Mohanlal car: மோகன் லால் கேரேஜில் புதிய கார் - விலை எவ்வளவு தெரியுமா?
மலையாள நடிகர் மோகன் லால் புதிய கார் ஒன்றை வாங்கி உள்ளார்.

மோகன் லால் கார்
மலையாள நடிகர் மோகன் லாலிடம் சுமார் அரை டஜன் சொகுசு கார்கள் உள்ளன. தற்போது அவரது கேரேஜில் புதிய கார் இணைந்து உள்ளது.
அவர் ஒரு வெள்ளை நிற ரேஞ்ச் ரோவர் எஸ்யூவி வாங்கி உள்ளார். அவர் காருடன் இருக்கும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மோகன் லால் தனது மனைவி சுசித்ராவுடன் ஷோரூமுக்கு சென்று கார் சாவியை வாங்கி கொண் டார். மோகன் லால் வாங்கிய ரேஞ்ச் ரோவர் ஆட்டோபயோகிராபி காரின் விலை சுமார் ஐந்து கோடி ரூபாய் என கூறப்படுகிறது.