தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Actress Tamannaah Reacts About Her Rumours Of Love

Tamannaah: இப்படியெல்லாம் வதந்தியை கிளப்பிவிடுவதா? - சீறும் தமன்னா!

Karthikeyan S HT Tamil
Mar 04, 2023 11:37 AM IST

Actress Tamannaah's love rumours: காதலிப்பதாக வதந்திகள் பரவியது குறித்து நடிகை தமன்னா விளக்கம் அளித்திருக்கிறார்.

நடிகை தமன்னா
நடிகை தமன்னா

ட்ரெண்டிங் செய்திகள்

அரண்மனை 4-ம் பாகத்திலும் தமன்னா நடிக்க இருக்கிறார். இந்த நிலையில் தமன்னா குறித்து காதல் கிசுகிசுக்கள் அதிகம் வருகின்றன. இந்தி நடிகர் விஜய் வர்மாவை காதலிப்பதாக தகவல் பரவி வருகின்றன.

இதுதொடர்பாக நடிகை தமன்னா அளித்துள்ள பேட்டியில்,"எனக்கு எதிராக நிறைய வதந்திகள் பரவுகின்றன. வரவர ஒவ்வொரு விஷயத்திலுமே எதிர்மறைகள் அதிமாகிவிட்டன. வதந்திகளை யார் கிளப்பி விடுகிறார்கள் என தெரியவில்லை. நான் காதலிப்பதாக தகவல் பரப்புகிறார்கள். இதையெல்லாம் படிக்கும்போது சிரிப்புதான் வருகிறது. ஒவ்வொருவருக்கும் சொந்த வாழ்க்கை இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள். என்னை தென்னிந்திய ரசிகர்கள் மில்க் பியூட்டி என்கின்றனர். எனது உடல் நிறம் காரணமாக அப்படி அழைக்கிறார்கள். ரசிகர்கள் உணர்வுகளை புரிந்து கொள்வேன். அவர்களிடம் இருந்து நிறைய அன்பை பெற்று இருக்கிறேன்" என்றார்.

முன்னதாக, அமெரிக்காவில் பணிபுரியும் டாக்டர் ஒருவரை தமன்னா திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியானது. அதற்கு முன்பு கிரிக்கெட் வீரர் விராட் கோலியை கோலியை காதலிப்பதாகவும் கூறப்பட்டது. பிறகு முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அப்துல் ரஸாக்கை தமன்னா காதலித்து வருவதாக தகவல் வெளியானது. 

சமீபத்தில்  கூட இயக்குனரும் நடிகரும் நடன இயக்குனருமான பிரபுதேவாவை தமன்னா காதலிப்பதாக வதந்தி காட்டுத் தீயாக பரவியது. இப்படி தமன்னாவை சுற்று கிசுகிசுக்கள் தொடர்ந்து வலம் வந்த நிலையில் தற்போதும் ஒரு காதல் கிசுகிசு வெளியாகி இருக்கிறது. ஆனால், இந்த முறை அதற்கு மறுப்பும் தெரிவிக்காமல் லாவகமாக பதிலளித்துள்ளார் தமன்னா.

ஆனால், தமன்னாவுக்கு விரைவில் கல்யாணம் நடக்கப் போவது உறுதியாகி விட்டது. அது காதல் கல்யாணம் இல்லையாம், பெற்றோர்கள் பார்க்கும் நபரை தான் தமன்னா திருமணம் செய்து கொள்ளப் போகிறார். இதனை ஒரு பேட்டியில் அவரே தெரியப்படுத்தியுள்ளார்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்