Top 10 Cinema News: 'ஜெயிலர்' பட வில்லன் மீண்டும் கைது முதல் 'தி கோட்' பட வசூல் வரை - டாப் 10 சினிமா நியூஸ் இதோ..!
Top 10 Cinema News: 'ஜெயிலர்' பட வில்லன் நடிகர் மீண்டும் கைது, வேட்டையன் பட முதல் கிலிம்ப்ஸ், 'தி கோட்' பட வசூல் உள்பட இன்றைய டாப் 10 சினிமா செய்திகளை இந்த தொகுப்பில் காணலாம்.

ஜெயிலர் வில்லன் மீண்டும் கைது
ஹைதராபாத் விமான நிலையத்தில் மது போதையில் சட்டையில்லாமல் கூச்சலிட்டதால் ஜெயிலர் பட வில்லன் நடிகர் விநாயகன் கைது செய்யப்பட்டார். இதுபோன்ற சிக்கலில் சிக்குவது இது முதல் முறை அல்ல, விநாயகன் தனது குடியிருப்பில் இடையூறு ஏற்படுத்தியதாகக் கூறி கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டிருந்தார்.
வாழ்நாள் சாதனையாளர்கள் விருது
நடிகர்கள் டெல்லி கணேஷ் மற்றும் சி.ஆர்.சரஸ்வதி ஆகியோருக்கு கலையுலக வாழ்நாள் சாதனையாளர்கள் விருது வழங்கப்பட்டுள்ளது. தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 68ஆவது ஆண்டு பொதுக்கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், திரைத்துறையில் பெண்களுக்கு எதிரான பாலியல் புகாரில் நிரூபிக்கப்படுபவர்கள் சினிமாவில் பணியாற்ற 5 ஆண்டு வரை தடை விதிக்கப்படும் என தீர்மானித்துள்ளனர்.
காத்திருந்தேன் பாடல் வெளியீடு
சீனு ராமசாமி இயக்கத்தில் உருவாகி வரும் ‘கோழிப்பண்ணை செல்லதுரை’ திரைப்படம் செப்டம்பர் 20 ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், படத்தின் முதல் பாடலான காத்திருந்தேன் பாடல் தற்போது வெளியாகி உள்ளது.