நானும் அரசியல்வாதிதான்.. எனக்கு அந்த அளவுக்கு எல்லாம் அறிவு இல்ல.. ஓபனாக பேசிய நடிகர்
நடிகர் விஷால் திராவிடம் குறித்து பேசும் அளவிற்கு எல்லாம் தனக்கு அறிவு கிடையாது என பேசி அனைவரையும் ஷாக் ஆக்கியுள்ளார்.
நடிகர் விஷால் சென்னை தேனாம்பேட்டையில் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு விருது வழங்கும் விழாவில் பங்கேற்றார். பின் அவர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது, வரும் 27ஆம் தேதி நடைபெறும் நடிகர் விஜய்யின் அரசியல் மாநாட்டிற்கு என்னை அழைத்தாலும் அழைக்காவிட்டாலும் நான் கலந்து கொள்வேன்.
மாநாட்டிற்கு செல்வது உறுதி
விஜய் மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு என்னைக் கூப்பிட்டால் வாக்காளர் என்ற முறையில் நான் கலந்து கொள்வேன். இல்லையென்றால் தமிழ்நாட்டு மக்கள் குறித்த விஜய்யின் கருத்து என்ன, அவர் மக்களுக்கு என்ன சொல்லப் போகிறார் என்பதை பார்ப்பதற்காகவே செல்வேன் என்றார்.
தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவேனா என்பதற்கு இப்போது என்னால் பதில் கூற முடியாது. முதலில் நடிகர் விஜய் மாநாடு நடத்தட்டும். முதல் அடி எடுத்து வைக்கட்டும். அவர் என்ன செய்யப் போகிறார்?, அவருடைய செயல்பாடுகள் என்ன? என்ன நல்லது செய்யப் போகிறார்? என்பதைப் பார்த்து பொறுமையாகத் தான் முடிவெடுக்க முடியும்.
அரசியல்வாதி தான்.. அறிவு இல்லை
நாட்டில் சமூகப்பணி செய்பவர்கள் அனைவருமே அரசியல்வாதிகள் தான். அப்படிப் பார்த்தால் நானும் ஒரு அரசியல்வாதி தான் என விஷால் கூறினார். இதனைப் பிடித்துக் கொண்ட பத்திரிகையாளர்கள், டிடி தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிக்கப்பட்டது குறித்து கேள்வி எழுப்பினர். உடனே சுதாரித்துக் கொண்ட விஷால், அவங்கவங்க பிரச்சனை, அவங்கவங்க கருத்து, அவங்க சர்ச்சை, அவரவர் திணிப்பு. அதைப்பற்றி நான் சொல்ல விரும்பவில்லை.
அரசியலுக்கு வர விரும்பும் விஷால்
திராவிடம் பற்றி பேசும் அளவிற்கு தனக்கு அறிவு இல்லை எனக் கூறி இருக்கிறார். முன்னதாக விஷால், அரசியல் கட்சி தொடங்கி, 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தான் போட்டியிட உள்ளதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மக்கள் பணி செய்யும் விஷால்
அதைத் தொடர்ந்து அவர், மக்கள் நல இயக்கம் என்ற அமைப்பைத் தொடங்கி மக்கள் பணிகளை செய்து வருகிறார். இது அரசியலுக்கான அடித்தளமா என கேள்வி எழுந்த போது, நான் எப்போதும் அரசியல் ஆதாயத்தை எதிர்பார்த்து மக்கள் பணி செய்தது இல்லை, 'நன்றி மறப்பது நன்றன்று' என்ற வள்ளுவரின் குறளுக்கு ஏற்ப உதவிகளை செய்து வருகிறேன்.
அதுமட்டுமின்றி உதவிகள் செய்வது எனது கடமை எனவும் நான் எப்போதும் அரசியல் ஆதாயத்தை எதிர்பார்த்து மக்கள் பணி செய்தது இல்லை, 'நன்றி மறப்பது நன்றன்று' என்ற வள்ளுவனின் வாக்குப்படி என்னால் முடிந்த உதவிகளை நாள் செய்துக்கொண்டே தான் இருப்பேன். அது என்னோட கடமை என்று மனரீதியாக நான் கருதுகிறேன் என நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.அது என்னோட கடமை என்றும் பேசி இருந்தார்.
ஜீவா ஆதரவு
முன்னதாக நடிகர் ஜீவாவும், வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக மாநாட்டிற்கு செல்வேன் எனக் கூறியிருந்தார்.
இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழக மாநாடு குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள விஜய் வரும் 27ம் தேதி நடைபெறவுள்ள தமிழக வெற்றிக் கழக மாநாட்டுக்கு கர்ப்பிணிகள், பள்ளிச் சிறுவர் சிறுமியர், நீண்ட காலமாக உடல்நலமின்றி இருப்பவர்கள், முதியவர்கள் வரவேண்டாம் என்றும்; கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டை காப்போம் எனவும் பேரறிஞர் அண்ணாவில் சொல்லாடலைக் கூறி தமிழக வெற்றிக்கழகத் தலைவரும் நடிகருமான விஜய் இதனைத் தெரிவித்துள்ளார்.
மாநாட்டை அழகு படத்த வேண்டுகோள்
அரசியலை, வெற்றி-தோல்விகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு அளவிடாமல், ஆழமான அக உணர்வாகவும், கொள்கைக் கொண்டாட்டமாகவும் அணுகப் போகும் நம்முடைய அந்தத் தருணங்கள், மாநாட்டில் மேலும் அழகுற அமையட்டும் எனவும் கூறியுள்ளார்.
டாபிக்ஸ்