தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Twitter Blue Tick: ட்விட்டர் ப்ளு டிக்கை இழந்த பிரபலங்கள்.. தக்க வைத்துகொண்ட கமல், சூர்யா - லிஸ்ட் இதோ!

Twitter Blue Tick: ட்விட்டர் ப்ளு டிக்கை இழந்த பிரபலங்கள்.. தக்க வைத்துகொண்ட கமல், சூர்யா - லிஸ்ட் இதோ!

Karthikeyan S HT Tamil
Apr 21, 2023 09:16 AM IST

Twitter Blue Tick: விஜய், தனுஷ், சிம்பு, சமந்தா உள்ளிட்டோரின் ட்விட்டர் கணக்கிலும் மாதா சந்தா ரூ.900 கட்டாததால் ப்ளு டிக் நீக்கப்பட்டுள்ளது.

விஜய், சிம்பு, சமந்தா
விஜய், சிம்பு, சமந்தா

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த சூழலில் பிரபலங்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்டோர் தங்களது ட்விட்டர் கணக்குக்கு பயன்படுத்தும் ப்ளூ டிக்குக்கு மாதா சந்தா கட்டணம் செலுத்த வேண்டும் என்று ட்விட்டர் நிறுவனம் அறிவித்திருந்தது. அதன்படி, ஏப்ரல் 20 ஆம் தேதிக்குள் கட்டணம் செலுத்தாத ட்விட்டர் கணக்குகளின் ப்ளூ டிக்குகள் அகற்றப்படும் என்று ட்விட்டர் சி.இ.ஓ எலான் மஸ்க் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் தற்போது சந்தா செலுத்தாத அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் கணக்கில் ப்ளூ டிக்கை ட்விட்டர் நிறுவனம் நீக்கியுள்ளது. அந்த வகையில், அமிதாப் பச்சன், ஷாருக்கான், ரஜினிகாந்த், விஜய், ஆலியா பட், சமந்தா, அனுஷ்கா ஷர்மா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோரின் ட்விட்டர் கணக்கிலும் மாதா சந்தா ரூ.900 கட்டாததால் ப்ளு டிக் நீக்கப்பட்டுள்ளது.

நடிகர் விஜய் ட்விட்டர் கணக்கு.
நடிகர் விஜய் ட்விட்டர் கணக்கு.

தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, கார்த்தி உள்ளிட்டோரின் கணக்கிலும் ப்ளு டிக் நீக்கப்பட்டிருக்கிறது. இயக்குநர்கல் ஷங்கர், லோகேஷ் கனகராஜ், அட்லீ, செல்வராகவன் ஆகியோரின் ட்விட்டர் கணக்கிலும் ப்ளு டிக் நீக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல் தோனி, விராட் கோலி, ரோஹித் சர்மா உள்ளிட்டோரின் கணக்குகளின் ப்ளூ டிக்கும் நீக்கப்பட்டுள்ளது.

நடிகர் சூர்யா ட்விட்டர் கணக்கு.
நடிகர் சூர்யா ட்விட்டர் கணக்கு.

மாதா சந்தா கட்டியதால் நடிகர்கள் கமல், சூர்யா உள்ளிட்டோரின் ப்ளூ டிக் நீக்கப்படவில்லை. இனி மாத சந்தா ரூ.900 கட்டினால் மட்டுமே அதிகாரப்பூர்வ கணக்கு என்பதற்கான வெரிஃபை அதாவது ப்ளு டிக் கிடைக்கும் எனத் தெரிகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்