Teachers Movies in OTT: விஜயகாந்தின் ரமணா..ரஜினி, கமல், விஜய், தனுஷ் ஆசிரியர்களாக கலக்கிய படங்களின் ஓடிடி லிஸ்ட் இதோ-list of movies in your favorite movies that tamil top heroes acted as teachers - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Teachers Movies In Ott: விஜயகாந்தின் ரமணா..ரஜினி, கமல், விஜய், தனுஷ் ஆசிரியர்களாக கலக்கிய படங்களின் ஓடிடி லிஸ்ட் இதோ

Teachers Movies in OTT: விஜயகாந்தின் ரமணா..ரஜினி, கமல், விஜய், தனுஷ் ஆசிரியர்களாக கலக்கிய படங்களின் ஓடிடி லிஸ்ட் இதோ

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Sep 05, 2024 10:28 AM IST

Teachers Movies in OTT: விஜயகாந்தின் ரமணா, சூப்பர்ஸடார் ரஜினிகாந்த், உலகநாயகன் கமல்ஹாசன் தொடங்கி தனுஷ் வரை ஆசிரியர்களாக நடித்து ஹிட்டான படங்கள் எந்தெந்த ஓடிடியில் இருக்கிறது என்பதை பார்க்கலாம்.

Teachers Movies in OTT: விஜயகாந்தின் ரமணா..ரஜினி, கமல், விஜய், தனுஷ் ஆசிரியர்களாக கலக்கிய படங்களின் ஓடிடி லிஸ்ட் இதோ
Teachers Movies in OTT: விஜயகாந்தின் ரமணா..ரஜினி, கமல், விஜய், தனுஷ் ஆசிரியர்களாக கலக்கிய படங்களின் ஓடிடி லிஸ்ட் இதோ

தமிழ் சினிமாவிலும் முன்னணி ஹீரோக்கள் பலர் ஆசிரியர்களாக தோன்றி நடிப்பில் முத்திரை பதித்துள்ளனர். அந்த வகையில் தமிழ் சினிமா ஹீரோக்கள் ஆசிரியர்களாக நடித்து, பிரபல ஓடிடி தளங்களில் இடம்பிடித்திருக்கும் படங்கள் எவை என்பதை பார்க்கலாம்

தர்மத்தின் தலைவன்

எஸ்.பி. முத்துராமன் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், பிரபு உள்ளிட்டோர் நடித்த படம் தர்மத்தின் தலைவன். 1988இல் வெளியான இந்த படத்தில் இரண்டு கதாபாத்திரங்களில் தோன்றும் ரஜினிகாந்த், ஒரு கேரக்டரில் கல்லூரி பேராசியராக வருவார். கதர் வேஷ்டி சட்டை அணிந்து காமெடி, கலகலப்புடன், மாணவர்களை நல்வழிப்படுத்தும் பேராசிரியராக தோன்றியிருப்பார். ரசிகர்கள் கவர்ந்து சூப்பர் ஹிட்டான இந்த படம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் உள்ளது.

நம்மவர்

உலகநாயகன் கமல்ஹாசன் கல்லூரி பேராசிரியாக தோன்றி போதை பழக்கத்துக்கு அடிமையாக இருக்கும் மாணவர்கள் நல்வழிப்படுத்தும் படம் நம்மவர். கே.எஸ். சேதுமாதவன் இயக்கிய இந்த படத்தில் நாகேஷ், கெளதமி, கரண் உள்ளிட்ட பலரும் நடித்திருப்பார்கள். ரசிகர்களை கவர்ந்து சூப்பர் ஹிட்டான இந்த படம் ராஜ் டிஜிட்டல் டிவி ஓடிடியில் உள்ளது

ரமணா

விஜயகாந்த் நடித்து ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் 2002இல் வெளியான படம் ரமணா. படத்தில் கல்லூரி புரொபசராக சில காட்சிகளில் தோன்றிலும் ரசிகர்கள் மனதில் பதிந்துவிடும் விதமாக நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். ரமணா அவர் உருவாக்கிய ஏசிஎஃப் காட்சிகள் ரசிகர்களால் அவ்வளவு எளிதில் மறக்க முடியாதவையாக இருந்து வருகின்றன. விஜயகாந்துக்கு சூப்பர் ஹிட்டாக அமைந்த இந்த படம் சிம்ப்ளிசெளத், எம்எக்ஸ் பிளேயர் ஓடிடியில் உள்ளது

மாஸ்டர்

தளபதி விஜய் - லோகேஷ் கனகராஜ் முதல் முறையாக கூட்டணி அமைத்து வெளியான படம் மாஸ்டர். படத்தில் கல்லூரி புரொபசராகவும், இரண்டாம் பகுதியில் சிறுவர் சீர்திருத்த பள்ளி ஆசிரியராகவும் நடிப்பில் பின்னி பெடல் எடுத்திருப்பார் விஜய். விஜய் ரசிகர்களை மட்டுமின்றி அனைத்து தரப்பினரையும் வெகுவாக கவர்ந்த இந்த படம் அமேசான் ப்ரைம் ஓடிடியில் இடம்பிடித்துள்ளது

முந்தானை முடிச்சு

பாக்யராஜ் இயக்கி நடித்து 1983இல் வெளியான படம் முந்தானை முடிச்சு. ஊர்வசி கதாநாயகியாக நடித்திருக்கும் இந்த படத்தில் பாக்யாராஜ் கிராமத்து பள்ளியின் ஆசிரியராக நடித்திருப்பார். ரசிகர்களை கவர்ந்து சூப்பர் ஹிட்டான இந்த படம் அமேசான் ப்ரைமில் உள்ளது.

வாகைசூடவா

சற்குணம் இயக்கத்தில் விமல் நடித்து ரிலீசின் போது பெரிதாக கண்டுகொள்ளப்படாமல் பின்னர் கொண்டாடப்படும் படமாக மாறியது வாகைசூடவா. இனியா, பொன் வண்ணன், அருள்தாஸ், தம்பி ராமையா, அழகம் பெருமாள், சூரி என பலர் நடித்திருக்கும் இந்த படத்தில் பள்ளி ஆசிரியராக தோன்றியிருப்பார் விமல். சிறந்த படத்துக்கான தேசிய விருதை வாங்கிய வாகைசூடவா திரைப்படம் சன்நெக்ட் ஓடிடி தளத்தில் உள்ளது.

ராட்சசி

ஜோதிகா நடிப்பில் கெளதம்ராஜ் இயக்கத்தில் 2019இல் வெளியான படம் ராட்சசி. அரசு பள்ளியின் கண்டிப்பு மிக்க தலைமையாசிரியர் வேடத்தில் மிரட்டலான நடிப்பை ஜோதிகா வெளிப்படுத்தியிருப்பார். விமர்சக ரீதியாக பாராட்டை பெற்ற இந்த படம் அமேசான் ப்ரைம் ஓடிடியில் உள்ளது

வாத்தி

தனுஷ் நடிப்பில் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் வெளியான படம் வாத்தி. படத்தில் தனுஷ் பள்ளி ஆசிரியராக சமூகத்திலும், கல்வியிலும் நிலவும் ஏற்றத்தாழ்வுகளை எதிர்ப்பவராக நடித்திருப்பார். சம்யுக்தா மேனன் ஹீரோயினாக நடித்திருப்பார். வெங்கி அல்லூரி இயக்கியிருக்கும் இந்த படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் உள்ளது

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

 

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.