Sangeetha: ‘சின்ன பையன கல்யாணம் பண்ணிருக்கேனா; நல்லவர் போல நடிச்சி ஏமாத்திட்டார்; அந்த வருஷம் நான் பட்ட கஷ்டம்’- சங்கீதா
Sangeetha: உண்மையில் அந்த வருடத்தில் நான் மிக மிக கஷ்டப்பட்டு கொண்டிருந்தேன். கிட்டத்தட்ட வெளி உலகையே மறந்து, எங்களுக்குள் இருக்கக்கூடிய பிரச்சினையை எப்படி தீர்ப்பது என்பதில் மூழ்கி இருந்தேன். - சங்கீதா பேட்டி!

Sangeetha: நடிகை சங்கீதா தனக்கும், தன்னுடைய கணவரான கிருஷ்ஷூக்கும் நடந்த முட்டல் மோதல்கள் குறித்து பிஹைண்ட் வுட்ஸ் சேனலுக்கு பேசி இருக்கிறார்.
இது குறித்து அவர் பேசும் போது, “ஒரு விருது நிகழ்ச்சியில் நான் க்ரிஷ்ஷூக்கு சிறந்த பாடகருக்கான விருதை கொடுத்தேன். அப்போதுதான் நான் முதன் முறையாக அவரை சந்தித்தேன். நான் கிருஷ் என்ற பெயரைச் சொன்னதும், மிகவும் அழகாக அவர் நடந்து வந்தார். அன்றை மாலையே நாங்கள் ஒன்றாக சேர்ந்து சாப்பிட்டோம்.
நல்லவர் போல நடித்து விட்டார்
அந்த டின்னரில் அவர் மிகவும் நல்லவர் போல என்னிடம் நடித்து விட்டார். நான் அப்போதே கொஞ்சம் உஷாராக இருந்திருக்க வேண்டும். அந்த சமயத்தில்தான் என்னுடைய வீட்டிலும் மாப்பிள்ளை பார்த்துக் கொண்டிருந்தார்கள். இதையடுத்து நான் என்னுடைய வீட்டில் மாப்பிள்ளை பார்த்தால் க்ரிஷ் போல ஒரு பையனை பாருங்கள் என்று கூறினேன். அதற்கு அம்மா மிகவும் சின்ன பையனாக இருக்கிறானே என்று கேட்டார். நான் கிரிஷ்ஷை பார்த்தவுடன் எனக்கும் அப்படித்தான் தோன்றியது. நான் அவரை சந்தித்த போது கேட்ட முதல் கேள்வி உங்களுடைய வயது என்ன என்பதுதான். உண்மையில் கிருஷ் என்னை விட 2 வயது மூத்தவர்.