு கொண்டு பாட்டு எழுத வந்ததாக அவரே கூறியுள்ளார். கரகாட்டக்காரன் என மிகப் பெரிய ஹிட் திரைப்படத்தை கொடுத்து பலரது வாழ்க்கைக்கு திருப்பு முனையாக இந்த திரைப்படத்தை மாற்றினார்.

திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் மிகப்பெரிய ஹிட் ஆனது. அதேபோல நகைச்சுவை காட்சிகள் அனைத்தும் இன்று வரை சரித்திர குறியீடாக மாறி உள்ளது. கே.எஸ்.ரவிக்குமார் எப்படி அவரது திரைப்படங்களில் ஒரு காட்சிக்காவது வந்து செல்வாரோ அதேபோல அவருக்கு முன்னரே கங்கை அமரன் அவரது திரைப்படங்களில் ஏதாவது ஒரு காட்சியில் வந்து செல்வார்.

தான் களமிறங்கும் துறையில் சிறப்பாக செயல்படுவது இவருடைய வழக்கம். சினிமா மட்டுமல்லாது ரியல் வாழ்க்கையிலும் அவ்வப்போது தனது கெட்டப்பை மாற்றிக் கொண்டே இருப்பார் கங்கை அமரன்.

கமல்ஹாசன் நடித்த மிகப்பெரிய வெற்றிப்படமாக திகழ்ந்த வாழ்வே மாயம் திரைப்படத்திற்கு இவர் தான் இசையமைத்துள்ளார் என்று சொன்னால் பலரும் நம்ப மாட்டார்கள். அதேபோல பிள்ளைக்காக, ஜீவா, சின்னத்தம்பி பெரியதம்பி என பல படங்களுக்கு இவர் இசையமைத்துள்ளார்.

இசையமைப்பாளர் இளையராஜாவின் தம்பி என்கின்ற காரணத்தினால் இவர் இசையமைத்த பல படங்கள் இளையராஜா தான் இசையமைத்தார் என பலரும் நம்பியுள்ளனர். இளையராஜா இசையில் மட்டும் பயணம் செய்தார். ஆனால் சினிமாவில் கங்கை அமரன் பயணம் செய்யாத துறையே கிடையாது. அந்த அளவிற்கு சினிமா மீது ஈடுபாடு அதிகம் கொண்ட மனிதர் கங்கை அமரன்.

பொன் மானை தேடி நானும் பூவோடு வந்தேன் என்ற பாடலை இசை அமைத்தது கங்கை அமரன் தான். பலருக்கும் இது ஆச்சரியமான விஷயமாக இருக்கும். இதுபோன்ற பல சாதனைகளை படைத்துள்ளார் கங்கை அமரன். தற்போது வெற்றி இயக்குனர்களில் ஒருவராக இருக்கக்கூடிய வெங்கட் பிரபு மற்றும் நகைச்சுவை நடிகராக திகழ்ந்து வருகிறார் பிரேம்ஜி அமரன் இருவரும் இவருடைய பிள்ளைகள்.

சகலகலா வல்லவனாக விளங்கக்கூடிய கங்கை அமரனின் 76 வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. தமிழ் சினிமா இருக்கும் வரை கங்கை அமரனின் தாக்கமும் கட்டாயம் இருக்கும் என்று கூறினால் அது மிகையாகாது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.