Adhik Ravichandran: நடிகர் பிரபு மகளை கரம் பிடித்த இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன்
இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் மற்றும் ஐஸ்வர்யா பிரபுக்கு இன்று திருமணம் நடைபெற்றது.

இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் மற்றும் ஐஸ்வர்யா பிரபு
‘ மார்க் ஆண்டனி ’ சூப்பர் ஹிட் படத்தின் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் மற்றும் நடிகர் பிரபுவின் ஐஸ்வர்யா பிரபுக்கு இன்று திருமணம் நடைபெற்று உள்ளது. சென்னையில் நடைபெற்ற இந்த விழாவில் இரண்டு வீட்டாரின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.
அத்துடன் திரையுலகை சேர்ந்த நடிகர்கள், நடிகைகளும் திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். இவர்களின் திருமணம் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலான நிலையில் ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.
ஐஸ்வர்யாவும், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனும் சில காலமாக நெருங்கிய நண்பர்களாக பழகி வந்தனர். அந்த நட்பு காதலாக மாறியது.