Naan Avan Illai: 70 களின் ப்ளேபாயாக மாறி மிரட்டிய ஜெமினி கணேசன்மறக்க முடிமா ‘நான் அவனில்லை’ படத்தை! 48 ஆண்டுகள் நிறைவு!
ஜெமினி கணேசனின் ‘நான் அவனில்லை’ திரைப்படம் தன்னுடைய 49 ஆவது வருடத்தில் கால்பதித்து இருக்கிறது.
கல்யாணம் மோசடி மன்னனான மாதவ் காஜி என்பவரது வாழ்க்கையை மையப்படுத்தி கடந்த 1962 ஆம் ஆண்டு ‘டூ மீ நவ்ஹெக்’ என்ற மராத்தி நாடகம் ஒன்று வெளியானது. இந்த நாடகத்தை பிரகலாத் கேசவ் அத்ரே என்பவர் இயக்கி இருந்தார். இந்த நாடகத்தைத் தழுவி கே. பாலசந்தர் இயக்கி 1974 ம் ஆண்டு ஜூன் 7 ஆம் தேதி வெளியான திரைப்படம்தான் ‘நான் அவனில்லை’.
வெவ்வேறு அடையாளங்களுடன் வெவ்வேறு பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டு சொகுசாக வாழும் பலே கில்லாடியின் கதைதான் ‘நான் அவனில்லை’.
ஒன்பது வேடங்களில் பல பெண்களை ஏமாற்றும் மோசடி பேர் வழியான வில்லன் கதாபாத்திரத்தை நடிகர் ஜெமினி கணேசன் ஏற்று நடித்திருந்தார். அப்பாவியான முகம், நல்லவர் பிம்பம், காதல் மன்னன் என்றே பார்த்து பழகிய ஜெமினி கணேசனை இப்படியான பிம்பத்தில் பார்ப்பது கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது. இந்தப்படத்திற்காக அவருக்கு ஃபிலிம்ஃபேர் விருதும் கிடைத்தது. இவருடன் லட்சுமி, பூரணம் விஸ்வநாதன், செந்தாமரை, ஜெயபாரதி உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
எம்.எஸ். விஸ்வநாதன் இந்தப்படத்திற்கு இசையமைத்து இருந்தார். குறிப்பாக இந்தப்படத்தில் இடம் பெற்ற ‘ராதா காதல் வராதா’ பாடல் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப்படத்தை நடிகர் ஜெமினி கணேசனே தயாரிக்கவும் செய்திருந்தார். இந்தப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்தப்படம் கடந்த 2007 ஆம் ஆண்டு ரீமேக் செய்யப்பட்டது. ஜீவன் கதாநாயகனாக நடித்த இந்தப்படத்தில் நடிகைகள் மாளவிகா, சினேகா, நமீதா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இதனின் இரண்டாம் பாகமும் வெளியானது குறிப்பிடத்தக்கது.
டாபிக்ஸ்