24 Years of Poovellam Kettupaar : சூர்யா- ஜோதிகா இணைந்து நடித்த முதல் படம்.. பூவெல்லாம் கேட்டுப்பார் 24 ஆண்டுகள் நிறைவு!
சூர்யா மற்றும் ஜோதிகா இணைந்து நடித்த முதல் படமான பூவெல்லாம் கேட்டுப்பார் திரைப்படம் வெளியாகி இன்றுடன் 24 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

பூவெல்லாம் கேட்டுப்பார் 1999இல் தமிழில் வெளிவந்த கமர்சியல் திரைப்படமாகும். இத்திரைப்படத்தினை வசந்த் இயக்கியிருந்தார். இயக்குனர் வசந்த்தின் கதைக்கருவும், திரைக்கதையும் இப்படத்தை அழகாக எடுத்துச் சென்றது.
சூர்யா மற்றும் ஜோதிகா இணைந்து நடித்த முதல் படமான பூவெல்லாம் கேட்டுப்பார். இப்படம் குடும்பங்கள் கொண்டாடும் கமர்சியல் திரைப்படமாக அமைந்தது. இப்படம் நகைச்சுவை, காதல், இரு இசையமைப்பாளர்களுக்கு இடையே உள்ள முரண்கள் எனப் பல உணர்வுகளைக் காட்சிப்படுத்துகிறது.
அதாவது விஜயகுமார் மற்றும் நாசர் இப்படத்தில் சண்டையால் பிரிந்த நண்பர்களாக நடித்திருப்பார்கள். இப்படத்தில் விஜயகுமாரின் மகனாக சூர்யாவும், நாசரின் மகளாக ஜோதிகாவும் நடித்திருப்பர். சூர்யா ஜோதிகா இருவருக்கும் காதல் மலர இந்த காதல் பிரிந்த இரு குடும்பங்களை எப்படி ஒன்று சேர்க்கிறது என்பதே இப்படத்தின் கதை.