Revathi: வாலிபரின் நிர்வாண புகைப்படம் வந்தது உண்மையா.. இயக்குநர் ரஞ்சித் பற்றி நடிகை ரேவதி சொல்வது என்ன?-director ranjith did not send me any nude pictures says actress revathi to allegation - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Revathi: வாலிபரின் நிர்வாண புகைப்படம் வந்தது உண்மையா.. இயக்குநர் ரஞ்சித் பற்றி நடிகை ரேவதி சொல்வது என்ன?

Revathi: வாலிபரின் நிர்வாண புகைப்படம் வந்தது உண்மையா.. இயக்குநர் ரஞ்சித் பற்றி நடிகை ரேவதி சொல்வது என்ன?

Aarthi Balaji HT Tamil
Sep 01, 2024 08:46 AM IST

Revathi: நடிகை ரேவதிக்கு, இயக்குநர் ரஞ்சித் தனது நிர்வாண படங்களை அனுப்பியதாக அந்த இளைஞரின் குற்றச்சாட்டு இருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக தன்னைப் பற்றிய செய்திகளுக்கும், அந்த இளைஞனின் குற்றச்சாட்டுக்கும் நடிகை ரேவதி பதிலளித்தார்.

Revathi: வாலிபரின் நிர்வாண புகைப்படம் வந்தது உண்மையா.. இயக்குநர் ரஞ்சித் பற்றி நடிகை ரேவதி சொல்வது என்ன?
Revathi: வாலிபரின் நிர்வாண புகைப்படம் வந்தது உண்மையா.. இயக்குநர் ரஞ்சித் பற்றி நடிகை ரேவதி சொல்வது என்ன?

நடிகை ரேவதிக்கு, இயக்குநர் ரஞ்சித் தனது நிர்வாண படங்களை அனுப்பியதாக அந்த இளைஞரின் குற்றச்சாட்டு இருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக தன்னைப் பற்றிய செய்திகளுக்கும், அந்த இளைஞனின் குற்றச்சாட்டுக்கும் டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு அளித்த பதிலின் மூலம் நடிகை ரேவதி பதிலளித்தார்.

ரேவதி பேட்டி

அவர் கூறுகையில், “ என்னையும், இயக்குநர் ரஞ்சித்தையும் தொடர்புபடுத்தி வரும் செய்திகள் குறித்து நான் கேள்விப்பட்டேன்.

ஆனால் அப்படி எந்த போட்டோக்களையும் ரஞ்சித் எனக்கு அனுப்பி வைக்கவில்லை. எனவே இது தொடர்பாக நான் எந்த கருத்தையும் தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை " என்றார். 

ரஞ்சித் மீது புகார்

கேரளா மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர், 2012 ஆம் ஆண்டில் பெங்களூருவில் இருந்த போது, ​​ரஞ்சித் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும், ஆடைகளை அவிழ்க்க வற்புறுத்தி தனது புகைப்படங்களை எடுத்து ரேவதிக்கு அனுப்பியதாகவும் கூறினார். இயக்குனரின் ஹோட்டல் அறைக்குள் நுழைந்தபோது, ​​ரஞ்சித் ஒரு நடிகையுடன் பேசிக் கொண்டிருந்ததாகவும், புகைப்படங்கள் யாருக்கு அனுப்பப்படுகின்றன என்று கேட்டதற்கு, ரஞ்சித் ரேவதிக்கு அனுப்புவதாக தெரிவித்தார்.

ரஞ்சித்துக்கும், ரேவதிக்கும் இடையே தொடர்பு இருக்கிறதா?

குடிபோதையில் ரஞ்சித் தன்னை துன்புறுத்தியதாக அந்த வாலிபர் டிஜிபியிடம் அளித்த புகாரில், “ரஞ்சித் என்னை நிர்வாணமாக நிற்கச் சொன்னபோது, ​​அவர் ஒரு நடிகையிடம் பேசிக்கொண்டிருந்தார். அந்த நடிகை ரேவதி. ரஞ்சித்துக்கும், ரேவதிக்கும் இடையே ஏதாவது தொடர்பு இருக்கிறதா என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் ரஞ்சித் எனது புகைப்படங்களை எடுத்து அவளுக்கு அனுப்பினார்.

ரேவதிக்கு அனுப்பப்பட்ட புகைப்படங்கள்!?

புகைப்படங்கள் யாருக்கு அனுப்பப்படுகின்றன என்று நான் கேட்ட போது, ​​​​ரஞ்சித் அவை ரேவதிக்கு அனுப்பப்பட்டதாகக் கூறினார். ' பவுட்டியுடே நாமத்தில் ' படத்தின் லொகேஷன் பேக்-அப்பின் போது நடந்த சம்பவம் இது. படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா அல்லது அது தொடர்பான வேறு ஏதேனும் நிகழ்வு தொடர்பாக இயக்குநர் அங்கு இருந்தார்" என்று அந்த இளைஞன் கூறினார்.

இந்த சம்பவத்தால் தான் அதிர்ச்சியடைந்து போனதாகவும், ஹேமா கமிட்டி அறிக்கை வெளியான பிறகு தைரியமாக முன் வர முடிவு செய்ததாகவும் அந்த நபர் கூறினார்.

முன்னதாக, பெங்காலி நடிகை ஸ்ரீலேகா மித்ரா 2009 ஆம் ஆண்டு திரைப்படத்திற்கான தணிக்கையின் போது இயக்குநர் ரஞ்சித், மீது பாலியல் தகாத நடத்தை குற்றம் சாட்டி புகார் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி: டைம்ஸ் ஆஃப் இந்தியா

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.