Tamil News  /  Entertainment  /  Actress Vani Bhojan Speech In Sengalam Trailer Launch
வாணி போஜன்
வாணி போஜன்

Vani Bhojan: அரசியல் பிரவேசம் வாய்க்குமா? - வாணி போஜனின் அதிரடி பதில்!

19 March 2023, 14:00 ISTKalyani Pandiyan S
19 March 2023, 14:00 IST

செங்களம் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் வாணி போஜன் மன்னிப்பு கேட்டார்.

எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் நடிகர்கள் கலையரசன், வாணி போஜன் நடித்துள்ள ‘செங்களம்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

ட்ரெண்டிங் செய்திகள்

அந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகை வாணி போஜன், “ நடிகை வாணி போஜன் பேசும் போது, “ ZEE5 லிருந்து எந்தக் கதை வந்தாலும் நான் ஒப்புக்கொள்வேன், ஏனென்றால் அவர்கள் மிகவும் கவனமாக தேர்ந்தெடுத்து நல்ல படைப்புகளை மட்டுமே தருகிறார்கள்.

ZEE5 கௌஷிக் தான் முதலில் இந்தக்கதாபாத்திரம் பற்றிச் சொன்னார். இயக்குநர் எஸ் ஆர் பிரபாகரன் அவர்களைச் சந்தித்தேன், எனக்குப் பிடித்திருந்தது ஆனால் இடையில் அப்பாவிற்கு உடல்நிலை சரியில்லாததால் நான் படத்தில் இருந்து விலகுகிறேன் என்றேன்.

ஆனால் எல்லோரும் எனக்கு ஆதரவளித்து என்னை இந்த கதாபாத்திரம் செய்ய வைத்துள்ளார்கள். எனக்கு இது மிகப்பெரிய ஆசீர்வாதம் என்றே நினைக்கிறேன். இப்போது பார்க்கும் போது நான் ஒரு நல்ல படைப்பில் பங்கேற்றிருக்கிறேன் என மகிழ்ச்சியாக உள்ளது. இந்த படத்தின் நாம் ஏன் அரசியலுக்கு வரக்கூடாது என்றும் தோன்றியது. இயக்குநர் எஸ் ஆர் பிரபாகரன் சாருக்கு நன்றி. செங்களம் படைப்பிற்கு ஆதரவு தாருங்கள் நன்றி.” என்றார்.

அமீர், பிரபாகரன், வாணி போஜன்
அமீர், பிரபாகரன், வாணி போஜன்

இயக்குநர் எஸ் ஆர் பிரபாகரன் பேசும் போது, “அமீர் சாரை இரண்டு நாளுக்கு முன்பு தான் அழைத்தேன்; அவர் வந்திருந்து எங்களை வாழ்த்தியதற்கு மிக்க நன்றி. என் முதல் படத்திற்கு இருந்த அதே உணர்வில் தான் உங்கள் முன் முதல் வெப் சீரிஸிற்காக நிற்கிறேன்.

கௌஷிக் சாரிடம் இந்தக் கதையைச் சொன்ன போது வெப் சீரிஸாக பண்ணலாம் என்றனர். எனக்குக் கொஞ்சம் தயக்கமாகத்தான் இருந்தது. ஆனால் அவர்கள் ஊக்கப்படுத்தினார்கள், ZEE5 ஆல் தான் இந்தப்படைப்பு உருவானது அவர்களுக்கு என் நன்றி.

இந்த தொடர் ஒரு பொலிடிகல் திரில்லர். உங்களுக்கு நிறைய ஆச்சரியங்கள் தரும். கலையரசன்எந்த கதாபாத்திரம் தந்தாலும் அசத்தக்கூடியவர் இதிலும் அட்டகாசமாக நடித்துள்ளார். வாணி போஜன் மிக நல்ல நடிப்பைத் தந்துள்ளார். 

விஜி மேடம், ஷாலி, கண்ணன் என எல்லோருமே கதாபாத்திரமாக வாழ்ந்துள்ளார்கள். என் ஒளிப்பதிவாளர் இசையமைப்பாளர் இருவருமே எனக்கு மிகப்பெரும் பலம். தொழில் நுட்ப கலைஞர்கள் அனைவரும் எதையும் எதிர்பாராமல் உழைத்துள்ளனர். விரைவில் உங்களுக்குத் திரையிடவுள்ளோம். பார்த்து உங்கள் ஆதரவைத் தருவீர்கள் என நம்புகிறேன் நன்றி.

டாபிக்ஸ்