தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Ajith Kumar : அஜித்தின் விடாமுயற்சி தள்ளி போகிறதா... Good Bad Ugly முந்துகிறதா.. மீண்டும் வாலி 2 ல் அஜித்..!

Ajith Kumar : அஜித்தின் விடாமுயற்சி தள்ளி போகிறதா... Good bad ugly முந்துகிறதா.. மீண்டும் வாலி 2 ல் அஜித்..!

Pandeeswari Gurusamy HT Tamil
May 08, 2024 06:17 AM IST

Ajith Kumar: இயக்குநர் மகிழ் திருமேனி அவர்கள் இயக்கத்தில் உருவாகி வரும் விடாமுயற்சி திரைப்படம் அஜர்பைஜானில் பரபரப்பாக நடைபெற்று வந்தது. சமீபத்தில் தமிழகம் திரும்பிய படக் குழுவினர் மீண்டும் தேர்தல் முடிந்த பிறகு ஷூட்டிங் கிளம்ப திட்டமிருந்தது. அனைத்து தரப்பு நடிகர்களையும் ஒருங்கிணைப்பதில் சிக்கல்

அஜித்தின் விடாமுயற்சி தள்ளி போகிறதா.. Good bad ugly முந்துகிறதா.. மீண்டும் வாலி 2 ல் அஜித்..!
அஜித்தின் விடாமுயற்சி தள்ளி போகிறதா.. Good bad ugly முந்துகிறதா.. மீண்டும் வாலி 2 ல் அஜித்..!

ட்ரெண்டிங் செய்திகள்

வீ கே சுந்தர் அப்டேட்ஸ் என்ற யூடியூப் சேனலில் அஜித் பிறந்த நாளையொட்டி அஜித் ரசிகர்களுக்கு பல்வேறு தகவல்களை பிறந்த நாள் பரிசாக பகிர்ந்து உள்ளார். இவர் அஜித் அவர்களின் நண்பர் என்பதால் இவர் சொல்ல கூடிய பல்வேறு வகையான தகவல்கள் ரசிகர்கள் மத்தியிலும் சினிமா வட்டாரத்தில் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.

விடாமுயற்சி சூட்டிங் தள்ளி வைப்பு

இந்நிலையில் இயக்குநர் மகிழ் திருமேனி அவர்கள் இயக்கத்தில் உருவாகி வரும் விடாமுயற்சி திரைப்படம் அஜர்பைஜானில் பரபரப்பாக நடைபெற்று வந்தது. சமீபத்தில் தமிழகம் திரும்பிய படக் குழுவினர் மீண்டும் தேர்தல் முடிந்த பிறகு ஷூட்டிங் கிளம்ப திட்டமிருந்தது. ஆனால் அனைத்து தரப்பு நடிகர்களையும் ஒருங்கிணைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. ஆகவே அஜித் அவர்களின் அடுத்த படமாக அறிவிக்கப்பட்டுள்ள இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் அவர்கள் படமான Good bad ugly என்ற திரைப்படத்தை உடனடியாக தொடங்கி விடலாம் என்ற முடிவுக்கு வந்து இருப்பதாக கூறி உள்ளதாக சுந்தர் தெரிவித்துள்ளார்.

இந்த படம் ஜப்பான் மற்றும் சீனாவில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சிறுபகுதி மட்டுமே இங்கு எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் வெளியீடாக வரும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை ஆரம்பித்து விட்டு கிடைக்கும் இடைவெளியில் விடாமுயற்சி திரைப்படம் முடிக்கப்பட்டு விரைவில் ரிலீசுக்கு தயாராகி விடும் என்று கூறி உள்ளார். அவர்கள் கூறி உள்ளதை வைத்து இந்த ஆண்டு தசரா விடுமுறை அல்லது தீபாவளி பண்டிகை விடுமுறை நாட்களில் விடா முயற்சி வெளிவர வாய்ப்பு உள்ளது என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது.

இதே நேரத்தில் விஜய் நடித்து வரும் Goat திரைப்படம் வெளியிடும் அமையும் வாய்ப்பு இருப்பதால் இந்த இருவரின் படமும் நேருக்கு நேராக முட்டி கொள்ளுமா என்ற கேள்வியும் எழுகிறது. முடிவாக ஒரு தகவலையும் கூறி ரசிகர்கள் மத்தியில் பல்ஸை எகிற வைத்து உள்ளார்.

வாலி 2

ரஜினியின் பில்லா படம் தமிழில் பில்லா 2 என்ற பெயரில் அஜித் அவர்கள் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. அதேபோல் அஜித் அவர்கள் நடிப்பில் அவருடைய கேரியரில் மிகவும் முக்கியமான படம் வாலி. அந்த வாலி திரைப்படம் மீண்டும் ரீமேக்காக உள்ளதாகவும் அதை நடிகை ஶ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரிக்க உள்ளதாக கூறி உள்ளார்.

போனிகபூர் அஜித் நண்பர் என்பதாலும் வாலி அஜித் படம் என்பதாலும் இந்த ரீமேக் வாலி யிலும் அஜித் நடிப்பார் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் எகிறி உள்ள. மொத்தத்தில் அஜித் பிறந்த நாள் பரிசாக அவரின் ரசிகர்களுக்கு ஒரே வீடியோவில் மூன்று அதிரடி தகவல்களை அப்டேட் ஆக கொடுத்து அசத்தி இருக்கிறார் சுந்தர்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்