Sai Pallavi: இவரைத்தான் திருமணம் செய்யனும்..அப்பாவின் கண்டிஷன்! பிளாக் மெயில் கூடாது - திருமணம் பற்றி சாய் பல்லவி-sai pallavi talks about her family tradition for marriage and actress look video in amaran movie - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Sai Pallavi: இவரைத்தான் திருமணம் செய்யனும்..அப்பாவின் கண்டிஷன்! பிளாக் மெயில் கூடாது - திருமணம் பற்றி சாய் பல்லவி

Sai Pallavi: இவரைத்தான் திருமணம் செய்யனும்..அப்பாவின் கண்டிஷன்! பிளாக் மெயில் கூடாது - திருமணம் பற்றி சாய் பல்லவி

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Sep 27, 2024 02:50 PM IST

Sai Pallavi Marriage: வரைத்தான் திருமணம் செய்யனும் என நான் சிறு வயதில் இருந்தே சொல்லி வளர்க்கப்பட்டேன். அப்பாவின் கண்டிஷன் ஒரு புறம் இருந்தாலும் திருமணம் குறித்து பிள்ளைகளிடம் பிளாக் மெயில் கூடாது என்று கூறியுள்ளேன் என நடிகை சாய் பல்லவி தனது திருமணம் குறித்து பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

Sai Pallavi: இவரைத்தான் திருமணம் செய்யனும்..அப்பாவின் கண்டிஷன்! பிளாக் மெயில் கூடாது - திருமணம் பற்றி சாய் பல்லவி
Sai Pallavi: இவரைத்தான் திருமணம் செய்யனும்..அப்பாவின் கண்டிஷன்! பிளாக் மெயில் கூடாது - திருமணம் பற்றி சாய் பல்லவி

சினிமாவில் நடிப்பதற்கு முன்னர் பல்வேறு டிவி நிகழ்ச்சிகளில் டான்ஸ் ஷோக்களில் தோன்றி தனது அற்புதமான நடனத்தால் பலரது கவனத்தை ஈர்த்தவராக சாய் பல்லவி இருந்துள்ளார்.

சாய் பல்லவியின் அமரன் லுக்

இதையடுத்து சாய் பல்லவி, சிவகார்த்திகேயன் ஜோடியாக நடித்திருக்கும் புதிய படம் அமரன். தீபாவளி வெளியீடாக இந்த படம் வரவிருக்கிறது. இந்த படத்தில் சாய் பல்லவி கேரக்டரில் டீசரை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.

அமரன் திரைப்படம் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்த மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகியுள்ளது. படத்தில் சாய் பல்லவி முகுந்தின் மனைவியான இந்து ரெபாக்கா வர்கீஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இதையடுத்து மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜன் மனைவி இந்து, குடியரசு தின விழாவில் பிரதமரிடம் நினைவு பரிசு வாங்கிய காட்சிகளோடு தொடங்கி, அது அப்படியே சாய் பல்லவியாக மாறுவது போல் இந்த டீசர் காட்சி இடம்பிடித்துள்ளது.

அத்துடன் படத்தில் சாய் பல்லவியின் க்யூட் மற்றும் காதல் காட்சிகளும் இடம்பிடித்துள்ளன.

திருமணம் குறித்து சாய் பல்லவி

அழகு மட்டுமல்லாமல், திறமையும் மிக்க நடிகை என்று பெயரெடுத்திருக்கும் சாய் பல்லவி, திருமணம் குறித்து அவ்வப்போது வதந்திகளும் வெளிவருவதுண்டு.

சமீபத்தில் அவரது தங்கையும், நடிகையுமான பூஜா கண்ணன் திருமணம் லண்டனில் கோலாகலமாக நடைபெற்று முடிந்தது. இதனால் சாய் பல்லவியும் விரைவில் திருமணம் செய்து கொள்வார் என தகவல்கள் உலா வருகின்றன. அத்துடன் அவர் யாருடன் ரிலேஷன்ஷிப்பில் இருக்கிறார் என்கிற ரீதியில் பல்வேறு வதந்திகளும் வெளியாகி கொண்டிருக்கின்றன.

இந்த சூழ்நிலையில், திருமணம் குறித்து சாய் பல்லவி பல பேட்டிகளில் பேசியுள்ளார். அந்த வகையில் 2020இல் பிரபல இணையத்தளமான தி நியூஸ் மினிட் தளத்துக்கு அவர் அளித்த பேட்டியில், தனது திருமணம் இவருடன் தான் நடக்கும் என தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் பேசியதாவது, "நான் பெரியவள் ஆனதும், படுக இனத்தை சேர்ந்தவரை தான் திருமணம் செய்ய வேண்டும் என என்னிடம் சொல்லி சொல்லி வளர்த்துள்ளார்கள். நிறைய பேர் இந்த சமூகத்தை விட்டு மாற்று சமூகத்தினரை திருமணம் செய்து கொண்டுள்ளனர். ஆனால் கோத்தகிரியில் உள்ள ஹட்டியில் வசிக்கவில்லை.

என் அப்பாவும் அம்மாவும் கோயம்புத்தூரில் வசிக்கிறார்கள். அதனால் மற்றவர்கள் தங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்ற அழுத்தம் அவர்களுக்கு இல்லை" என்றார்.

திருமணம் விஷயத்தில் பிள்ளைகளிடம் பிளாக் மெயில் கூடாது

தொடர்ந்து பேசிய அவர், "ஒருவேளை மாற்று சமூகத்தினரை திருமணம் செய்து கொண்டால், எங்களது சமூகத்தினரால் ஒதுக்கி வைக்கப்படுகிறார். அவர்களின் சொந்த கிராமத்தில் உள்ள மக்கள் திருமணங்கள், இறுதிச் சடங்குகள் மற்றும் பிற சமூக நிகழ்வுகளில் கலந்துகொள்வது உட்பட எந்தவொரு வகுப்புவாத நிகழ்வுகளிலிருந்தும் அவர்களை விலக்கத் தொடங்குகிறார்கள்.

எனவே இந்த விஷயத்தில் என் அப்பா மிகவும் அப்பாவியாக இருக்கிறார். இது எல்லா இடங்களிலும் நடக்கிறது.

எல்லோரும் தங்களது சமூகத்துக்குள்ளாகவே திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பது ஒரு கலாச்சாரமாகவே பார்க்கப்படுகிறது.

எதுவாக இருந்தாலும், நீங்கள் விரும்புவதைத் தேர்ந்தெடுக்கும்படி உங்களது குழந்தையை பிளாக் மெயில் செய்ய முடியாது. இந்த விஷயம் எனக்கு தொந்தரவு தருவதாக இருப்பதாக அவரிடம் கூறினேன்" என்றார்.

சாய் பல்லவி புதிய படங்கள்

சாய் பல்லவி தற்போது தெலுங்கில் தாண்டல் என்ற படத்தில் நடித்து வருகிறார். அதேபோல் இந்தியில் ராமயணா படத்தில் சீதையாக நடித்து வருகிறார். இதுதவிர மேலும் ஒரு இந்தி படத்திலும் நடிக்கிறார்.

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.