தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Actor Vijay: 600க்கு 600 மார்க் எடுத்த மாணவிக்கு நடிகர் விஜய் கொடுத்த சர்ப்ரைஸ்!

Actor Vijay: 600க்கு 600 மார்க் எடுத்த மாணவிக்கு நடிகர் விஜய் கொடுத்த சர்ப்ரைஸ்!

Karthikeyan S HT Tamil
Jun 17, 2023 12:55 PM IST

தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 600/600 மதிப்பெண் எடுத்த மாணவி நந்தினிக்கு நடிகர் விஜய் வைர நெக்லஸை ஸ்பெஷல் பரிசாக வழங்கினார்.

600/600 மதிப்பெண் எடுத்த மாணவி நந்தினிக்கு நடிகர் விஜய் வைர நெக்லஸை ஸ்பெஷல் பரிசாக வழங்கினார்.
600/600 மதிப்பெண் எடுத்த மாணவி நந்தினிக்கு நடிகர் விஜய் வைர நெக்லஸை ஸ்பெஷல் பரிசாக வழங்கினார்.

ட்ரெண்டிங் செய்திகள்

சென்னை நீலாங்கரையில் உள்ள ஆர்.கே.கன்வென்ஷன் சென்டரில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் நடிகர் விஜய் பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கி வருகிறார். அதேசமயம் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் கல்வி பயின்று அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவ மாணவிகளுக்கும் நடிகர் விஜய் ஊக்கத்தொகை வழங்கினார். இதில், 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 600க்கு 600 மதிப்பெண்களைப் பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்து புதிய சாதனை படைத்த திண்டுக்கல்லைச் சேர்ந்த மாணவி நந்தினிக்கு வைர நெக்லஸை பரிசாக நடிகர் விஜய் வழங்கினார். 

வைர நெக்லஸை மாணவியின் தாயாரிடம் கொடுத்து, அதனை அணிவிக்க செய்து பார்த்தார். அந்த பரிசைப் பெற்றுக்கொண்ட நந்தினி கண்ணீர் மல்க விஜய்-க்கு நன்றி தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து மாற்றுத்திறனாளி மாணவிக்கு சிறப்பு பரிசு அளித்தார். அதனைத்தொடர்ந்து, ஒவ்வொரு மாணவர்களுக்கும் சிறப்பு ஊக்கத்தொகை கொடுத்து, சான்றிதழ் வழங்கி வருகிறார்.

முன்னதாக இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் விஜய், வருங்கால இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரங்கள் உங்களை சந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சி. உங்கள் அனைவரையும் பார்க்கும்போது எனது பள்ளிகால நினைவுகள் தான் வருகிறது. நான் உங்களை போல சிறந்த மாணவன் எல்லாம் கிடையாது. நான் சராசரியான மாணவன் தான். நான் ஒரு நடிகன் ஆகவில்லை என்றால் டாக்டராகியிருப்பேன்... அது ஆகியிருப்பேன் இது ஆகியிருப்பேன் என்று கூற விரும்பவில்லை. என் கனவு எல்லாம் சினிமா, நடிப்பு தான் அதை நோக்கியே என் பயணம் சென்றுகொண்டிருந்தது.

இந்த நிகழ்வை ஏற்பாடு செய்யக் காரணமே சமீபத்தில் நான் கேட்ட ஒரு படத்தின் வசனம் தான். 'காடு வச்சிருந்தா எடுத்துக்குவானுக, காசு வச்சிருந்தா புடுங்கிக்குவானுக, ஆனால் படிப்ப மட்டும் யாரும் எடுக்க முடியாது.. என்று வசனம் வரும். இது நூற்றுக்கு நூறு உண்மை மற்றும் யதார்த்தம். அப்படி ஒரு முக்கியத்துவம் வாய்ந்தது கல்வி. அதற்கு எனது தரப்பில் ஏதேனும் செய்ய வேண்டும் என விரும்பினேன். அதற்கான நேரம் தான் இது. ஆசிரியர்கள், இந்த நிகழ்வை ஏற்பாடு செய்த மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்." என்றார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்