Radhika: பெரிய நடிகையை சரக்கடிச்சிட்டு வந்து சீண்டிய உச்ச நடிகர்.. நேரில் பார்த்து வாங்கிவிட்ட நடிகை ராதிகா-actress radhika scolded the top actor who pissed off the big actress after drinking alcohol - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Radhika: பெரிய நடிகையை சரக்கடிச்சிட்டு வந்து சீண்டிய உச்ச நடிகர்.. நேரில் பார்த்து வாங்கிவிட்ட நடிகை ராதிகா

Radhika: பெரிய நடிகையை சரக்கடிச்சிட்டு வந்து சீண்டிய உச்ச நடிகர்.. நேரில் பார்த்து வாங்கிவிட்ட நடிகை ராதிகா

Marimuthu M HT Tamil
Sep 03, 2024 12:18 AM IST

Radhika: பெரிய நடிகையை சரக்கடிச்சிட்டு வந்து சீண்டிய உச்ச நடிகர் மற்றும் நேரில் பார்த்து வாங்கிவிட்ட நடிகை ராதிகா பற்றிய செய்தியைக் கீழே காண்போம்.

Radhika:பெரிய நடிகையை சரக்கடிச்சிட்டு வந்து சீண்டிய உச்ச நடிகர்.. நேரில் வாங்கிவிட்ட நடிகை ராதிகா
Radhika:பெரிய நடிகையை சரக்கடிச்சிட்டு வந்து சீண்டிய உச்ச நடிகர்.. நேரில் வாங்கிவிட்ட நடிகை ராதிகா

பெண் நடிகைகளுக்கு பாதுகாப்பு முக்கியம் என்பதை வலியுறுத்தி நடிகை ராதிகா அளித்த பேட்டியில், ’’கமிட்டி வைக்கிற அளவுக்கு தமிழில் நிறைய அக்கிரமம் நடக்குதா அப்படியெல்லாம் கிடையாது. தமிழில் நிறைய குறைஞ்சுபோச்சு. நிறையப் படிச்சுவங்க வந்திருக்காங்க. அவங்கவங்களோட பழக்கவழக்கம் மாறிப்போச்சு. அணுகுமுறை மாறிப்போச்சு. எல்லாரும் ரொம்ப தன்னம்பிக்கையாக இருக்காங்க. ரொம்ப புத்திசாலித்தனமாக இருக்காங்க. எங்கோ ஒரு இடத்தில் நடக்கும்முன்னு நான் நினைக்கிறேன். கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்டா நடிக்கிறவங்க பக்கம் தவறுகள் நடக்க வாய்ப்பு இருக்கு.

மோகன் லால் செட்டிலேயே எனக்கு நடந்தது: நடிகை ராதிகா

நான் ஏன் இதுக்கு முன்னாடி சொல்லவில்லைன்னா, அந்த இடத்தில் நான் என்ன பண்ணனுமோ அதைப் பண்ணிட்டேன். என்கிட்ட மோகன் லால் சாரே கேட்டார், ஐயோ இது என் செட்டில் நடந்திருச்சான்னு.. அப்போதும் நான், பரவாயில்லை சார்.. நான் பேர் சொல்ல விரும்பல.. இது நீங்களோ வேற யாரோன்னு எல்லாம் சொல்ல விரும்பல அப்படின்னு சொல்லிட்டேன்.. பெரிய ஆட்கள் யாரும் அந்த செட்டில் இல்லை. நான் நடந்துபோகும்போது ஒருத்தன் வீடியோ எடுத்து இருந்தேன். அதை வாங்கிப் பார்த்தேன். அது தவறாக இருந்துச்சு. அந்த பாஷை சரியாக தெரியாததால், தமிழ் தெரிஞ்ச நபர்கிட்ட கேட்டுட்டு, சம்பந்தப்பட்ட ஆளை வாங்கு வாங்குன்னு வாங்கிட்டேன்.

பின்ன, புரொடக்‌ஷனை கூப்பிட்டு பாதுகாப்பு கொடுக்கச்சொல்லி சத்தம்போட்டேன். ஹேமா கமிட்டியில் சொன்னது பெண் நடிகைகளுக்குப் பாதுகாப்புதரணும்னு தான் சொன்னாங்க. அதைத் தான் நானும் பேசவிரும்பினேன்.

என் வாழ்க்கையில் எந்தப் பிரச்னை வந்தாலும் தனியாகவே அதை எதிர்கொண்டு இருக்கேன். பெரிய சண்டை நடக்கும். சில ஹீரோக்கள் தான் பார்ப்பாங்க. சில ஹீரோக்கள் கண்டுக்கிறாம போய்விடுவாங்க. அதனால் தான் சொல்றேன், பிறவியிலேயே பெண்கள் ரொம்ப ஸ்ட்ராங் ஆனவங்க.

பெண்களால் எதையும் செய்யமுடியும். ஒரு மார்க்கெட்டிங் தந்திரத்தில் பின்னாடி தள்ளிட்டாங்க. நாங்களும் போராடிட்டு தான் இருக்கோம்.

தவறு பண்ணுனவங்க அனுபவிச்சிட்டு இருக்காங்க: நடிகை ராதிகா

ஊடகத்தினரே உங்களுக்குத் தெரியாதா சினிமாவில் பாலியல் தொல்லை நடக்கிறது பற்றி. எவன் எவனோ பக்கத்தில் நின்னு பார்த்தவன் மாதிரி பேசிட்டு இருக்கான். இதை ஊடகத்திடம் சொன்னால், நீங்கள் என்ன செஞ்சிடுவீங்க. தண்டனை எல்லாம் கொடுக்கமுடியாது. நான் யார் பெயரையும் சொல்ல விரும்பலை. நான் படுத்துக்கிட்டு துப்பினால், அது என் மூஞ்சியில் தான் விழும். இதில் நிறையப் பேர் சம்பந்தப்பட்டிருக்காங்க. அங்கங்க தவறு பண்ணி இருக்காங்க. இன்னிக்கு அதுக்கெல்லாம் அனுபவிச்சிட்டு இருக்காங்க. அப்படி அனுபவிச்சவங்களை எல்லாம் நான் பார்த்திட்டேன். அதைப்பற்றி நான் இப்போதுபேச விரும்பலை. அந்த இடத்தில் நான் எப்படி பண்ணனுமோ, நான் ஹேண்டில் பண்ணியிருக்கேன்.

அதேமாதிரி நிறைய நடிகைகளும் இடத்துக்கு ஏற்றமாதிரி ஹேண்டில் பண்ணியிருக்காங்க. இதையெல்லாம் மீடியாகிட்டப் பேசி என்ன செய்ய.. நாங்க பலவீனமான பெண்கள் கிடையாது. நாங்க ஸ்ட்ராங் ஆன பெண்கள்.

இப்போது வரக்கூடிய சந்ததிகளுக்கு, உங்களது பாதுகாப்பினை நீங்கள் சரிசெய்துகொள்ளுங்கள் என்கிறோம். நான் நடிகர் சங்கத்தில் நாசரிடம் சொன்னது, நடிகைகளைப் பாதுகாக்க ஒரு சக்திமிக்க கமிட்டியை உருவாக்குங்கள் என்றேன். அதில் ஒரு காவல்துறை அலுவலரோ, ஒரு வழக்கறிஞரோ இருந்தால், இவர்களிடம் சொன்னால் பிரச்னை நடக்கும் அப்படிங்கிற மாதிரி ஒரு சக்திமிக்க கமிட்டி வையுங்க.

பிரபல நடிகையைக் காப்பாற்றினேன்: நடிகை ராதிகா:-

இளைஞர்களின் மனநிலை நாளுக்கு நாள் சீரழிந்துகொண்டுதான் போகிறது. முன்னாடி எல்லாம் என்கூட சில நடிகைகள் அவங்களோட பாதுகாப்புக்காக வந்து உட்கார்ந்துக்குவாங்க. அப்படி ஒரு பெரிய நடிகை. பிரபல நடிகரை கல்யாணம் பண்ணியிருக்கு. நான் இருந்த இடத்தில் ஒரு நடிகர் குடிச்சிட்டு வந்து பிரச்னை பண்ணினார். என் கணவர் பக்கத்தில் இருந்தாங்க. என் கணவர் தயவுசெய்து எதுவும் சொல்லாத, தண்ணீ குடிச்சிருக்காங்க அப்படின்னு சொல்றாங்க. திடீர்னு என் கணவர் வேறுயாரோ கூப்பிட்டாங்கன்னு போயிட்டார். அந்த சமயம் நான் என்னென்ன சம்பந்தப்பட்ட நபரை பேசமுடியுமோ, அதைப் பேசிட்டேன். அப்போது சம்பந்தப்பட்ட பொண்ணு என்னை கட்டிபிடிச்சு, எனக்கு பாஷை தெரியாது.. நீங்க என்னை காப்பாத்தினதுபுரியுதுன்னு, ஐ லவ் யூன்னு சொல்லி இன்றுவரை நெருங்கிய தோழியாக இருக்காங்க. தவறு நடக்குமிடத்தில் தட்டிக்கேட்கிறோம். அதை சரிசெய்கிறோம். அதைக்கொண்டு வந்து போலீஸ் ஸ்டேஷனிலோ, மீடியோவிலோ சொல்லி என்ன பண்ணப்போகிறோம்.

எனக்கு இருக்கிற வருத்தம் என்னவென்றால், நிறைய தவறு செய்தவங்களை கண்ணால் பார்த்து இருக்கேன். ஆனால், சமூகம் தவறு செய்த ஆண்களைத்தான் மேலே தூக்கி வைச்சு கொண்டாடுறீங்க. ஒவ்வொரு ஹீரோயின்ஸுக்குப் பின்னாடியும் ஒரு கதை இருக்குங்க. எனக்குத் தெரியும். அந்த ஹீரோயின்ஸ் எல்லாம், அப்படி அந்த நடிகரை புகழும்போது வாய் அடைச்சு உட்கார்ந்து இருப்போம். அதைத்தான் நான் தோல்வியாக உணர்கிறேன். ஒரு பக்கம் கமலா ஹாரிஸும், சுனிதா வில்லியம்ஸும் இருக்கிற சமூகத்தில்தான் நாங்கள் இன்னும் இதைப்பற்றி பேசிக்கொண்டு இருக்கிறோம்’’ என்றார், நடிகை ராதிகா.

 

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.