Actress Radhika Sarathkumar: ஹேமா கமிட்டி அறிக்கை வெளியாக 4 ஆண்டுகள் ஆனது எப்படி? - விளக்கும் நடிகை ராதிகா சரத்குமார்..!
Actress Radhika Sarathkumar: மலையாள சினிமா துறையில் பெண்கள் எதிர்கொள்ளும் துன்புறுத்தல்கள் குறித்த நீதிபதி கே.ஹேமா கமிட்டி அறிக்கையின் திருத்தப்பட்ட பதிப்பு இந்த மாத தொடக்கத்தில் பகிரங்கப்படுத்தப்பட்டது.
Actress Radhika Sarathkumar: மலையாள திரையுலகில் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் துன்புறுத்தல்கள் மற்றும் சுரண்டல்கள் குறித்த அதிர்ச்சியூட்டும் விவரங்களை சமீபத்தில் வெளியிடப்பட்ட ஹேமா கமிட்டி அறிக்கை சுட்டிகாட்டுகின்றது. இதுகுறித்து நடிகை ராதிகா சரத்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.
4 வருடங்கள் ஆனது குறித்து..
நடிகை ராதிகா கூறுகையில், ஹேமா கமிட்டி அறிக்கையின் முடிவுகளுக்கு வழிவகுத்த வுமன் இன் சினிமா கலெக்டிவ் (டபிள்யூ.சி.சி) முன்முயற்சி குறித்து ராதிகா விரிவாக விளக்கினார். இந்த அறிக்கை நான்கு ஆண்டுகளாக பகிரங்கப்படுத்தப்படவில்லை என்றும், நீதிமன்ற உத்தரவுக்குப் பின்னரே விவரங்கள் பகிரங்கப்படுத்தப்பட்டன என்றும் அவர் கூறினார்.
ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திற்கு நடிகை ராதிகா அளித்த பேட்டியில், "ஹேமா கமிட்டி டபிள்யூ.சி.சி என்ற பெண்களின் குழுவால் தொடங்கப்பட்டது. இது பெண்களின் உரிமைகள் மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளுக்கு ஆதரவாக துணை நிற்கிறது. அவர்கள் ஹேமா கமிட்டிக்குச் சென்றிருந்தனர். ஆனால், அறிக்கை தயாரிக்கப்பட்ட பிறகு, அது வெளியிடப்படவில்லை. அது அரசுக்கு சென்று, அவர்கள் நீதிமன்றம் செல்லும் வரை நான்கு ஆண்டுகள் அங்கேயே கிடந்தது.
ஹேமா கமிட்டி அறிக்கையை வெளியிடுமாறு நீதிமன்றம் அவர்களிடம் சொல்ல வேண்டியிருந்தது. எனவே அது வெளிவந்தவுடன், நிறைய குற்றச்சாட்டுகள் வந்தன. மலையாள திரையுலகில் டாப் பிரிவில் இருக்கும் கலைஞர்களின் பெயர்களை குறிப்பிடுவது கேரளாவில் விகிதாச்சாரத்தை மீறி சென்றுள்ளது.
"இந்த முழு விஷயமும் பெண்களின் பாதுகாப்பிற்காக... எனது நீண்ட பணிக்காலத்தில், நாம் மாறிக்கொண்டே இருக்க வேண்டிய பல விஷயங்களை நான் பார்த்திருக்கிறேன். காலம் மாறிவிட்டது, மனிதர்களின் குணாதிசயங்கள் மாறிவிட்டன. கல்வியும் வாழ்க்கை முறையும் உயர்ந்துள்ளது. அதை எப்படி எதிர்கொள்கிறோம் என்பது மிகவும் முக்கியம்" என்று ராதிகா மேலும் கூறினார்.
மலையாள சினிமா துறையில் பெண்கள் எதிர்கொள்ளும் துன்புறுத்தல்கள் குறித்த நீதிபதி கே.ஹேமா கமிட்டி அறிக்கையின் திருத்தப்பட்ட பதிப்பு இந்த மாத தொடக்கத்தில் பகிரங்கப்படுத்தப்பட்டது. பெண் தொழில் வல்லுநர்கள் துன்புறுத்தல், சுரண்டல் மற்றும் மோசமாக நடத்தப்படுவது குறித்த அதிர்ச்சியூட்டும் தகவல்களை கொண்ட இந்த அறிக்கை முழு தொழில்துறையையும் புயலைக் கிளப்பியுள்ளது.
இதையடுத்து, மலையாள சினிமாவின் முக்கிய பிரபலங்கள், இயக்குனர் ரஞ்சித், நடிகர்கள் சித்திக், முகேஷ் உள்ளிட்ட பல நடிகர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த விவகாரத்திற்கு பிறகு நடிகர் மோகன்லால் மற்றும் பிற அம்மா (மலையாள திரைப்பட கலைஞர்கள் சங்கம்) உறுப்பினர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர்.
மவுனம் கலைத்த மம்மூட்டி
ஹேமா கமிட்டி பரிந்துரைகளை நான் வரவேற்கிறேன். தவறு செய்தவர்களுக்கான தண்டனையை நீதிமன்றம் உறுதி செய்யும். அதேவேளையில், சினிமாவில் அதிகார மையம் என்று எதுவும் இல்லை. சினிமா வாழ வேண்டும் என்று மலையாள நடிகர் மம்மூட்டி தெரிவித்துள்ளார்.
ஹேமா கமிட்டி
கடந்த 2017ஆம் ஆண்டில் காரில் நடிகை ஒருவர் கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டதாக எழுந்த புகாரை தொடர்ந்து நீதிபதி ஹேமா தலைமையிலான மூவர் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. இந்த குழு விசாரணை மேற்கொண்டு 2019-ல் அறிக்கை தாக்கல் செய்தது. ஆனால், இந்த அறிக்கையை வெளியிட தடை இருந்ததால் இதன் விவரங்கள் வெளியிடப்படாமல் இருந்தன. தற்போது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் ஹேமா கமிட்டி அறிக்கை குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டு அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்