Sowcar Janaki: இத்தனை வருடம் கழித்து உண்மையை போட்டு உடைத்த நடிகை! இப்படி செஞ்சா மொத்தமும் நாறி விடும்!
Sowcar Janaki: மறைந்த பழம்பெரும் நடிகை ஒருவரின் வாழ்க்கை வரலாறு என எடுக்கப்பட்ட திரைப்படத்தில் உள்ளது உண்மையான தகவல்கள் அல்ல. தவறான தகவல்களை பரப்பியதால் தான் இன்றுவரை அந்தப் படத்தை பார்க்கவில்லை என நடிகை சவுக்கார் ஜானகி கூறியுள்ளார்.

தனது யதார்த்த நடிப்பால் தமிழ் திரையுலகில் தனக்கென எப்போதும் தனி இடத்தை தக்க வைத்துள்ளவர் நடிகை சவுக்கார் ஜானகி. இவர் சினிமாவில் அடியெடுத்து வைத்து 72 ஆண்டுகள் கடந்து விட்டது. இவர் தமிழ்நாட்டின் 3 முதல்வர்களுடனும் இணைந்து திரையுலகில் பணியாற்றியவர்.
இவர் 3 குழந்தைக்கு தாயான பின்பு தான் திரையுலகில் நடிக்கவே வந்தார் என்றால் நம்ப முடிகிறதா? எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி கணேசன், என்.டி.ராமாராவ், நாகேஸ்வர ராவ், ராஜ்குமார், ஜெய்சங்கர், சிவகுமார், ரஜினி காந்த், கமல் ஹாசன் என தலைமுறைகள் கடந்த நடிகர்களுடன் இவரது திரைப்பயணம் தொடர்ந்தது.
தேடிவந்த வாய்ப்பு
15 வயதில் ரேடியோ அறிவிப்பாளராக இருந்த இவரைத் தேடி சினிமா வாய்ப்பு வந்தது. ஆனால், இவரது குடும்பத்தினரோ சினிமா வாய்ப்பை மறுத்து அவருக்கு திருமணம் நடத்தி வைத்தனர். பின் குடும்ப வறுமை அவரை வாட்ட கைக்குழந்தையுடன் சினிமாவில் வாய்ப்பு தேடி அலைந்துள்ளார்.