19 வயதில் ராஷ்மிகாவின் முதல் ஆடிஷன்..அசெளகரிய தருணம் - வைரலாகும் விடியோ
Rashmika Mandanna: 19 வயதில் ராஷ்மிகாவின் முதல் ஆடிஷன் விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. நேஷனல் க்ரஷ் ஆக இருக்கும் அவர் ஆடிஷனின் போது தாய்மொழியான கன்னடம் பேச முயற்சித்த அசெளகரிய தருணம் விடியோவில் இடம்பிடித்துள்ளது.

தென்னிந்திய, பாலிவுட் சினிமாக்களில் பிஸியான நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கும் ராஷ்மிகா மந்தனா, நேஷனல் க்ரஷ் என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. அவர் சினிமாவில் நடிப்பதற்கு முன் 19 வயதில் முதல் முறையாக ஆடிஷனில் பங்கேற்ற விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. புகழ் பெற்ற நடிகை ஆவதற்கு முன் முதல் ஆடிஷன் நிகழ்வில் ராஷ்மிகா வெட்கத்துடன் பேசியுள்ளார்.
ராஷ்மிகாவின் ஆடிஷன் விடியோ
ஃப்ரீ ஹேர் சிவப்பு நிற குர்தா, அதன் பின் ப்ளோரோ குர்தா என இரண்டு லுக்கில் அந்த விடியோவில் தோன்றுகிறார் ராஷ்மிகா. அவர், "ஹாய்,என் பெயர் ராஷ்மிகா. வயது 19. உயரம் 5.5. பிஏ இரண்டாம் ஆண்டு படிக்கிறேன், இதுதான் எனது முதல் ஆடிஷன்" என தனது க்யூட் குரலில் ஆடிஷன் விடியோவில் பேசுகிறார்.
அவரிடம் கன்னடத்தில் பேசுமாறு கேமரா பின்னணியில் இருந்தவர் சொல்ல, கன்னடத்தில் ஏதோ பேச முயற்சித்து "என்னால் பேச முடியல. நடிக்க முடியல" என்கிறார்.
இந்த விடியோவில் பிற்பகுதியில் மிகுந்த தன்னம்பிக்கையுடன் சில வார்த்தைகள் பேசும் அவர், மாதுரி தீக்சித் புகழ் பெற்ற பாடலுக்கு நடனமும் ஆடுகிறார். ரசிகர்கள் பகிர்ந்திருக்கும் இந்த விடியோ வைரல் மெட்டீரியல் ஆகியுள்ளது.
ராஷ்மிகா நாயகியாக உருவானது எப்படி?
2014இல் கல்லூரி படித்தபோது சிறந்த ப்ரஷ் பேஸ் என்ற விருதை வென்ற அவரிடம், பலரும் சினிமாவில் நடிக்குமாறு உசுப்பேற்றி விட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து பல்வேறு ஆடிஷன்களில் பங்கேற்று சினிமா வாய்ப்பை பெற்ற ராஷ்மிகா 2016இல் கிரிக் பார்ட்டி படம் மூலம் நடிகையாக அறிமுகமானார்.
அடுத்த ஆண்டிலேயே தன்னுடன் இணைந்த நடித்த ரக்சித் ஷெட்டியுடன் இவருக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்று முடிந்தது. அப்போது அஞ்சானி புத்ரா என்ற படத்தில் நடித்து வந்தார்.
பின்னர் 2018இல் இணக்கமின்மை காரணமாக ராஷ்மிகா - ரக்சித் ஷெட்டி ஆகிய நிச்சயதார்த்ததுடன் தங்களது உறவை முறித்து கொண்டனர்.
டாப் கியரில் சென்ற ராஷ்மிகா
2018இல் சாலோ என்ற தெலுங்கு படம் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமானார். இதன் பின்னர் அதே ஆண்டில் வெளியான கீதா கோவிந்தம், நடிகை ராஷ்மிகா சினிமா கேரியரை டாப் கியரில் செல்ல வைத்தது. தொடர்ந்து சரிலேரு நீக்கேவரு, சீதா ராமம் மற்றும் புஷ்பா: தி ரைஸ் என அடுத்தடுத்து இவர் நடித்த படங்கள் சூப்பர் ஹிட்டாகின.
அதேபோல் அமிதாப்புடன் இணைந்து நடித்து குட்பை என்ற படத்தில் இந்தியில் அறிமுகமானார். தொடர்ந்து மிஷன் மஜ்னு, அனிமல் போன்ற படங்களில் நடித்தார்.
ராஷ்மிகா புதிய படங்கள்
தென்னிந்தியா, பாலிவுட் சினிமாக்களில் பிஸியான நாயகியாக வலம் வந்துகொண்டிருக்கிறார் ராஷ்மிகா. இவரது நடிப்பில் இந்த ஆண்டு இறுதியில் புஷ்பா 2 படம் வெளியாக இருக்கிறது.
இதுதவரி தனுஷுடன் இணைந்து குபேரா, ரெயின்போ, தி கேர்ள்பிரண்ட் போன்ற தெலுங்கு படங்கள், சாவா, சிக்கந்தர் போன்ற இந்தி படங்களில் நடித்து வருகிறார்.
