Vettaiyan: 27 ஆண்டுகளுக்கு பிறகு மறைந்த பிரபல பாடகர் குரலில் மனசிலாயோ.. வேட்டையன் பட முதல் கிலிம்ப்ஸ் ரிலீஸ்!-actor rajinikanths vettaiyan movie first single glimpse released - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Vettaiyan: 27 ஆண்டுகளுக்கு பிறகு மறைந்த பிரபல பாடகர் குரலில் மனசிலாயோ.. வேட்டையன் பட முதல் கிலிம்ப்ஸ் ரிலீஸ்!

Vettaiyan: 27 ஆண்டுகளுக்கு பிறகு மறைந்த பிரபல பாடகர் குரலில் மனசிலாயோ.. வேட்டையன் பட முதல் கிலிம்ப்ஸ் ரிலீஸ்!

Karthikeyan S HT Tamil
Sep 08, 2024 07:21 PM IST

Vettaiyan: "வேட்டையன்" படத்தில் ரஜினிகாந்த் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு படம் உருவாகி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vettaiyan: 27 ஆண்டுகளுக்கு பிறகு மறைந்த பிரபல பாடகர் குரலில் மனசிலாயோ.. வேட்டையன் பட முதல் கிலிம்ப்ஸ் ரிலீஸ்!
Vettaiyan: 27 ஆண்டுகளுக்கு பிறகு மறைந்த பிரபல பாடகர் குரலில் மனசிலாயோ.. வேட்டையன் பட முதல் கிலிம்ப்ஸ் ரிலீஸ்!

லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு ஆந்திரா மாநிலம், கடப்பாவில் சமீபத்தில் நடந்து முடிந்தது. இதில் நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொண்டு சூட்டிங்கினை முடித்துவிட்டு, இமயமலைக்கு ஆன்மிக சுற்றுப்பயணம் மேற்கொண்டார். பின்னர் பத்ரிநாத், கேதார்நாத் உள்பட பல்வேறு இடங்களுக்கு அவர் சென்று வந்தார்.

நான்காவது முறையாக இணைந்த ரஜினி - அமிதாப்

"வேட்டையன்" படத்தில் ரஜினிகாந்த் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு படம் உருவாகி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு, பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், ரஜினிகாந்த் இணைந்து நடித்துள்ளார்கள். அமிதாப் பச்சன் மற்றும் ரஜினிகாந்த் இருவரும் அந்தா கனூன், கெராஃப்தார் மற்றும் ஹம் ஆகிய படங்களைத் தொடர்ந்து, நான்காவது முறையாக இந்தப்படத்தில் இணைந்து இருக்கின்றனர்.

அனிருத் இசை

ஆக்‌ஷன் த்ரில்லர் பாணியில் உருவாகி இருக்கும் இப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்கிறார். பிலோமின் ராஜ் எடிட்டிங்கினை மேற்கொண்டார்.

அக்டோபரில் வேட்டையன் ரிலீஸ்

நடிகர் ரஜினிகாந்த் இமயமலைக்கு ஆன்மிக யாத்திரை சென்றபோது, ஆன்மிகத் துறவியிடம் ரஜினிகாந்த் உரையாடல் நடத்தும் வீடியோ வெளியாகியுள்ளது. அதில் ’வேட்டையன்’ படத்தின் ரிலீஸ் தேதி குறித்து ரஜினிகாந்த் சில தகவல்களைப் பகிர்ந்திருந்தார். அதன்படி, படம் வரும் அக்டோபர் 10ஆம் தேதி திரைக்கு வரும் என அவர் துறவியிடம் தெரிவித்தார். அக்டோபர் 12ஆம் தேதி தசரா கொண்டாடப்பட இருக்கும் நிலையில், இரண்டு நாள்கள் முன்னரே படம் வெளியாகும் எனத் தெரிகிறது.

முன்னதாக படத்தை அக்டோபர் மாதம் திரையிட திட்டமிட்டிருப்பதாக படக்குழுவினர்கள் தெரிவித்திருந்தனர். அதாவது படம் தசரா விடுமுறையை ஒட்டி வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரஜினிகாந்த் படத்தின் ரிலீஸ் தேதியை வெளிப்படுத்தியிருப்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

மனசிலாயோ பாடல் நாளை ரிலீஸ்

கடந்த சில வாரங்களாக படத்தின் டப்பிங் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. படத்தின் முதல் பாடலான `மனசிலாயோ' என்ற பாடல் வரும் 9ம் தேதி வெளியாகும் என பட நிறுவனம் அறிவிப்பு வெளியிட்ட நிலையில், பாடலின் கிலிம்ப்ஸ் வீடியோவை தற்பொழுது வெளியிட்டுள்ளனர். அதில் இந்த பாடலை மறைந்த பிரபல பின்னணி பாடகரான மலேசியா வாசுதேவன் பாடியுள்ளார்.

27 ஆண்டுகளுக்கு பிறகு

27 ஆண்டுகளுக்கு பிறகு ரஜினிகாந்த் திரைப்படத்திற்கு மலேசியா வாசுதேவன் பாடியுள்ளார். அவரது குரலை ஏ.ஐ தொழில் நுட்ப உதவியுடன் மீண்டும் உயிர் பெறச் செய்துள்ளனர். இப்பாடலில் மலையாள வரிகளும் இடம் பெற்றுள்ளது. ஓனம் பண்டிகை ஸ்பெஷலாக இப்பாடலை படக்குழு வெளியிடவுள்ளனர். பாட்டின் இந்த கிலிம்ப்ஸ் காட்சி தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.

முன்னதாக வேட்டையன் படத்தின் டைட்டில் டீசர், கடந்தாண்டு டிசம்பர் மாதம் ரஜினிகாந்தின் பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியிடப்பட்டது. இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியிடப்படும் பான்-இந்தியா சினிமா என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ‘வேட்டையன்’ திரைப்படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் டிவி ரூ. 65 கோடிக்கு கைப்பற்றியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், ‘வேட்டையன்’ திரைப்படத்தின் ஓடிடி உரிமையை அமேசான் ப்ரைம் ஓடிடி நிறுவனம் ரூ.90 கோடிக்கு கைப்பற்றியுள்ளதாகத் தெரிகிறது.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.