Rajinikanth: ‘நாங்க வேணும்னு பண்ணல’; சூர்யாவின் ‘கங்குவா’ உடன் மோதியது ஏன்?-‘வேட்டையன்’ விழாவில் ரஜினிகாந்த் விளக்கம்!-rajinikanth reply to surya why tj gnanavel vettaiyan clash with kanguva at vettaiyan audio launch - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Rajinikanth: ‘நாங்க வேணும்னு பண்ணல’; சூர்யாவின் ‘கங்குவா’ உடன் மோதியது ஏன்?-‘வேட்டையன்’ விழாவில் ரஜினிகாந்த் விளக்கம்!

Rajinikanth: ‘நாங்க வேணும்னு பண்ணல’; சூர்யாவின் ‘கங்குவா’ உடன் மோதியது ஏன்?-‘வேட்டையன்’ விழாவில் ரஜினிகாந்த் விளக்கம்!

Kalyani Pandiyan S HT Tamil
Sep 21, 2024 12:17 PM IST

Rajinikanth: ‘கங்குவா’ படத்துடன் ‘வேட்டையன்’ மோதியது ஏன் என்பதற்கு நடிகர் ரஜினிகாந்த் வேட்டையன் இசை வெளியீட்டு விழாவில் பேசினார்

Rajinikanth: ‘நாங்க வேணும்னு பண்ணல’; சூர்யாவின்  ‘கங்குவா’ உடன் மோதியது ஏன்?-‘வேட்டையன்’ விழாவில் ரஜினிகாந்த் விளக்கம்!
Rajinikanth: ‘நாங்க வேணும்னு பண்ணல’; சூர்யாவின் ‘கங்குவா’ உடன் மோதியது ஏன்?-‘வேட்டையன்’ விழாவில் ரஜினிகாந்த் விளக்கம்!
சூர்யா
சூர்யா

சூர்யாவிற்கு பதில்

அவர் பேசும் போது, “இந்தப் படம் யாருக்காக ஹிட் ஆகுதோ இல்லையோ இயக்குநர் ஞானவேலுக்காக ஹிட் ஆகணும். காரணம் என்னன்னா, சமூகத்துக்கு தேவையான, மக்களுக்கு உபயோகப்படுகிற கருத்தை அவர் தன்னுடைய படங்கள்ல சொல்றார். எப்போ நாங்க படத்துக்கு பூஜை போட்டமோ, அப்பவே படம் அக்டோபர் 10ஆம் தேதி ரிலீஸ்ன்னு முடிவு பண்ணிட்டோம். ஆனா லைக்கா நிறுவனம் தயாரிப்புல, நிறைய படங்கள் இருந்ததுனால, அதை அதிகாரப்பூர்வமா நாங்க அறிவிக்கல.” என்று பேசினார்.

ரஜினி
ரஜினி

ரஜினியின் வேட்டையன்

ஜெயிலர் படத்தின் பிரமாண்ட வெற்றிக்குப்பிறகு ரஜினியின் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் 'வேட்டையன்'. ரஜினிகாந்தின் 170 வது திரைப்படமாக உருவாகி இருக்கும் இந்தப்படத்தை ஜெய்பீம் திரைப்பட புகழ் இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கியுள்ளார். இந்தப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து இருக்கிறார். பேட்ட, தர்பார், ஜெயிலர் ஆகிய திரைப்படங்களில் இணைந்து பணியாற்றிய பிறகு அவர் நான்காவது முறையாக மீண்டும் இந்தப்படத்தில் ரஜினியுடன இணைந்திருக்கிறார்.

அமிதாப் பச்சன் மற்றும் ரஜினிகாந்த் இருவரும் அந்தா கனூன், கெராஃப்தார் மற்றும் ஹம் ஆகிய படங்களைத் தொடர்ந்து, நான்காவது முறையாக இந்தப்படத்தில் இணைந்து இருக்கின்றனர். மஞ்சு வாரியர், ஃபஹத் ஃபாசில், ராணா டகுபதி, ரித்திகா சிங் மற்றும் துஷாரா விஜயன் ஆகியோர் இந்தப்படத்தில் ரஜினிகாந்துடன் முதன்முறையாக இணைந்து நடித்துள்ளனர். இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியிடப்படும் பான்-இந்தியா சினிமா என்பது குறிப்பிடத்தக்கது.

சூர்யாவின் கங்குவா

நடிகர் சூர்யாவின் 42ஆவது திரைப்படமான கங்குவா படத்தை, இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கி உள்ளார். இந்தப் படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடித்து உள்ளார். வில்லனாக அனிமல் திரைப்படத்தில் வில்லனாக நடித்து பிரபலமான பாபி தியோல் நடித்து உள்ளார்.

இவர்களுடன் நடிகர்கள் யோகி பாபு, ஆனந்த் ராஜ், ரெடின் கிங்ஸ்லி, ரவி ராகவேந்திரா உள்ளிட்டப் பல நடிகர்கள் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து இருக்கும் இந்தப்படத்தில் வெளியான போஸ்டர்கள், பாடல், டீசர் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், கடந்த ஆகஸ்ட் 12ஆம் தேதி அன்று படத்தின் ட்ரெய்லர் வெளியாகி இருந்தது. இந்தப்படமானது தற்போது நவம்பர் 14 தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது.

கங்குவன் என்பது ஒரு மொழி.

இந்த திரைப்படம் தொடர்பாக இயக்குநர் சிவா பேசும் போது, " உண்மையில் கங்குவன் என்பது ஒரு மொழி. படத்தின் போஸ்டரில் கங்குவன் என்ற பெயருக்கு மேலே இடம் பெற்றுள்ள எழுத்தானது வட்டெழுத்து என்று அழைக்கப்படும் பழங்காலத் தமிழ் ஆகும். இது 3 ஆம் நூற்றாண்டிற்கு பிறகு வழக்கத்தில் இருந்தது. கங்கு என்றால் நெருப்பு என்று பொருள். கங்குவன் என்றால் நெருப்பு சக்தி கொண்ட மனிதன் என்று பொருள்படும்” என்று பேசினார்.

மேலும் பேசிய அவர், “கங்குவன் திரைப்படத்தை நாங்கள் 10 மொழிகளில் வெளியிட திட்டமிட்டு இருக்கிறோம். படத்தில் சூர்யா சார் நடிக்கும் கதாபாத்திரத்தின் பெயர் கவர்ச்சியாகவும், சக்திவாய்ந்ததாகவும், அர்த்தமுள்ளதாகவும் இருக்கும் என்று நாங்கள் உணர்ந்தோம். இந்த படம் ஒரு ஆக்‌ஷன் ஃபேண்டஸி கலந்த திரைப்படமாக இருக்கும்.

 

 

 

 

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.