இணையத்தில் வெளியான வீடியோ.. பாதிக்கப்பட்டவருக்கு கிடைத்த அங்கீகாரம்.. நடிகை ராஷ்மிகா நெகிழ்ச்சி
டீப் ஃபேக் தொழில்நுட்பத்தால் பாதிக்கப்பட்ட நடிகை ராஷ்மிகா மந்தனா, இந்திய சைபர் க்ரைம் ஒருங்கிணைப்பு குழுவின் பிராண்ட் அம்பாசிடராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கோலிவுட், டோலிவுட், பாலிவுட் என அனைத்திலும் கைவசம் படங்களை வைத்துக் கொண்டு பிஸியாக வலம் வரும் நடிகை ராஷ்மிகா மந்தனா. ரசிகர்களால் நேஷனல் கிரஷ் என அழைக்கப்படும் இவரின் சர்ச்சை வீடியோ ஒன்று கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியானது.
ராஷ்மிகாவின் வீடியோ
அந்த வீடியோவில், லிஃப்ட் ஒன்று மூடத் தயாராக இருக்கும் சமயத்தில் ராஷ்மிகா வேகமாக வந்து லிஃப்டில் நுழைவது போன்ற காட்சிகள் இடம்பெற்றன. இந்த வீடியோ வைரலான நிலையில், இந்த வீடியோவில் இருப்பது தான் இல்லை என மறுப்பு தெரிவித்து சைபர் கிரைம் போலீசில் ராஷ்மிகா மந்தனா புகாரளித்தார். பின்னர் இந்த வழக்கை விசாரித்த போலீசார், ராஷ்மிகாவை தொடர்புபடுத்தி வெளியான வீடியோ போலியானது. ஏஐ டீப் ஃபேக் தொழில்நுட்பத்தின் உதவியுடன் வேறொரு பெண் உள்ள வீடியோவில் ராஷ்மிகாவின் முகம் மாற்றப்பட்டுள்ளதாக கூறினர்.
அடுத்தடுத்து பாதிக்கப்பட்ட நடிகைகள்
பின் அந்த வீடியோவை சோசியல் மீடியா தளங்களிலிருந்து அப்புறப்படுத்துவதற்குள், கேத்ரினா கைஃப், கஜோல், ஆலியா பட் ஆகியோரின் டீப் ஃபேக் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின. இதையடுத்து, அமிதாப் பச்சன் உள்ளிட்ட பல திரைபிரபலங்கள் பாதிக்கப்பட்ட நடிகைகளுக்கு துணையாக நின்றனர்.
