41 Years of Uyirullavarai Usha: காதலிக்காக எடுக்கப்பட்ட படம்..! நடிக்க மறுத்த ரஜினி - ஹீரோவாக உருவெடுத்த டி. ராஜேந்தர்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  41 Years Of Uyirullavarai Usha: காதலிக்காக எடுக்கப்பட்ட படம்..! நடிக்க மறுத்த ரஜினி - ஹீரோவாக உருவெடுத்த டி. ராஜேந்தர்

41 Years of Uyirullavarai Usha: காதலிக்காக எடுக்கப்பட்ட படம்..! நடிக்க மறுத்த ரஜினி - ஹீரோவாக உருவெடுத்த டி. ராஜேந்தர்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Mar 04, 2024 06:30 AM IST

ரஜினிக்காக சொன்ன கதையில் அவர் நடிக்க மறுக்கவே, பின்னர் தானே ஹீரோவாக டி. ராஜேந்தர் நடித்த படம்தான் உயிருள்ளவரை உஷா.

உயிருள்ளவரை உஷா திரைப்படம்
உயிருள்ளவரை உஷா திரைப்படம்

வழக்கமான தனது படங்களில் இயக்கம், எழு்த்து பணிகள் மட்டுமில்லாமல் ஒளிப்பதிவு, எடிட்டிங், இசை, பாடல்கள் உள்பட இதர பொறுப்புகளை ஏற்று செய்து வந்த டி. ராஜேந்தர், இந்த படத்தில் பிரதான கதாபாத்திரத்தில் நடிப்பிலும் பட்டையை கிளப்பினார்.

அதுவரை தமிழ் சினிமாவில் ஹீரோவுக்கான இருந்த இலக்கணங்களை உடைத்தெறியும் விதமாக தாடியுடன் கூடிய லுக்கும், வித்தியாசமான பாடி லாங்குவேஜ் உடன் கூடிய நடிப்பையும் வெளிப்படுத்தி டி.ராஜேந்தர் ஸ்டைலை தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தினார்.

உயிருள்ள வரை உஷா படம் தான் டி. ராஜேந்தர், தஞ்சை சினி ஆர்ட்ஸ் என்கிற பெயரில் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி முதல் முறையாக தயாரித்த படமாகவும் அமைந்தது. தனது காதலியின் பெயரையே படத்தின் டைட்டிலாக வைத்து டி. ராஜேந்தர் எடுத்திருந்த இந்த படத்தில் நடிகர் கங்கா, நளினி ஆகியோர் தமிழ் சினிமாவில் அறிமுகங்களாக தோன்றினர். அதேபோல் பிரமாண்ட செட் அமைப்பதில் டி.ஆர்., தனித்துவமானவர் என்கிற ஃபார்முலா தொடங்கியதும் இந்த படத்தில் தான்.

இந்த படத்தின் கதையை ரஜினியை மனதில் வைத்து டி. ராஜேந்தர் உருவாக்கியிருந்தாக கூறப்படும் நிலையில் அவர் நடிக்காமல் முடியாமல் போயுள்ளது. தனது காதலியின் நினைவாக எடுக்க நினைத்த படத்தில் வேறு ஹீரோவை நடிக்க வைப்பதற்கு பதிலாக தானே ஹீரோவாக தோன்றி சிறப்பான நடிப்பின் மூலம ரசிகர்களை கவர்ந்தார்.

படத்துக்கு டி.ராஜேந்தர் தான் பாடல் எழுதி இசையமைத்தார். மேகம் வந்து தாகம், இந்திரலோகத்து சுந்தரி, கட் அடிப்போம் போன்ற பாடல்கள் அந்த கால இளசுகளை தாளம் போட வைத்தது. பாடகர் கே.ஜே. யேசுதாஸ் குரலில் வைகை கரை காற்றே நில்லு பாடல் காலத்தால் அழியாத மெலடியாக நிலைத்து நிற்கிறது.

படம் முடிந்து ரிலீசாவதில் பல்வேறு சிரமங்களை சந்தித்த போதிலும், வெளியான பின்னர் சூப்பர் டூப்பர் ஹிட்டாகி பாக்ஸ் ஆபிஸில் வசூலை குவித்தது. தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்ட இந்த படம் அங்கும் ஹிட்டானது.

இதன் பின்னர் கன்னடம், இந்தி மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. 1980களில் வெளியாகி, தற்போது கல்ட் கிளாசிக் காதல் திரைப்படமாக மாறியிருக்கும் உயிருள்ள வரை உஷா வெளியாகி இன்றுடன் 41 ஆண்டுகள் ஆகிறது. இந்த உலகில் கடைசி உயிர் இருக்கும் வரை, உயிருள்ள வரை உஷா என்கிற காவியம் இருந்து கொண்டே தான் இருக்கும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.