விஜய்யுடன் கிசுகிசு.. கிளாமர் கிளாமர்ன்னு அலைஞ்சதால 22 வயசுல கெரியர் காலி.. நடிகை சொன்ன வாழ்க்கை ரகசியம்..
சினிமாவில் நடிகைகள் கிளாமராகத்தான் நடிக்க வேண்டும் என பலரும் நிர்பந்தித்ததால் தான் சினிமாவை விட்டு விலகியதாக நடிகை சங்கீதா கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.
தமிழில் வெளியான பூவே உனக்காக படத்தை அவ்வளவு எளிதில் 90ஸ் கிட்களாலும், அதற்கு முந்தைய தலைமுறையினராலும் மறக்க முடியாது. காரணம், அந்தப் படம் பெரும்பாலன குடும்பத்தில் நடந்த ஏதேனும் ஒரு விஷயத்தை நியாபகப்படுத்தி இருக்கும். அந்தப் படத்தில் சேரமால் போன சங்கீதாவின் காதலைக் கண்டு பலரும் சோகத்தில் மூழ்கி இருப்போம். அப்படிப்பட்டவர் திடீரென சினிமாவிலிருந்தே மொத்தமாக காணாமல் போனது பலரிடத்திலும் விவாதத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் தான் அவர், அவள் விகடன் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், அவர் சினிமாவை விட்டு விலகிய காரணத்தை கூறியிருக்கிறார்.
குழந்தை நட்சத்திரம்
மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான சங்கீதா, தமிழில் என் ரத்தத்தின் ரத்தமே என்ற பாக்கியராஜ் படத்தில் நடத்ததின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார், பின், இவர் கமல் ஹாசனின் மகாநதி உள்ளிட்ட நிறைய தமிழ் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருப்பார்.
ராஜ்கிரணின் கதாநாயகி
பின் 1995ல் வெளியான ராஜ்கிரணின் எல்லாமே என் ராசாதான் படத்தில் கதாநாயகியாக நடித்திப்பார். இவர் கதாநாயகியாக நடித்த முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதை தொட்டுவிட்டார்,
இதையடுத்து, பார்த்திபன், பிரபுவுடன் நடித்த இவர், விக்ரமன் இயக்கத்தில் வெளியான பூவே உனக்காக படத்தில் நடித்து பட்டி தொட்டி எங்கும் மக்கள் மனதை வென்றார்.
பெயர் வாங்கித் தந்த பூவே உனக்காக
இவர் இந்தப் படத்தில், விஜயை ஒருதலையாக காதலித்தது, அவரை கணவர் என நம்ப வைக்க முயற்சிப்பது, தாத்தா பாட்டியுடன் செய்த குறும்பு என அத்தனையிலும் ஸ்கோர் செய்து அசத்தியிருப்பார். பின் கிளைமேக்ஸ் காட்சியில் தன் நிறைவேறாத காதலுக்காக ஏங்கி நிற்கும் போது, படத்தை பார்க்கும் அனைவருக்குமே இவர் மீது இரக்கம் வரும் நிலையில் நிர்மாலா மேரியாகவே மாறி வாழ்ந்திருப்பார்.
பிஸியான நடிகை
இதையடுத்து, நிறைய குடும்பக் கதைகளிலும் நடித்த அவர், பின்னாளில் எதிர்மறை கதாப்பாத்திரத்தையும் ஏற்று நடித்தார். இதனால், தமிழ் மட்டுமின்றி, மலையாளம், தெலுங்கு மொழிகளிலும் பிஸியான நடிகையாகவே வலம் வந்தார். இவர் கேரள அரசின் சிறந்த நடிகை விருதையும் பெற்றார்.
இந்த நிலையில், இவர் சினிமாவிலிருந்து முற்றிலும் காணாமல் போனார். இதற்கிடையில், சங்கீதா தற்போது மலையாளத்தில் சில குறிப்பிட்ட கதைகளை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வரும் நிலையில், சினிமாவில் இருந்து விலகியதற்கான காரணம் குறித்து பேசியுள்ளார்.
சினிமாவிலிருந்து விலக காரணம்
அந்தப் பேட்டியில், பூவே உனக்காக படத்திற்கு பிறகு நான் அதிகப் படங்களில் நடிந்து வந்தேன். அந்தக் காலகட்டத்தில் கதாநாயகிகள் அதிகம் கிளாமராக நடிக்க வேண்டும் என கட்டாயப்படுத்தப்பட்டனர். அதில் எனக்கு சுத்தமாக உடன்பாடும் இல்லை. அதேசமயம் நான், பூவே உனக்காக படத்தில் கேமாரா மேனாக பணியாற்றிய சரவணன் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டேன். இதனால், குடும்பத்தை பார்த்துக் கொள்ளவே நேரமும் சரியாக இருந்ததால், இரண்டு காரணங்களையும் கருத்தில் கொண்டு சினிமாவிலிருந்து ஒதுங்கி விட்டேன்.
விஜய்யுடன் கிசுகிசு
பூவே உனக்காக படத்திற்கு பிறகு நடிகர் விஜய்க்கு திருமண ஏற்பாடுகள் நடைபெற்றது. அவரது மனைவி பெயரும் சங்கீதா. ஆனால், மக்கள் சங்கீதா என்ற பெயரை குறிப்பிட்டதும் நான் தான் அவரது காதலியாக இருப்பேன் என பலரும் நினைத்தனர். நான் திருமணம் செய்து கொண்டபோது எனது வயது வெறும் 22 தான். என்னால் கிளாமர் ரோலில் நடிக்க முடியாததால் தான் சினிமாவிலிருந்து விலகினேன். பின், சில வருடங்களுக்குப் பின் மலையாள படம் ஒன்றில் நடித்தேன். இப்போது, மலையாளத்தில் சில படங்களை தேர்ந்தெடுத்து நடிக்கிறேன். தமிழில் நடிக்கும் வாய்ப்பு வந்தாலும் நிச்சயம் நடிப்பேன் என்றார்.
கணவருக்கு உதவி
முன்னதாக, இவரது கணவர் சிலம்பரசனை வைத்து சிலம்பாட்டம் படத்தை இயக்கியபோது, சங்கீதா கணவருக்கு துணையாக இருந்தார் என்றும் கூறியிருக்கிறார்.
டாபிக்ஸ்