அஜித்துக்கு எல்லாமே தெரியுமாமே.. அஜித்திடம் மட்டும் ராதாரவி பம்முவது எதுக்கு தெரியுமா.. உண்மையை உடைத்த டாக்டர்!
அஜித் குறித்த உரையாடல் ஒன்று அங்கு வந்துள்ளது. அந்த டாக்டர் அஜித் வந்து பெரிய ஜெம் என்று சொல்லியுள்ளார். ஏன் என்ன ஆயிற்று என்று கேட்டதற்கு என் கையாலேயே பல பேருக்கு ஆபரேஷன் செய்திருக்கிறேன். வசதியின்றி கண் பிரச்சனையால் அவதிப்படும் பல பேருக்கு அஜித் சொந்த செலவில் ஆபரேஷன் செய்ய உதவியிருக்கிறார்.
நடிகர் அஜித் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை தொடர்ந்து தவிர்த்து வருகிறார். மற்ற நடிகர்களை போல் படத்தின் புரமோஷன் போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது கூட இல்லை. ஆனாலும் அஜித்துக்கு இருக்கும் வரவேற்பு ரசிகர்கள் மத்தியில் துளியும் குறையவில்லை. இப்போதும் அஜித் படத்துக்கான ஓப்பனிங் மற்றும் பிஸினஸ் மிகப்பெரிய அளவில் இருக்கிறது. இந்நிலையில் அஜித் குறித்த ரசிகர்களின் கேள்விகளுக்கு பத்திரிகையாளர் வி.கே.சுந்தர் தொடர்ச்சியாக தனது V K Sundar Updates என்ற யூடியூப் சேனலில் பதில் அளித்து வருகிறார். அது போன்று அஜித் ரசிகர்களின் கேள்விகளுக்கு அவர் அளித்த சுவாரஸ்யமான பதில்களை குறித்து இங்கு பார்க்கலாம்.
அஜித் ரசிகரின் கேள்வி
அஜித் இல்லாத மேடைகளில் அவர் பெயரைச் சொன்னாலே கரகோஷம் அதிகமாக இருக்கிறது. ரசிகர்களின் உற்சாகமும் ஹெவி டெசிபலில் இருக்கிறது. இந்த நிகழ்ச்சிகளை எல்லாம் அவர் பார்க்கிறாரா? என்ற கேள்வியை ரசிகர் ஒருவர் எழுதியிருந்தார்
பதில் : நிச்சயமாக அஜித் பார்ப்பார். அஜித்தை பொறுத்தவரை அன்றாடம் நடக்கும் நிகழ்வுகள், தன்னைச் சுற்றிலும், தன்னைப் பற்றியும் என்ன நடக்கிறது என்பதை ஒவ்வொரு நாளும் இரவு நண்பர் சுரேஷ் சந்திராவிற்கு ஃபோன் செய்து இன்று என்ன விசேஷம் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று கேட்பார். சுரேஷ் சந்திரா எதையெல்லாம் அஜித்தின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டுமோ அதை எல்லாவற்றையும் தெரிவிப்பார்கள். இதனால் அன்றாட சம்பவங்களில் அஜித் தன்னை அப்டேட் செய்து கொண்டு தான் இருக்கிறார். நீங்கள் சொல்லும் இந்த வீடியோக்கள், நிகழ்ச்சிகள் நடப்பது, எல்லாவற்றையும் அவர் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார். நாம் பேசிக் கொண்டிருக்கும் இந்த கேள்வி பதில் தொடரும் அவர் பார்ப்பதுதான். அதனால்தான் நாம் இந்த செஷனைதொடங்கி இருக்கிறோம்.
பதில் : ராதாரவி குறித்து எனக்கு பர்சனல் ஆகவும் தெரியும். நிறைய வீடியோக்களை அவர் பேசுவதையும் நான் பார்த்திருக்கிறேன். ராதாரவி எவ்வளவு பெரிய ஆட்களாக இருந்தாலும் பொது மேடையில் சில பேரை லெஃப்ட் ஹேண்டில் டீல் பண்ணுவது உண்டு. ஆனால் அஜித்தை மட்டும் அவர் பெயர் சொல்லி அஜித் சார் என்று சொல்லுவதை பலமுறை பார்த்திருக்கிறேன்.
அதற்கு என்ன காரணம் என்றால் ஒரு நடிகருடைய மகன் கண் டாக்டர். அவர்தான் அஜித்திற்கு பெர்சனல் டாக்டர். சினிமாவில் இருக்கக்கூடிய நிறைய பேர் அந்த டாக்டரிடம் தான் கண் பரிசோதனைக்கு செல்வார்கள். அந்த மாதிரி ஒரு முறை ராதாரவி அவரிடம் போய்விட்டு டெஸ்ட் எல்லாம் எடுத்து முடித்துவிட்டு ரிலாக்ஸ் ஆக ஒரு காபி சாப்பிட்டு பேசி கொண்டிருந்தார். அப்போது தற்செயலாக அஜித் குறித்த உரையாடல் ஒன்று அங்கு வந்துள்ளது. அந்த டாக்டர் அஜித் வந்து பெரிய ஜெம் என்று சொல்லியுள்ளார். ஏன் என்ன ஆயிற்று என்று கேட்டதற்கு என் கையாலேயே பல பேருக்கு ஆபரேஷன் செய்திருக்கிறேன். வசதி இல்லாம கண் பிரச்சனையால் அவதிப்படும் பல பேருக்கு அஜித் தனது சொந்த செலவில் ஆபரேஷன் செய்ய உதவியிருக்கிறார். இது பல பேருக்கு தெரியாது என்று மருத்துவர் தெரிவித்துள்ளார்.
சினிமாவில் இருக்கும் ஆள்தானே
அதற்கு ராதாரவி அவரும் சினிமாவில் இருக்கிற ஆள் தானே என்று வழக்கம்போல் சொல்லி இருக்கிறார். அதற்கு மருத்துவர் ஒரு பத்தாயிரம் செலவு செய்து விட்டு ஒரு லட்ச ரூபாய்க்கு விளம்பரம் கொடுக்கும் இந்த உலகில், இவ்வளவு செஞ்சிட்டு ஒரு மனிதன் ரொம்ப கேஷுவலாக எதுவுமே நடக்காதது போல் இருப்பாரா என்று தெரிவித்துள்ளார். இதிலிருந்து ராதாரவி பொது இடங்களில் எப்போது அஜித்தை பற்றி பேசினாலும், அஜித் சார், அஜித் சார் என்று தான் பேசி வருகிறார். இதுதான் சீனியர்களையே லெப்ட் ஹேண்டில் டீல் பண்ணும் ராதாரவி அஜித்தை பற்றி பேசும்போது மட்டும் கவனமாக இருப்பதன் பின்னணி என்றார்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.
தொடர்புடையை செய்திகள்