தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Vidaa Muyarchi: கொளுத்துங்கடா வெடியா.. தேதியை லாக் செய்த விடாமுயற்சி டீம்.. ரசிகர்கள் ஹேப்பி!

Vidaa Muyarchi: கொளுத்துங்கடா வெடியா.. தேதியை லாக் செய்த விடாமுயற்சி டீம்.. ரசிகர்கள் ஹேப்பி!

Aarthi Balaji HT Tamil
Apr 10, 2024 10:35 AM IST

விடாமுயற்சியில் அஜித் நடித்த துணிச்சலான ஸ்டண்ட் செய்து அசத்தி இருந்தார். அது தொடர்பான வீடியோ வெளியாகி சமீபத்தில் தலைப்புச் செய்திகளில் அடிபட்டது.

நடிகர் அஜித்குமார்
நடிகர் அஜித்குமார்

ட்ரெண்டிங் செய்திகள்

படத்தின் தயாரிப்பாளர்கள் ஏற்கனவே டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் உரிமையை ஓடிடி நிறுவனமான நெட்ஃபிளிக்ஸ் நிறுவனத்திற்கு பெரும் தொகைக்கு விற்பனை செய்து இருக்கிறார்கள். படத்தின் வெற்றிகரமான தியேட்டர் ரன் அல்லது ரிலீஸ் தேதியிலிருந்து ஐந்து வாரங்களுக்குப் பிறகு, அஜித்தின் விடா முயற்சி மேடையில் ஸ்ட்ரீமிங் செய்யத் தொடங்கும்.

இப்படத்தில் சஞ்சய் தத், அர்ஜுன் சர்ஜா, த்ரிஷா, ரெஜினா கசாண்ட்ரா, ஆரவ், மற்றும் பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 2015ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் வெற்றி பெற்ற ‘என்னை அறிந்தால்’ படத்திற்கு பிறகு த்ரிஷாவும், அஜித்தும் இணைந்து நடிக்கின்றனர்.

அஜீத் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகளும் ஒரே நேரத்தில் நடந்து வருகிறது. சமீபத்தில், அஜித் நடித்த ஒரு துணிச்சலான கார் ஸ்டண்ட் இணையத்தில் வைரலாக பரவியது.

அவரது ரசிகர்கள் வெறித்தனமாக அதை ரசித்தார்கள். அஜித்தின் அர்ப்பணிப்புக்காக திரைப்பட ஆர்வலர்கள் பாராட்டினர், மேலும் இந்த அப்டேட்கள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளன.

அல்லு அர்ஜுனின் புஷ்பா 2 ஆகஸ்ட் 15 அன்று திரைக்கு வரும், தளபதி விஜய்யின் தி கோட் ஆகஸ்ட் மாதம் வருகிறது, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வேட்டையன் அக்டோபர் வெளியீட்டு தேதியை அறிவித்து இருக்கிறார்கள். அனிருத் ரவிச்சந்தர் படத்தின் முழு ஒலிப்பதிவையும் இசையமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, என்.பி.ஸ்ரீகாந்த் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.

அதே நேரத்தில் சூர்யாவின் கங்குவா செப்டம்பரில் தேதியை குறித்து வைத்து இருக்கிறார்கள். இந்த புதுப்பிப்புகளின் படி, விடாமுயற்சி  தயாரிப்பாளர்கள் நவம்பர் 1 ஆம் தேதி வரும் தீபாவளி பண்டிகை வாரத்தை குறித்து வைத்து இருப்பதாக சொல்லப்படுகிறது.

தனது ' விடாமுயற்சி  படத்துடன் நடித்த ஆரவ்வுக்கு, 35 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சொகுசு பைக்கை பரிசாக அளித்துள்ளார் அஜித் . ஆரவ் தனது சமீபத்திய மோட்டார் பயணத்திற்கு பயன்படுத்திய பைக் அஜித் பரிசாக அளித்த பைக் ஆகும், மேலும் அவர் சில வாரங்களுக்கு முன்பு தனது சமூக ஊடக பக்கத்தில் பைக்கின் படத்தையும் "கனவுகள் நனவாகும்" என குறிப்பிட்டு இருந்தார்.

அஜீத் தன் உயிரைப் பணயம் வைத்து ஆக்‌ஷன் காட்சியில் நடிக்கிறார், அதே சமயம் ஆரவ் தனது சக நடிகருடன் இணைந்து பயணித்து பாதுகாத்தார். விபத்தின் போது ஆரவ்வை சிறப்பாக கவனித்து கொண்டார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்