Shakila: நடு ராத்திரியில ரூபா ஸ்ரீ -யை படுக்கைக்கு வரச்சொல்லி.. ஹீரோ கூப்பிட்டா நானே போவேன்’ -ஷகிலா
Shakila: அட்ஜஸ்ட்மென்டிற்கு அழைப்பதெல்லாம் இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் தான். நடிகர்கள் அட்ஜஸ்ட்மென்டிற்கு அழைக்கும் போது கதாநாயகிகளே சென்று விடுவார்கள். காரணம் அவர் ஹீரோ. - ஷகிலா!

நடிகை ரூபா ஸ்ரீ நடந்த பாலியல் வன்கொடுமை பற்றி நடிகை ஷகிலா கலாட்டா சேனலுக்கு பேசி இருக்கிறார். அதில் அவர் பேசும் போது “பெரும்பாலும் நடிகர்கள் அட்ஜஸ்ட்மென்டிற்கு அழைப்பதில்லை. அட்ஜஸ்ட்மென்டிற்கு அழைப்பதெல்லாம் இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் தான். நடிகர்கள் அட்ஜஸ்ட்மென்டிற்கு அழைக்கும் போது கதாநாயகிகளே சென்று விடுவார்கள். காரணம் அவர் ஹீரோ. அவர் நம்மை கூப்பிட மாட்டாரா என்று கூட நினைப்பு இருக்கும். அதுதான் பெண்ணுடைய மனது.
எல்லா பெண்களும் அப்படி இல்லை
எல்லா பெண்களுக்கும் அது இல்லாமல் இருக்கலாம். ஆனால் எனக்குத் தெரிந்த சில பெண்களுக்கும், எனக்கும் அப்படித்தான் இருக்கும். நீங்கள் பார்த்தால் ஹீரோவுடனான அட்ஜஸ்ட்மென்ட் பெரிய கம்ப்ளைன்ட் ஆக வந்திருக்காது. இயக்குநர் கூப்பிடுவது, மேனேஜர் கூப்பிடுவது, தயாரிப்பாளர் கூப்பிடுவது தான் இங்கு மிகப்பெரிய பிரச்சினையாக வெடித்திருக்கும். நடிகை ரூபாஸ்ரீ உடன் நான் ஒரு படத்தில் நடித்தேன். அந்த படத்தில் அவர் கதாநாயகியாக நடித்தார். நான் துணை கதாபாத்திரத்தில் நடித்தேன்.