எனக்கு 5 நிமிஷம் போதும்.. எல்லாத்துக்கும் என்கிட்ட காசு இருக்கு.. சாய் பல்லவியா இப்படி சொல்லியது?
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  எனக்கு 5 நிமிஷம் போதும்.. எல்லாத்துக்கும் என்கிட்ட காசு இருக்கு.. சாய் பல்லவியா இப்படி சொல்லியது?

எனக்கு 5 நிமிஷம் போதும்.. எல்லாத்துக்கும் என்கிட்ட காசு இருக்கு.. சாய் பல்லவியா இப்படி சொல்லியது?

Malavica Natarajan HT Tamil
Published Oct 07, 2024 03:04 PM IST

மற்றவர்களக்கு உதவி செய்யும் அளவிற்கு தன்னிடம் காசு இருப்பதாக நடிகை சாய்பல்லவி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். இதை அவரது ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

எனக்கு 5 நிமிஷம் போதும்.. எல்லாத்துக்கும் என்கிட்ட காசு இருக்கு.. சாய் பல்லவியா இப்படி சொல்லியது?
எனக்கு 5 நிமிஷம் போதும்.. எல்லாத்துக்கும் என்கிட்ட காசு இருக்கு.. சாய் பல்லவியா இப்படி சொல்லியது?

நடிகை சாய் பல்லவி சிறு வயதாக இருந்தபோது, அவரின் குடும்ப பொருளாதாரம் நடித்தர வர்க்கத்தை சார்ந்ததாகவே இருந்ததாம். ஆனால், அதுபற்றி எந்த புரிதலும் இல்லாததால், தன்னிடம் இருக்கும் காசு மற்றும் பொருளை வைத்து பலருக்கும் உதவி செய்வாராம். இதனால், தன்னை பெரும் பணக்கார பெண் என அவரே நினைத்துக் கொள்வாராம்.

ஆனால், காலம் போக போக தன்னுடைய குடும்ப சூழல் என்ன என்பதை அவர் புரிந்துகொண்டாராம். தற்போது நல்லபடியாக படித்து மருத்துவரானதுடன் சினிமாவிலும் நன்றாக சம்பாதிப்பதால், இப்போது நிஜமாகவே நான் பணக்கார குடும்பத்தை சேர்ந்த பெண்தான். இப்போது என்னால் அனைவருக்கும் உதவி செய்ய முடியும் எனவும் கூறியுள்ளார். இவரது இந்தப் பேச்சைக் கேட்ட ரசிகர்கள் சாய் பல்லவியின் நல்ல குணத்தை பாராட்டி வருகின்றனர் அதுமட்டுமின்றி, அதனை பெருமையாகக் கூறி ஷேர் செய்து வருகின்றனர்.

ரசிகர்கள் படை கொண்ட சாய் பல்லவி

நடிகை சாய்பல்லவிக்கு அறிமுகமே தேவையில்லை. பிரேமம் திரைப்படத்தில் நடித்ததின் மூலமாக மலையாளம் மட்டுமில்லாமல், தமிழிலும் ஏகோபித்த ரசிகர்களை பெற்ற இவர் தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமான கதாநாயகியாக வலம் வருகிறார்.

மேஜர் முகுந்தனின் மனைவி

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் ராணுவ வீரராக நடித்துள்ள திரைப்படம் அமரன். ராணுவ வீரர் முகுந்த் வரதராஜின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனின் காதல் மனைவியாக நடித்துள்ளார் சாய் பல்லவி. இந்தப் படத்தில் இவரது கதாப்பாத்திரத்திற்கான வீடியோ வெளியாகி பலரது மனதையும் கொள்ளை கொண்டது.

தீவிரவாதிகளின் தாக்குதலில் வீரமரணமடைந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்று சம்பவங்களை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட அமரன் படத்தில் நடிகை சாய் பல்லவி இந்து ரெபேக்கா வர்கீஸாக வாழ்ந்துள்ளதாக அவரே சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறி இருந்தார். இந்தப் படம் இம்மாதம் 31ம் தேதி திரைக்கு வரவுள்ளது

நான் இப்போது பணக்காரி

இந்நிலையில், அவரது பேட்டி ஒன்றை ரசிகர்கள் அதிகளவு ஷேர் செய்துள்ளனர். அதில் பேசிய சாய்பல்லவி, சிறு வயதாக இருந்தபோது, அவரின் குடும்ப பொருளாதாரம் நடித்தர வர்க்கத்தை சார்ந்ததாகவே இருந்ததாம். ஆனால், அதுபற்றி எந்த புரிதலும் இல்லாததால், தன்னிடம் இருக்கும் காசு மற்றும் பொருளை வைத்து பலருக்கும் உதவி செய்வாராம். இதனால், தன்னை பெரும் பணக்கார பெண் என அவரே நினைத்துக் கொள்வாராம்.

ஆனால், காலம் போக போக தன்னுடைய குடும்ப சூழல் என்ன என்பதை அவர் புரிந்துகொண்டாராம். தற்போது நல்லபடியாக படித்து மருத்துவரானதுடன் சினிமாவிலும் நன்றாக சம்பாதிப்பதால், இப்போது நிஜமாகவே நான் பணக்கார குடும்பத்தை சேர்ந்த பெண்தான். இப்போது என்னால் அனைவருக்கும் உதவி செய்ய முடியும் எனவும் கூறியுள்ளார்.

உடை எனது சௌகரியத்திற்கானது

அதுமட்டுமின்றி, வீட்டில் இருக்கும் போது தனக்கு எந்த உடை சௌகரியமாக இருக்கிறதோ அந்த உடை அணிவேன். அது பாரம்பரிய உடையாக இருந்தாலும் சரி வெஸ்ட்ர்ன் உடையாக இருந்தாலும் சரி அந்த சமயத்தில் எது சரியாக உள்ளதோ அதைத்தான் உடுத்துவேன். ஆனால், வீட்டை விட்டு வெளியே வந்தால், பாரம்பரிய உடைக்கு மாறிவிடுவேன். அத்துடன் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் போது புடவை அணிவதுதான் தனக்கு சரியாக தோன்றுகிறது எனக் கூறியுள்ளார். இதனை அவரது ரசிகர்கள் இப்போது வைரலாக்கி வருகின்றனர்.

Whats_app_banner