Actress Rambha: கைவிடாத சாய்பாபா.. ‘என்ன புண்ணியம் பண்ணேனோ இவரு எனக்கு..’ - ரம்பா காதல் கதை!
அம்மாவிற்கு தெரியாமல் நான் அதை வாங்கி பத்திரமாக வைத்திருந்தேன். ஒவ்வொரு காதலர் தினத்தன்றும் அந்த அட்டையில் ஐ லவ் யூ என்னுடைய வருங்கால கணவரே.. என்று எழுதுவேன். அந்த அட்டையை நான் இவருக்கு 2009இல் கொடுத்தேன்.

ரம்பா!
நடிகை ரம்பா தன்னுடைய காதல் கதையை அண்மையில் சினி உலகம் சேனலுக்கு கொடுத்த பேட்டியில் பகிர்ந்து இருக்கிறார். அவர் பேசும் போது, “எனக்கு சாய்பாபா மீது மிகவும் பக்தி உண்டு. வெளியே காண்பித்துக் கொள்ள மாட்டேன். ஆனால் உள்ளுக்குள்ளேயே சாய்பாபாவிடம்… பாபா எனக்கு நல்ல கணவன் வேண்டும் என்று அடிக்கடி வேண்டிக்கொள்வேன்.
ஒருமுறை சிகாகோவிற்கு சென்றிருந்த பொழுது, அங்கு காதலர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டு கொண்டிருந்தது; அங்கு காதலை வெளிப்படுத்தும் வகையில் இருந்த ஒரு அட்டை எனக்கு மிகவும் பிடித்திருந்தது.