Vijay: இது என்ன ட்விஸ்ட்.. சங்கீதா இல்ல விஜய் திருமணம் செய்ய நினைத்தவர் இவரா? - வெடிகுண்டு வீசிய பயில்வான்
நடிகர் விஜய் திருமணம் குறித்து பயில்வான் புது ரகசியத்தை பகிர்ந்து உள்ளார்.
முன்னணி நடிகரும், திரைப்பட விமர்சகருமான பயில்வான் ரங்கநாதன், தளபதி விஜய் திருமணம் குறித்து யாருக்கும் தெரியாத ரகசியத்தை பகிர்ந்து உள்ளார்.
விஜய் தனது மனைவி சங்கீதாவை திருமணம் செய்து கொள்வதற்கு முன், விஜய் வேறு நட்சத்திர மகளை திருமணம் செய்து கொள்ள நினைத்தார். ஆனால் சங்கீதா வந்த பிறகு அவர் அதை ரத்து செய்தார்.
விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் அவரது மனைவி ஷோபா இருவரும் தங்கள் மகனுக்கு பின்னணி பாடகர் சுரேந்தரின் மகளுக்கு திருமணம் செய்து வைக்க திட்டமிட்டிருந்தனர்.
ஷோபாவின் சகோதரர் சுரேந்தர். சுரேந்தரின் மகள் உறவுமுறை விஜய்யின் மருமகள். அதனால் தான் விஜய்யின் பெற்றோர் இப்படி ஒரு திருமணம் செய்ய நினைத்தனர். ஆனால் எல்லாம் மாறிவிட்டது “ என்றார்.
விஜய்யின் தீவிர ரசிகையான சங்கீதா இருவரும் நண்பர்களானார்கள், இது இறுதியில் திருமணத்திற்கு வழிவகுத்தது.
ஆனால் கடந்த சில ஆண்டுகளாகவே இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. விஜய் படங்களின் வெளியீட்டு விழாக்கோ, மற்ற நிகழ்ச்சிகளுக்கோ சங்கீதாவை காணவில்லை என்பதே வதந்திகளுக்கு காரணம்.
ஆனால், பிரிந்தது வெறும் வதந்தி என சொல்லப்படுகிறது. மகள் லண்டனில் படித்து வருவதால் சங்கீத் தனது மகளுடன் லண்டனில் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என்பது தெரியவில்லை. விஜய் மற்றும் அவரது குடும்பத்தினர் அனைத்து செய்திகள் மற்றும் வதந்திகள் குறித்து மௌனம் காத்து வருகின்றனர்.
லியோ படத்தின் வெற்றிக்கு பிறகு விஜய் தற்போது தனது 68வது படத்தில் பிஸியாக இருக்கிறார். இந்த படத்தை பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்குகிறார். இப்படத்தில் நடிகர் பிரசாத், பிரபுதேவா, சினேகா, ஜெயராம், மைக் மோகன், லைலா உள்ளிட்ட பெரும் நட்சத்திர பட்டாளமே இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் படம் இது.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.
டாபிக்ஸ்