விஜய்யை வைத்து சம்பவம் செய்ய காத்திருக்கும் ஹெச். வினோத்.. கடைசி படம் இப்படித் தான் இருக்குமா? கசிந்த தகவல்
சினிமாவிலிருந்து விலகி, அரசியலில் முழு கவனத்தையும் செலுத்த இருக்கும் விஜய்யின் கடைசி படமான தளபதி 69 குறித்த முக்கிய தகவல் ஒன்று தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவில் குறிப்பிட்ட சில படங்களே இயக்கி இருப்பினும், அதில் தன் கதை மற்றும் இயக்கத்தால் வெற்றி கண்டவர் இயக்குநர் ஹெச். வினோத். தன்னுடைய முதல் படத்திலேயே தமிழ் சினிமா மொத்தத்தையும் திரும்பிப் பார்க்க வைத்த இயக்குநரான ஹெச். வினோத் தற்போது நடிகர் விஜய்யின் கடைசி படமான தளபதி 69 படத்திற்கான வேலைகளில் முழு வீச்சில் இறங்கியுள்ளார்.
தளபதி 69 விஜய்யின் கதாப்பாத்திரம் என்ன?
சினிமாவிலிருந்து விலகி அரசியலுக்கு செல்ல இருப்பதால், நடிகர் விஜய்யின் இந்தப் படம் நிச்சயம் அரசியலை மையப்படுத்தியே நகரும் என பலரும் கூறி வருகின்றனர். இந்த நிலையில், தற்போது தளபதி 69 படத்தில் விஜய் போலீஸ் அதிகாரியாகவே நடிக்க உள்ளார் எனக் கூறி வருகின்றனர். ஏற்கனவே, தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் கார்த்தியையும், வலிமை படத்தில் அஜித்தையும் போலீஸ் அதிகாரியாக நடிக்க வைத்து மிரட்டி இருப்பதால், ஹெச்.வினோத் விஜய்யின் கடைசி படத்தில் அவரை போலீஸ் அதிகாரியாகவே நடிக்க வைப்பார் என கருத்து தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் விஜய்யின் தளபதி 69 படத்தின் பூஜைகள் முடிந்து, படப்பிடிப்பு பணிகள் தொடங்கிய நிலையில், இதுபோன்ற தகவல்கள் பரவுவதால், ஒருவேளை தளபதி 69 படத்தில் விஜய் போலீசாகத்தான் நடிக்க உள்ளாரோ என பலரும் சந்தேகத்தில் உள்ளனர்.