Vishal in Annamalai Biopic: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்கிறாரா விஷால்? வெளியான தகவல்-latest buzz that vishal to act in annamalai biopic - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Vishal In Annamalai Biopic: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்கிறாரா விஷால்? வெளியான தகவல்

Vishal in Annamalai Biopic: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்கிறாரா விஷால்? வெளியான தகவல்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
May 03, 2024 05:45 PM IST

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்க்கை வரலாறு படத்தில் நடிகர் விஷால் நடிக்க இருப்பதாக தகவல்கள் உலா வருகின்றன. இதற்கிடையே மருது படத்துக்கு பிறகு மீண்டும் முத்தையாவுடன் இணைந்து நடிகர் விஷால் புதிய படம் ஒன்றில் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அண்ணாமலை வாழ்க்கை வரலாறு படத்தில் விஷால்
அண்ணாமலை வாழ்க்கை வரலாறு படத்தில் விஷால்

தாமிரபரணி, பூஜை ஆகிய படங்களுக்கு பிறகு விஷால் - ஹரி கூட்டணியில் ரத்னம் படம் உருவாகியிருந்தது.  பெரிய ஓபனிங் கிடைக்கவி்ல்லை என்றாலும் சராசரி வசூலை பெற்று வருகிறது. படம் வெளியாகி ஒரு வாரம் ஆகியிருக்கும் நிலையில் ரூ. 12 கோடி வரை வசூலித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

அண்ணாமலை வாழ்க்கை வரலாறு படம்

இதைதத்தொடர்ந்து விஷால் தனது அடுத்த படமாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்ட கதையில் நடிக்க இருப்பதாக கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்படுகிறது.

பாஜகவில் இணைவதற்கு முன்னர் ஐபிஎஸ் படித்து கர்நாடகாவில் போலீஸ் அதிகாரியாக பணிபுரிந்தவர் அண்ணாமலை. கர்நாடகாவில் அவரை கர்நாடகா சிங்கம் என்ற பொதுமக்கள் அழைத்து வந்துள்ளார்கள். அங்கு போலீஸாக இருந்தபோது மக்களுக்கு ஆதரவாக அவர் பல்வேறு விஷயங்களை செய்தார்.  

இதன் பின்னர் போலீஸ் வேலையில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த அண்ணாமலை, மிக குறுகிய காலத்திலேயே தமிழ்நாடு பாஜக தலைவராக நியமிக்கப்பட்டார்.

சமீபத்தில் தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் கோவை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டுள்ளார் அண்ணாமலை. 2021 சட்டப்பேரவை தேர்தலுக்கு பின், தற்போது நாடாளுமன்ற தேர்தலில் அவர் போட்டியிட்டுள்ளார். 

இதையடுத்து அண்ணாமலை அரசு அதிகாரியாக தனது பணியை தொடர்ந்த பயணத்தையும், ஐபிஎஸ் தேர்வில் அவரது குறிப்பிடத்தக்க சாதனையையும் மையப்படுத்தி இந்த படம் இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

கடந்த 2020இல் பாஜவில் இணைந்த அண்ணாமலை, அந்த கட்சியில் இள வயது தலைவராக இருந்து வருகிறார். 

மீண்டும் முத்தையாவுடன் கூட்டணி

இந்த தகவல் ஒரு புறம் இருக்க, மருது படத்தின் வெற்றிக்கு பின்னர் முத்தையாவுடன் மீண்டும் கூட்டணி அமைத்து புதிய படத்தில் விஷால் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

2016இல் வெளியான மருது திரைப்படத்தில் ஸ்ரீதிவ்யா, சூரி, ராதா ரவி,  ஆர்கே சுரேஷ் உள்பட பலரும் நடித்திருப்பார்கள். கிராமத்து பின்னணியில் ஆக்‌ஷன் கலந்த செண்டிமென்ட் திரைப்படமாக இருந்த மருது பாக்ஸ் ஆபிஸ் வசூலிலும் பட்டையை கிளப்பியது. 

விஷால் நடிக்க இருக்கும் அடுத்த படம் அவரது 35வது படமாக உள்ளது. இதில் அண்ணாமலை வாழ்க்கை வரலாறு படமா அல்லது முத்தையா படமா என்பது குறித்து அவரது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த சில நாள்களுக்கு முன் விஷால் அரசியல் கட்சி தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், தற்போது தமிழ்நாட்டில் முக்கிய அரசியல் தலைவராக உருவெடுத்திருக்கும் அண்ணாமலை வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.