அஜித் வேற லெவல் ஆக்டிங்..விஜய் கேங்ஸ்டர் படம்! தீபாவளிக்கு வந்து 100 நாள் ஓடிய 4 சினிமா - தமிழில் இன்று வெளியான படங்கள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  அஜித் வேற லெவல் ஆக்டிங்..விஜய் கேங்ஸ்டர் படம்! தீபாவளிக்கு வந்து 100 நாள் ஓடிய 4 சினிமா - தமிழில் இன்று வெளியான படங்கள்

அஜித் வேற லெவல் ஆக்டிங்..விஜய் கேங்ஸ்டர் படம்! தீபாவளிக்கு வந்து 100 நாள் ஓடிய 4 சினிமா - தமிழில் இன்று வெளியான படங்கள்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Published Nov 04, 2024 11:00 AM IST

அஜித் வேற லெவல் ஆக்டிங், விஜய் கேங்ஸ்டர் படம், தீபாவளிக்கு வந்து 100 நாள் ஓடிய 4 சினிமாக்கள் என தமிழில் இன்று வெளியான படங்கள் லிஸ்டை பார்க்கலாம்.

அஜித் வேற லெவல் ஆக்டிங்..விஜய் கேங்ஸ்டர் படம்! தீபாவளிக்கு வந்து 100 நாள் ஓடிய 4 சினிமா - தமிழில் இன்று வெளியான படங்கள்
அஜித் வேற லெவல் ஆக்டிங்..விஜய் கேங்ஸ்டர் படம்! தீபாவளிக்கு வந்து 100 நாள் ஓடிய 4 சினிமா - தமிழில் இன்று வெளியான படங்கள்

வெள்ளை ரோஜா

மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான போஸ்ட் மார்டம் என்ற படத்தின் ரீமேக் தான் வெள்ளை ரோஜா. fஇயக்குநர் ஏ. ஜெகநாதன் இயக்கியிருக்கும் இந்த படத்தில் சிவாஜி கணேசன், பிரபு, அம்பிகா, ராதா பிரதான கதாபாத்திரங்களில் நடித்திருப்பார்கள். சர்ச் ஃபாதராக சிவாஜி கணேசன் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். கொலை அதன் பின்னணியில் இருக்கும் திடுக்கிடும் சஸ்பென்ஸை மையமாக வைத்து படத்தின் கதை அமைந்திருக்கும். இளையராஜா இசையில் தேவனின் கோயிலிலே, ஓ மானே மானே போன்ற பாடல்கள் சூப்பர் ஹிட்டாகி இன்று வரையிலும் பலரால் ரசிக்கப்படுகிறது. 1983 தீபாவளிக்கு ரிலீசாக வந்து 100 நாள்களுக்கு மேல் ஓடி ஹிட்டான இந்த படம் வெளியாகி 41 ஆண்டுகள் ஆகிறது.

தூங்காதே தம்பி தூங்காதே

கமல்ஹாசன் இரட்டை வேடங்களில் நடிக்க எஸ்.பி. முத்துராமன் இயக்கத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டடித்த படம் தூங்காதே தம்பி தூங்காதே. ராதா, சுலக்சனா என இரண்டு ஹீரோயின்கல் நடித்திருப்பார்கள். கே.ஏ. தங்கவேலு, கவுண்டமணி, ஜனகராஜ், வினு சக்கரவர்த்தி உள்பட பலர் நடித்து பேமிி ட்ராமா மசாலா படமாக ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இளையராஜா இசையில் நானாக நானில்லை தாயே என்ற அம்மா பாடல் கமலுக்கான தாய் செண்டிமென்ட் பாடலாக அனைவராலும் இன்று ரசிக்கப்பட்டு வருகிறது. 1983 தீபாவளி ரிலீஸ் படமான தூங்காதே தம்பி தூங்காதே வெளியாகி 41 ஆண்டுகள் ஆகிறது

தங்கைக்கோர் கீதம்

டி. ராஜேந்தர் இயக்கி, இசையமைத்து, நடித்த தங்கை செண்டிமென்ட் படமான தங்கைக்கோர் கீதம் பட்டிதொட்டியெங்கும் ரசிகர்களை கவர்ந்து சூப்பர் ஹிட்டானது. படத்தின் டி. ராஜேந்தருடன், சிவக்குமார், ஆனந்த் பாபு, நளினி, சத்யராஜ், செந்தாமரை பிரதான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். ஆனந்த் பாபு இந்த படத்தில் தான் நடிகராக அறிமுகமானார். டிஆரின் தட்டிப்பார்த்தேன் கொட்டாங்குச்சி என்ற பேமஸ் இந்த படத்தில் தான் இடம்பிடித்துள்ளது. 1983 தீபாவளி ரிலீஸில் ஹிட்டடித்த படங்களில் ஒன்றாக உள்ளது.

தங்கமகன்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பூர்னிமா, ஜெய்ஷங்கர், தேங்காய் சீனிவாசன், சில்க் ஸ்மிதா வி.கே. ராமசாமி உள்பட

பலர் நடித்து ஆக்‌ஷன் படமாக அமைந்திருக்கும் தங்கமகன் படத்தை ஏ. ஜெகநாதன் இயக்கியுள்ளார். 1983 தீபாவளி ரிலீஸ்களில் ஜெகநாதன் இயக்கிய மற்றொரு படமாக தங்கமகன் வெளியானது. இவரது இரண்டு படங்களும் ஹிட்டடித்து சிறப்பான விஷயமாக அமைந்தது. இளையராஜா இசையில் அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட்டானது. இந்த படத்தில் இடம்பெறும் வா வா பக்கம் வா பாடல் தான் தற்போது ரஜினி நடிப்பில் உருவாகி வரும் கூலி படத்தின் டீஸரில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

வில்லன்

கே.எஸ். ரவிக்குமார் - அஜித்குமார் முதல் முறையாக கூட்டணி அமைத்து 2002 தீபாவளி வெளியீடாக வந்த வில்லன் படம் சூப்பர் ஹட்டானது. இரட்டை வேடங்களில் அஜித் நடித்திருக்கும் இந்த படத்தில் மீனா, கிரண் கதாநாயகிகளாக நடித்திருப்பார்கள். சுஜாதா, ரமேஷ் கண்ணா, கருணாஸ், விஜய குமார், பெப்சி விஜயன், நிழல்கள் ரவி உள்பட பலரும் நடித்திருப்பார்கள். அண்ணன், தம்பியாக ஆக்‌ஷன், செண்டிமென்ட், ரெமான்ஸ் என வேற வெலவல் நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். வித்யாசாகர் இசையில் படத்தின் அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட்டாகின. தமிழ்நாடு அரசின் சிறந்த படம், சிறந்த வசனங்களுக்கான விருதை பெற்ற இந்த படம் லஞ்சத்தால் ஏற்படும் விளைவுகளை சொன்ன தமிழ் படங்களில் முக்கியமான படமாக இருந்து வருகிறது.

ரமணா

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் கேப்டன் விஜயகாந்த் நடித்து கல்ட் கிளாசிக் படமாக இருக்கும் ரமணா வெளியாகி இன்றுடன் 22 ஆண்டுகள் ஆகிறது. புரொபோசராக வரும் விஜயகாந்த் அவரது நடிப்பு, வசனங்கள் என அனைத்தும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன. சிம்ரன், ஆஷிமா பல்லா என இரண்டு நாயகிகள் நடித்திருப்பார்கள். யுகி சேது, விஜயன் உள்பட பலரும் நடித்திருப்பார்கள்.

பகவதி

விஜய் நடிப்பில் கேங்ஸ்டர் ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக 2002 தீபாவளி ரிலீசாக வந்த பகவதி படத்தை ஏ. வெங்கடேஷ் இயக்கியுள்ளார். ரீமாசென் ஹீரோயினாக நடித்திருப்பார். வடிவேலு, ஆஷிஷ் வித்யார்த்தி, ஜெய், பொன்னம்பலம் உள்பட பலர் நடித்திருக்கும் இந்த படம் சராசரி ஹிட் படமாக அமைந்தது. தேவா இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டாகின.

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.