Ajith: அஜித் படத்தில் நடிக்க மறுத்த ரம்பா.. காரணம் என்ன தெரியுமா?
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Ajith: அஜித் படத்தில் நடிக்க மறுத்த ரம்பா.. காரணம் என்ன தெரியுமா?

Ajith: அஜித் படத்தில் நடிக்க மறுத்த ரம்பா.. காரணம் என்ன தெரியுமா?

Aarthi V HT Tamil Published Dec 25, 2023 07:00 AM IST
Aarthi V HT Tamil
Published Dec 25, 2023 07:00 AM IST

அஜித் படத்தில் ரம்பா நடிக்க மறுப்பு சொல்லி இருக்கிறார்.

அஜித், ரம்பா
அஜித், ரம்பா

தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் நடித்தாலும் ரம்பாவுக்கு தமிழ், தெலுங்கில் தான் அதிக வாய்ப்புகள் கிடைத்தன. ரம்பாவை தமிழுக்கு அறிமுகம் செய்தது இயக்குநர் சுந்தர் சி. இவர் இயக்கிய முதல் படம் கார்த்திக் நடித்த உள்ளத்தை அள்ளித்தா. இந்தப் படம் ரம்பாவின் கேரியரில் பெரும் திருப்புமுனையாக அமைந்தது. முதல் படமே மாபெரும் வெற்றி பெற்ற பிறகு கோலிவுட்டில் இருந்து ரம்பாவுக்கு முன்னணி கதாபாத்திரங்கள் உட்பட பல வாய்ப்புகள் வந்தன.

விஜய், அஜித், ரஜினிகாந்த், கமல் ஹாசன் என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் அனைவரின் கதாநாயகியாக நடித்தார். தமிழில் கிளாமராகவும் ஜொலித்தார். ஆனால் 2010 ஆம் ஆண்டு திருமணமான பிறகு அவர் சினிமாவை விட்டு வெளியேறினார். அவர் இந்திரகுமார் என்ற தொழிலதிபரை மணந்தார்.

இன்று இருவரும் மூன்று குழந்தைகளுடன் கனடாவில் செட்டில் ஆகிவிட்டனர்.

இந்நிலையில், கிட்டத்தட்ட 13 வருடங்களாக சினிமாவில் இருந்து ஒதுங்கியிருந்த ரம்பாவும் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்க தயாராகி வருகிறார்.

அதற்காக நடிகை புதுபுது கதைகளை கேட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ரம்பாவும் சமீபத்தில் சில பேட்டிகள் கொடுத்து உள்ளார்.

அதில் ஒன்றில், அஜித்தின் படம் ஒன்றை தவறவிட்டு இருக்கிறார். அஜீத் நடிப்பில் எஸ்.ஜே.சூர்யா இயக்கிய பிளாக் பஸ்டர் ஹிட் படமான வாலியில், ரம்பா நடிப்பதாக இருந்தது.

எஸ்.ஜே.சூர்யா முதலில் ரம்பாவை கதாநாயகியாக கண்டு பிடித்தார். சிம்ரன் நடித்த கதாபாத்திரத்திற்காக முதலில் ரம்பாவை அணுகினார். அதன் பிறகு அவர் போட்டோ ஷூட் செய்தார். ஆனால் சில குழப்பங்களால் ரம்பா படத்தில் இருந்து விலகினார்.

ஆனால் படத்தில் நடிக்காததற்கு வருத்தமில்லை என அவர் பேசி இருந்தார். சிம்ரன் அந்த கேரக்டரை சிறப்பாக செய்துள்ளார், தான் நடித்திருந்தால் கூட இவ்வளவு சிறப்பாக நடித்திருக்க மாட்டார் என்றும் ரம்பா கூறியுள்ளார்.

வாலி படத்தில் இருந்து மேலும் இரண்டு சூப்பர் ஹீரோயின்கள் விலகியது குறித்து எஸ்.ஜே.சூர்யாவும் முன்பே தெரிவித்திருந்தார். தேதி பிரச்னையால் ரோஜாவும், மீனாவும் வாலியில் இருந்து விலகினர்.

இவர்களைத் தவிர அப்போது தமிழ், தெலுங்கு படங்களில் ஜொலித்த கீர்த்தி ரெட்டியும் வாலி படத்தில் இருந்து விலகினார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.