இண்டெர்நெட்டை வசமாக்கிய லக்கி பாஸ்கர்.. ரிப்பீட் மோடில் உலா வரும் வசனங்கள்.. உங்க ஃபேவரைட் எது?
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  இண்டெர்நெட்டை வசமாக்கிய லக்கி பாஸ்கர்.. ரிப்பீட் மோடில் உலா வரும் வசனங்கள்.. உங்க ஃபேவரைட் எது?

இண்டெர்நெட்டை வசமாக்கிய லக்கி பாஸ்கர்.. ரிப்பீட் மோடில் உலா வரும் வசனங்கள்.. உங்க ஃபேவரைட் எது?

Malavica Natarajan HT Tamil
Dec 11, 2024 01:45 PM IST

லக்கி பாஸ்கர் திரைப்படம் ஓடிடியில் வெளியான பின், அப்படத்தின் வசனங்கள் பல இண்டெர் நெட் முழுவதும் ஆட்சி செய்து கொண்டிருக்கிறது.

இண்டெர்நெட்டை வசமாக்கிய லக்கி பாஸ்கர்.. ரிப்பீட் மோடில் உலா வரும் வசனங்கள்.. உங்க ஃபேவரைட் எது?
இண்டெர்நெட்டை வசமாக்கிய லக்கி பாஸ்கர்.. ரிப்பீட் மோடில் உலா வரும் வசனங்கள்.. உங்க ஃபேவரைட் எது?

ட்ரெண்டிங் வசனங்கள்

அதுமட்டுமின்றி, தற்போது லக்கி பாஸ்கர் திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் செய்யப்பட்ட நாளில் இருந்தே ட்ரெண்டிங்கில் இருக்கிறது.

ஒரு நடுத்தர வர்க்க பின்னணி கொண்டவர்கள் குடும்பத்திற்காக ரிஸ்க் எடுத்தால் என்ன ஆகும் என்பதை பல த்ரில்லிங்கான காட்சிகளுடனும் வசனத்துடனும் வெளிப்படுத்தியதால் இந்தப் படம் வெளியாகி இத்தனை நாள் ஆகியும் அதன் மவுசு குறையாமல் இருக்கிறது.

உத்வேகம் அளிக்கும் வசனங்கள்

குறிப்பாக இந்தப் படத்தில் வரும் பெரும்பாலான வசனங்கள் இளைஞர்களுக்கு உத்வேகம் அளிக்கும் வகையில், எதார்த்தத்தை முகத்தில் அரைந்தார் போலவும் வெளிப்படுத்துவதால் இணையத்தில் எந்த பக்கம் திரும்பினாலும் லக்கி பாஸ்கர் படத்தின் டயலாக்குகள் நம்மை சுற்றி சுற்றி வருகின்றன.

அப்படி இணையத்தில் அதிகம் உலா வந்த வசனங்கள் சிலவற்றை இங்கு பார்க்கலாம்.

டயலாக் 1

இந்த சமுத்திரத்தில் இருக்கும் நிம்மதி மக்கள் கிட்ட இருக்காது. அதுனால தான் எல்லாத்துக்கும் ஓடிட்டே இருக்காங்க. காரணம் பணம்.

டயலாக் 2

கனவு காணவே பயப்படுற கண்களுக்கு அதை எப்படி நினைவாக்கனும்ன்னு கத்துக் கொடுத்தவரு.

டயலாக் 3

நான் எவ்ளோ தான் கஷ்டத்துல இருந்தாலும்.. பார்டர் லைன்ல வாழ்ந்துட்டு இருந்தாலும்.. அவங்க வீட்ல இருக்கவங்களுக்கு என்ன சுத்தமா பிடிக்கலன்னாலும்.. நான் தான் வேணும்ன்னு என்ன கட்டிகிட்ட சுமதி

டயலாக் 4

வெல்கம் டூ பம்பாய்.. இந்தியாவின் பணத் தலைநகரம்

டயலாக் 5

ஒரு நாளில் அரை மணி நேரம் நான் விரும்பியபடி நடக்கவில்லை, ஆனால் நாள் முழுவதும் அதற்காக நான் வருத்தப்பட வேண்டுமா?

டயலாக் 6

சேர்ந்து நடக்கப் போறோம்.. இருட்டுல நடக்க விட்றாதிங்க சார்..

டயலாக் 7

இப்படித்தான் தோன்றுகிறது.. குடும்பத்திற்காக எவ்வளவுதான் ரிஸ்க் எடுத்தாலும் தவறில்லை.

டயலாக் 8

கால் விரல் நகம் முதல் தலை வரை, உங்களுக்கு என்ன வேண்டுமோ அதை வாங்கிக் கொள்ளுங்கள்.. நான் இவ்வளவு சம்பாதித்துள்ளேன், அதையும் எடுத்துக் கொள்ளுங்கள், கவுண்டர் காலியாக இருக்க வேண்டும்.

டயலாக் 9

இதுதான் இந்தியா.. உங்களுக்கு ஒரு பொருள் வேண்டுமென்றால் அதை பணத்தால் வாங்க வேண்டும்.. மரியாதை செய்ய வேண்டுமென்றால் பணம் உடலில் தோன்ற வேண்டும்.

டயலாக் 10

மிடில் கிளாஸ் மேன்டாலிட்டி சார்.. கஷ்டமாக இருந்தா செலவுகளை குறச்சி ரூபாவ மிச்சப்படுத்துவோம். அதுவே யோசிச்சிட்டா ஒரு ரூபாய் கூட மிச்சமில்லாமல் செலவழிப்போம் சார்.

டயலாக் 11

சிகரெட், மது, போதை மருந்துகளின் கிக்கை விட பணம் கொடுக்கும் கிக் அதிகம்.

டயலாக் 12

என்னை அவமானப்படுத்தியவனுக்கு வணக்கம் சொல்றேன்..

டயலாக் 13

நகை வாங்க மட்டுமில்ல, அவரோட பெருமையை வாங்கவும் போனேன் சார்.

டயலாக் 14

பணம் ஒரு மரியாதை..

டயலாக் 15

பேச்சுல இவ்ளோ ஆணவம்.. ஆணவம் இல்ல தைரியம்.. பிஹேவியர்ல இவ்ளோ திமிரு.. திமிரு இல்ல துணிச்சல்

டயலாக் 16

ஒன்றும் கெட்டவன் இல்லை.. நான் பணக்காரன்.. பணம் இருக்கவன இந்த உலகம் எப்பவும் கெட்டவனாகத் தான் பார்க்கும்

டயலாக் 17

நீ சூதாட்டத்தில் எவ்வளவு நன்றாக விளையாடினாய் என்பது முக்கியமல்ல.. எப்போது நிறுத்துகிறீர்கள் என்பதுதான் முக்கியம்.

டயலாக் 18

அவர் ஒரு சாதாரண மனிதர்.. அவரால் அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்து நிம்மதியாக தூங்க முடியும்.

டயலாக் 19

கடவுள் ரெட் சிக்னல் கொடுத்திருக்கிறார்.. எல்லாவற்றையும் நிறுத்த வேண்டும் என்று அர்த்தம்..

டயலாக் 20

ஆண்டவன் தலைகணத்துல ஆடும் போதெல்லாம் தலையில ஓங்கி ஒரு அடி அடிப்பான் சார்..

லக்கி பாஸ்கரின் படத்தை பார்த்த ரசிகர்களும், நெட்டிசன்களும் ஒவ்வொரு வசனமும் வாழ்க்கையை ஊக்குவிக்கும் ஒரு மோட்டிவேஷன் மேற்கோள் போன்று உள்ளதாக கூறுகிறார்கள். துல்கர் சல்மான் நடிப்பில் உருவான லக்கி பாஸ்கர் திரைப்படம் ரூ.30 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டு உலகம் முழுவதும் ரூ.107 முதல் ரூ.111.15 கோடி வரை வசூல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.