Silambarasan: ரெட் கார்டு விவகாரம்..‘உண்மையை பேசினாலே கஷ்டப்பட வேண்டியதுதான்’ - சிலம்பரசன் பேட்டி
Silambarasan: “அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. வெளியே தவறான தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. சின்ன சின்ன பிரச்சினைகள் இருந்தன. அதையெல்லாம் பேசி தீர்த்து விட்டோம்” - சிலம்பரசன் பேட்டி
Silambarasan: ரெட் கார்டு விவகாரம்..‘உண்மையை பேசினாலே கஷ்டப்பட வேண்டியதுதான்’ - சிலம்பரசன் பேட்டி
Silambarasan: கமல்ஹாசன் நடிப்பில், இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘இந்தியன் 2’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் சிலம்பரசன் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.
உண்மையாக இருந்தால் பிரச்சினைதான்
அப்போது சிலம்பரசன் பேசும் போது, “ என்னுடைய நடிப்பில் அடுத்ததாக எஸ்.டி.ஆர் 48 மற்றும் தக் லைஃப் உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாக இருக்கின்றன.” என்றார்.
ஆன்மிக பயணத்தில் அதிக ஈடுபாடு காட்டுவது ஏன் என்று கேட்டபோது, “ எல்லோருக்கும் அது வாழ்வில் நடக்கும் என்று நினைக்கிறேன். அதற்கு காரணம் காலம்தான். இந்த உலகத்தில் அதிகமாக கஷ்டப்படுபவர் யார் என்றால், அது உண்மையை பேசுபவர்கள்தான்.அதை நான் நிறைய பேசி இருக்கிறேன்.” என்று பேசினார்.