Tamil Movies: சிவாஜி நடிப்பில் இந்தியாவின் ஆஸ்கர் என்ட்ரி..தனுஷ் ஹாட்ரிக் ஹிட்! இன்றைய தேதியில் வெளியான படங்கள் லிஸ்ட்-check out the list of tamil movies released on september 5 - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Tamil Movies: சிவாஜி நடிப்பில் இந்தியாவின் ஆஸ்கர் என்ட்ரி..தனுஷ் ஹாட்ரிக் ஹிட்! இன்றைய தேதியில் வெளியான படங்கள் லிஸ்ட்

Tamil Movies: சிவாஜி நடிப்பில் இந்தியாவின் ஆஸ்கர் என்ட்ரி..தனுஷ் ஹாட்ரிக் ஹிட்! இன்றைய தேதியில் வெளியான படங்கள் லிஸ்ட்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Sep 05, 2024 07:50 AM IST

Tamil Movies Released on Sep 5: சிவாஜி கணேசன் நடிப்பில் இந்தியா சார்பில் ஆஸ்கருக்கு அனுப்பப்பட்ட தெய்வமகன், விஜய் - சூர்யா இணைந்து நடித்த நேருக்கு, தனுஷுக்கு ஹாட்ரிக் ஹிட் கொடுத்த திருடா திருடி உள்ளிட்ட செப்டம்பர் 5ஆம் தேதி வெளியான படங்களின் லிஸ்டை பார்க்கலாம்.

Tamil Movies: சிவாஜி நடிப்பில் இந்தியாவின் ஆஸ்கர் என்ட்ரி..தனுஷ் ஹாட்ரிக் ஹிட்! இன்றைய தேதியில் வெளியான படங்கள் லிஸ்ட்
Tamil Movies: சிவாஜி நடிப்பில் இந்தியாவின் ஆஸ்கர் என்ட்ரி..தனுஷ் ஹாட்ரிக் ஹிட்! இன்றைய தேதியில் வெளியான படங்கள் லிஸ்ட்

தெய்வமகன்

ஏ.சி. திருலோகசந்தர் இயக்கத்தில் சிவாஜி கணேசன் மூன்று வேடங்களில் நடித்து பாக்ஸ் ஆபிஸ் வசூலில் பட்டையை கிளப்பியதோடு, இந்திய சார்பில் ஆஸ்கருக்கு அனுப்பப்பட்ட படம் தெய்வமகன். பெங்காலி நாவல் உல்கா என்பதை அடிப்படையாக வைத்து வெளியாகும் ஐந்தாவது படமாக இது அமைந்திருந்தது.

எம்எஸ் விஸ்வநாதன் இசையில் தெய்வமே, கேட்டதெல்லாம் கொடுப்பவனே கிருஷ்ணா போன்ற பாடல்கள் சிறந்த கிளாசிக் பாடலாக இன்றளவும் ஒலித்துக்கொண்டிருக்கின்றன.

சிறந்த படத்துக்கான தமிழ்நாடு அரசு விருதை வென்ற இந்த படத்தில் ஜெயலலிதா, மேஜர் சுந்தரராஜன், எம்.என். நம்பியார், நாகேஷ், பண்டரி பாய், விஜயாஸ்ரீ பிரதான கதாபாத்திரங்களில் நடித்திருப்பார்கள். சிவாஜி ரசிகர்களால் மறக்க முடியாத படமாகவும், பார்வையாளர்களை தனது அற்புத நடிப்பால் சிவாஜி கணேசன் கட்டிப்போட்ட படமாகவும் இருந்து வரும் தெய்வமகன் வெளியாகி இன்றுடன் 55 ஆண்டுகள் ஆகிறது

தாலாட்டு பாடவா

ஆர். சுந்தரராஜன் இயக்கத்தல் பார்த்திபன், ரூபிணி, குஷ்பூ, சுஜாதா, எஸ்எஸ் சந்திரன் நடித்திருக்கும் படம் தாலாட்டு பாடவா. இளையராஜா இசையமைப்பில் ஓடை குயில், நீதானா நீதானா போன்ற பாடல்கள் ஹிட்டாகின. காதல் கலந்த குடும்ப திரைப்படமாக இருந்து வரும் தாலாட்டு பாடவா படம் வெளியாக இன்றுடன் 34 ஆண்டுகள் ஆகிறது.

நேருக்கு நேர்

விஜய் - சூர்யா இணைந்து நடித்த படம், சூர்யாவின் முதல் படமாக நேருக்கு நேர் இருந்து வருகிறது. வசந்த் இயக்கியிருக்கும் இந்த படத்தில் சிம்ரன், கெளசல்யா, ரகுவரன், சாந்தி கிருஷ்னா, பேபி ஜெனிபர் உள்பட பலரும் நடித்திருப்பார்கள். காதல், குடும்ப சென்டிமெண்ட் கலந்த மசாலா படமாக வெளியான நேருக்கு நேர் சூப்பர் ஹிட்டானது.

வைரமுத்து பாடல் வரிகள் எழுத தேவா இசையமைப்பில் அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட்டாகின. அஜித் - விஜய் இணைந்து சில காட்சிகள் படமாக்கப்பட்ட பின் அஜித் விலக சூர்யா அந்த கதாபாத்திரத்தில் நடித்தார். ரசிகர்களை கவர்ந்து சூப்பர் ஹிட்டான நேருக்கு நேர் படம் வெளியாகி இன்றுடன் 27 ஆண்டுகள் ஆகிறது

ரன்

லிங்குசாமி இயக்கத்தில் மாதவன் - மீரா ஜாஸ்மின் நடிக்க ரொமான்டிக் ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக வெளிவந்து ஹிட்டான படம் ரன். அதுல் குல்கர்னி, ரகுவரன், அனுஹாசன், விவேக் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள்.

வித்யாசாகர் இசையில் அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட்டாகி இன்று வரையில் பலரது பிளேலிஸ்டில் இடம்பிடித்துள்ளன. இளைஞர்களை வெகுவாக கவர்ந்த ரன் படம் வெளியாகி 22 ஆண்டுகள் ஆகிறது.

திருடா திருடி

துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன் படங்களை தொடர்ந்து தனுஷின் மூன்றாவது படமாக வெளியாகி அவருக்கு ஹாட்ரிக் ஹிட் கொடுத்த படம் திருடா திருடி. ரொமாண்டிக் காமெடி படமாக இருக்கும் இந்த படத்தை சுப்பிரமணிய சிவா இயக்கியுள்ளார். சாயா சிங் கதாநாயகியாக நடித்திருப்பார். கருணாஸ், மாணிக்க விநாயகம், கிருஷ்னா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருப்பார்கள். தினா இசையில் படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டாகின. குறிப்பாக மன்மத ராசா என்ற பாடல் பட்டிதொட்டியெங்கும் ஒலித்தது.

சரோஜா

வெங்கட் பிரபு இயக்கத்தில் காமெடி த்ரில்லர் பாணியில் உருவாகியிருந்த படம் சரோஜா. மிர்ச்சி சிவா, எஸ்பிபி சரண், வைபவ், பிரேம்ஜி, காஜல் அகர்வால், வேகா, சம்பத் ராஜ், ஜெயராம், பிரகாஷ் ராஜ் உள்பட பலரும் நடித்திருக்கும் இந்த படம் விறுவிறுப்பான த்ரில்லர் பாணியில் உருவாகி ரசிகர்களை கவர்ந்தது. யுவன் ஷங்கர் ராஜா இசையில் பாடல்களுடன், பின்னணி இசையும் பட்டையை கிளப்பின. பாக்ஸி ஆபிஸில் நல்ல வசூலை பெற்ற சரோஜா வெளியாகி இன்றுடன் 16 ஆண்டுகள் ஆகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

 

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.