Tamilaga Vettri Kazhagam: என்ன கொடி பறக்குதா?.. போர் யானைகள்; வாகை மலர்.. கொடியேற்றிய நடிகர் விஜய்
Tamilaga Vettri Kazhagam: நடிகர் விஜய் தன்னுடைய அரசியல் கட்சியான தமிழக வெற்றிக்கழகத்தின் கொடியை அறிமுகம் செய்து வைத்தார்.

Tamilaga Vettri Kazhagam: என்ன கொடி பறக்குதா?.. போர் யானைகள்; வாகை மலர்.. கொடியேற்றிய நடிகர் விஜய்
அரசியல் களத்தில் நேரடியாக இறங்கி இருக்கும் நடிகர் விஜய் தன்னுடைய தமிழக வெற்றிக்கழகத்தின் கொடியை இன்று அறிமுகம் செய்து வைத்திருக்கிறார். அதற்காக பிரத்யேக பாடல் ஒன்றும் வெளியாகி இருக்கிறது. அந்தப்பாடல் கீழே!
முன்னதாக, 32 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் பயணிக்கும் நடிகர் விஜய் படிப்படியாக உயர்ந்து தனக்கென தனி இடத்தை பிடித்து முத்திரை பதித்தார். இதற்கிடையே தான் அரசியலிலும் களமிறங்க இருக்கிறேன் என்பதை மறைமுகமாக வெளிப்படுத்தி வந்த நடிகர் விஜய், பல்லாண்டுகளாக இயங்கி வந்த தனது ரசிகர் மன்றங்களை விஜய் மக்கள் இயக்கமாக மாற்றினார்.