தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Actor Vijay: ரூ. 2 கோடி செலவில் நடிகர் விஜய்யின் கல்வி விருது வழங்கும் விழா!

Actor Vijay: ரூ. 2 கோடி செலவில் நடிகர் விஜய்யின் கல்வி விருது வழங்கும் விழா!

Karthikeyan S HT Tamil
Jun 17, 2023 11:33 AM IST

நடிகர் விஜய்யின் கல்வி விருது விழா நிகழ்ச்சிக்காக நடிகர் விஜய் 2 கோடி ரூபாய் செய்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

நடிகர் விஜய்.
நடிகர் விஜய்.

ட்ரெண்டிங் செய்திகள்

இந்நிகழ்ச்சியையொட்டி, மாணவ, மாணவிகள் அனைவரும் பெற்றோர்களுடன் நேற்று சென்னை அருகே வந்து தங்க வைக்கப்பட்டனர். இன்று காலை உணவை முடித்துக் கொண்டு வண்டலூர், கேளம்பாக்கம் வழியாக வந்து நீலாங்கரை ஆர்.கே.கன்வென்ஷன் சென்டரை சென்றடையும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் மாணவ, மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர், விஜய் மக்கள் இயக்கத்தினர் உள்ளிட்டோருக்கு அறுசுவை விருந்து வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விருது வழங்கும் நிகழ்ச்சியில் கட் அவுட், பேனர் வைக்க கூடாது என்று ரசிகர்களுக்கு ஏற்கனவே விஜய் அன்பு கட்டளையிட்டுள்ளார்.

இந்நிலையில், நடிகர் விஜய்யின் கல்வி விருது விழா நிகழ்ச்சிக்காக நடிகர் விஜய் 2 கோடி ரூபாய் செய்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. நிகழ்ச்சி நடைபெறும் ஆர்.கே.கன்வென்ஷன் சென்டர் அரங்கத்திற்கு வாடகை மட்டும் 40 லட்ச ரூபாய் ஆகும். காலை, மதிய உணவு மற்றும் வெளியூர்களில் இருந்து வந்த மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தங்குவதற்கான மண்டப செலவு என அனைத்தையும் விஜய் ஏற்றுக்கொண்டுள்ளார்.  மாணவ, மாணவிகளுக்கு விருது வழங்கி கெளரவிக்கும் இந்த நிகழ்ச்சியில் கட் அவுட், பேனர் வைக்க கூடாது என்று ரசிகர்களுக்கு விஜய் ஏற்கனவே அன்பு கட்டளையிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்