Dheena Movie Review: ‘இரும்பு இதயத்தின் ரோஜா பக்கங்கள்..’ வத்திக்குச்சியை பத்த வைத்த தீனாவின் திரைவிமர்சனம்!
Happy Birthday AK: அஜித் உடல் எடையை பற்றிய விமர்சனம் வந்த சமயம் அது. ‘அஜித்திற்கு சும்மாவே டான்ஸ் வராது, இனி வாய்ப்பே இல்லை!’ என்று எல்லாரும் சொல்லிக் கொண்டிருக்க, ‘தல இருக்கும் போது வால் ஆடக்கூடாது’ என்று வத்திக்குச்சி பத்தாக்காதடா பாடலுக்கு பறக்கவிட்டார் அஜித்!
2001 ஜனவரி 14 ம் தேதி வெளியான தீனா திரைப்படம், 23 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் தியேட்டர்களில் இன்று ரீரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. ‘தல’ அஜித் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் அஜித்தில் பிறந்தநாளையொட்டி சிறப்பு வெளியீடாக வெளியாகியுள்ள தீனா திரைப்படம் தான், அஜித்திற்கு ‘தல’ என்கிற பெயர் வர காரணமான திரைப்படம்.
சவாலில் வெளிவந்த தீனா!
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், யுவன்சங்கர்ராஜா இசையமைப்பில், அஜித், லைலா, சுரேஷ்கோபி உள்ளிட்ட பலர் நடித்த இத்திரைப்படம், முதன் முதலாக வெளியான போதே, சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது அனைவரும் அறிந்ததே.
உடல் எடையில் கடும் விமர்சனத்திற்கு ஆளான அஜித்திற்கு, ‘இனி அவ்வளவு தான்’ என்று கோலிவுட் லேசாக பேச ஆரம்பித்த போது, மாஸாக எண்ட்ரி கொடுத்து, தன்னை எடை போட யாருமே இல்லை என்பதை அஜித் நிரூபித்ததும் தீனா திரைப்படத்தில் தான். அமர்க்களத்தில் ஆக்ஷன் ஹீரோவாக எண்ட்ரி ஆனாலும், அஜித் முழு ஆக்ஷன் அவதாரம் எடுத்தது தீனாவில் தான்.
பாசமும் பகையும்
ஆதிகேசவன் என்கிற பிரபல ரவுடியின் முன்னணி கூட்டாளி தீனா என்கிற தீனதயாளன். தம்பியாக ஆதிகேசவன் குடும்பத்தில் வசித்து வரும் தீனாவிற்கு, ஆதிகேசவனின் தங்கை மீது அலாதி ப்ரியம். அண்ணன் சொல்லுவதை தட்டி முடிப்பதும், தங்கை விரும்புவதை தட்டாமல் செய்வதும் தீனாவின் பழக்கம்.
அரிவாள், கத்தியோடு பயணிக்கும் தீனா வாழ்வில், ஒரு பெண் வருகிறாள். கரடுமுரடான தீனாவை அவள் நல்வழிப்படுத்த நினைக்கிறாள். இதற்கிடையில் தீனாவின் தங்கைக்கு ஒருவருடன் காதல். கடைசியல் அந்த காதலன், தன் காதலின் அண்ணன் என்பது தெரிகிறது. தங்கையின் காதலை நிறைவேற்ற உறுதி எடுக்கிறார் தீனா.
தீனா சபதம் ஜெயித்ததா?
இதற்கிடையில், அண்ணன் ஆதிகேசவனுக்கு பயந்து காதலனுடன் ஊரை விட்டு ஓட முயற்சிக்கும் போது விபத்தில் சிக்கிய பரிதாபமாக இறக்கிறார் தங்கை. அதுவரை தன் தங்கை காதலித்த விபரம் தெரியாத ஆதிகேசவன், தன் தங்கை சாவுக்கு காரணமான அவள் காதலனின் குடும்பத்தை அழிக்க முடிவு செய்கிறான்.
தங்கையின் காதல் விபரம் தெரிந்த தீனா, அதை தடுக்க நினைக்கும் போது, ஆதிகேசன்-தீனா இடையே முட்டுகிறது. இருவருக்கும் சவால் வெடிக்கிறது. தங்கை சாவுக்கு பழி தீர்த்தாரா ஆதிகேசவன்? தன் காதலி உள்ளிட்ட குடும்பத்தாரை காப்பாற்றினாரா தீனா? இது தான் படத்தின் கதை.
சம்பவம் செய்த அஜித்!
ஏற்கனவே சொன்னது போல, அஜித் உடல் எடையை பற்றிய விமர்சனம் வந்த சமயம் அது. ‘அஜித்திற்கு சும்மாவே டான்ஸ் வராது, இனி வாய்ப்பே இல்லை!’ என்று எல்லாரும் சொல்லிக் கொண்டிருக்க, ‘தல இருக்கும் போது வால் ஆடக்கூடாது’ என்று வத்திக்குச்சி பத்தாக்காதடா பாடலுக்கு பறக்கவிட்டார் அஜித். தனி ஆளாக படத்தை தோலில் சுமந்ததும் அவர் தான். கண்ணாடியை உடைக்கும் எண்ட்ரியில் தொடங்கி, க்ளைமாக்ஸ் சண்டை வரை, தீனாவின் தீப்பொறி அமேஸிங்.
கதாநாயாகியாக வரும் லைலாவின் நடிப்பும், அப்பாவித்தனமும், காதலும் ஸ்மார்ட். ஆதிகேசவனாக வரும் சுரேஷ் கோபி.. பாசத்திலும், பகையிலும் அசத்தியிருப்பார். இதே போல, இன்னும் எத்தனையோ கதாபாத்திரங்கள் தீனாவில் திரும்பும் திசையெல்லாம் வாழ்ந்திருப்பார்கள்.
யுவன்-அஜித் காம்போ!
படத்தின் இன்னொரு பலம், இசை. யுவன்-அஜித் காம்போ அனைவரும் அறிந்ததே. அதற்கு முன்னுரை எழுதிய படம் தான் தீனா. பின்னணியாக இருக்கட்டும், பாடலாக இருக்கட்டும், யுவன் விளையாடியிருப்பார். ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என ரசிகர்களை குஷிப்படுத்தி, படம் முழுக்க அவர்களை கொண்டாட வைத்ததில் யுவன்சங்கர்ராஜாவுக்கு முக்கிய பங்கு உண்டு.
இத்தனை ஆண்டுகளுக்குப் பின், இன்றும் அதே கொண்டாட்டத்தோடு ரசிகர்களை உயிர்ப்பிக்க வைக்கிறது என்றால், அது அஜித் என்கிற ஒற்றை மனிதனின் முகம் தான். வாரத்தின் எந்த கிழமையும் டிவியில் எதிர்பார்க்கும் ஒரு படம், மீண்டும் திரைக்கு வந்து திரையரங்குகளை திருவிழா ஆக்குகிறது என்றால், அது தான் அஜித் மீதான ரசிகர்களின் அன்பு!
டாபிக்ஸ்