Surya: இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே... சர்ப்ரைஸ் கொடுத்த சூர்யா... இதுதான் இப்போ அப்டேட்-actor surya committed his 45th movie with rj balaji - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Surya: இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே... சர்ப்ரைஸ் கொடுத்த சூர்யா... இதுதான் இப்போ அப்டேட்

Surya: இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே... சர்ப்ரைஸ் கொடுத்த சூர்யா... இதுதான் இப்போ அப்டேட்

Malavica Natarajan HT Tamil
Sep 24, 2024 10:40 AM IST

Surya: நடிகர் சூர்யாவின் கங்குவா பட அப்டேட்கள் வரிசையாக வந்துகொண்டிருக்கும் நிலையில், தனது அடுத்த படத்திற்கான அறிவிப்பை வெளியிட்டு ரசிகர்களை சர்ப்ரைஸ் செய்துள்ளார். அட இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே என ரசிகர்கள் புதுப்பட அப்டேட்கள் குறித்து பேசி வருகின்றனர்.

Surya: இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே... சர்ப்ரைஸ் கொடுத்த சூர்யா... இதுதான் இப்போ அப்டேட்
Surya: இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே... சர்ப்ரைஸ் கொடுத்த சூர்யா... இதுதான் இப்போ அப்டேட்

சூர்யா 45!

இந்த நிலையில், கங்குவா திரைப்படத்திற்குப் பின் நடிகர் சூர்யா வாடிவாசல் திரைப்படத்தில் தனது முழு கவனத்தையும் செலுத்துவார் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், சூர்யா தரப்பிலிருந்து வந்ததோ வேறு பதில்கள்.

சூர்யா கங்குவா திரைப்படத்தை தொடர்ந்து புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். சூர்யாவின் இந்த 45வது படத்தை நடிகரும் இயக்குநருமான ஆர்.ஜே. பாலாஜி இயக்கவுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, இந்தத் திரைப்படத்திற்குப் பின்னரே சூர்யா வாடிவாசல் திரைப்படத்தில் நடிப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தகவல் முற்றிலும் அதிகாரப்பூர்வமானது என்றும் ஆர்.ஜே. பாலாஜி- சூர்யா கூட்டணியில் உருவாகும் இந்த திரைப்படத்தை ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது என்ற தகவலும் கூடுதலாக கிடைத்துள்ளது.

திரைத்துறையில் ஆர்.ஜே. பாலாஜி

ரோடியோ துறையில் பணியாற்றிய போதே தனது பேச்சால் பல ரசிகர்களை கொண்டிருந்தவர் ஆர்.ஜே. பாலாஜி. பின் இவர் நடிகர் சித்தார்த்தின் தீயா வேலை செய்யணும் குமாரு திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் காலடி எடுத்து வைத்தார். பின், பல படங்களில் சிறு சிறு கதாப்பாத்திரங்களில் நடித்து வந்தார். இவர், விக்னேஷ் சிவன்- சூர்யா கூட்டணியில் வெளியான தானா சேர்ந்த கூட்டம் திரைப்படத்திலும் கூட நடத்திருப்பார்.

இதைத்தொடர்ந்து இயக்குநர் அவதாரம் எடுத்தார் ஆர்.ஜே. பாலாஜி. இவர் நயன்தாராவை அம்மனாக வைத்து எடுத்த மூக்குத்தி அம்மன் திரைப்படமும், அபர்ணா பாலமுரளி, சத்யராஜ் கூட்டணியில் உருவாக்கிய வீட்ல விசேஷம் படமும் மெகா ஹிட் அடித்தது. இதற்கிடையில், ஆர்.ஜே. பாலாஜி கதாநாயகனாகவும் சில படங்களில் நடித்து வந்தார்.

இதைத்தொடர்ந்து அவர் தற்போது சூர்யாவை கதாநாயகனாக வைத்து படம் இயக்க உள்ளார். இவரது படங்கள் குடும்பத்தை மையப்படுத்தி காமெடி ஜார்னரிலே இதுவரை இருந்துள்ளது. இந்நிலையில், இவர் சூர்யாவை வைத்து எந்த மாதிரியான படத்தை எடுக்கப் போகிறார் என பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.

தள்ளிப்போகும் வாடிவாசல்

அதேசமயம், நடிகர் சூர்யா முன்கூட்டியே ஒப்புக் கொண்ட வாடிவாசல் திரைப்படத்தில் ஏன் தற்போது நடிக்கவில்லை என்ற கேள்வியும் பல ரசிகர்களின் மனதில் எழுகிறது. இயக்குநர் வெற்றிமாறனுடன் சூர்யா கைகோர்த்த திரைப்படம் தான் வாடிவாசல், இவர் நடிகர்கள் விஜய் சேதுபதி, சூரியை வைத்து விடுதலை 2 படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்திற்காக ஏற்கனவே எடுக்கப்பட்ட காட்சிகளில் திருப்தி இல்லாததால், இயக்குநர் வெற்றி மாறன் படத்தை திரும்ப எடுக்கலாமா இல்லை எடுத்த காட்சிகளை ஒழுங்கு படுத்தலாமா என யோசித்து வருகிறாராம். 

இதனால், சூர்யாவின் வாடிவாசல் திரைப்படம் எடுக்க கால தாமதாம் ஆகிறதாம். அதுவும் இல்லாமல் வெற்றிமாறன் விடுதலை 2 படத்தை முடித்த பிறகே வாடிவாசல் திரைப்படத்தை எடுக்க உள்ளதால், சூர்யா தற்போது தனது 45வது படத்திற்கு ஆர்.ஜே. பாலாஜியுடன் கூட்டணி வைத்துள்ளார்.

Whats_app_banner