Sharad Kelkar: பாகுபலியின் குரல் இவருடையதா?.. ‘எல்லா புகழும் ராஜமெளலிக்கே..’ - சரத் கெல்கர் பேட்டி
Sharad Kelkar: பாகுபலி முதல் பகுதியின்போது, மாலை வேளைகளில் வரும் ராஜமெளலி செய்து முடிக்கப்பட்டிருக்கின்ற டப்பிங்கை சரிபார்ப்பார். பாகுபலி இரண்டாவது பகுதி டப்பிங் பணி நடைபெறும்போது, அவர் வரவேயில்லை.” - சரத் கெல்கர்

Sharad Kelkar: பாகுபலி மற்றும் மஹிஸ்மதி உலகத்தில் இதுவரை கேட்காத, பார்க்காத மற்றும் அனுபவித்திராத பல நிகழ்வுகளும், கதைகளும் இருக்கின்றன. டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மற்றும் கிராஃபிக் இந்தியா இணைந்து, இந்தியாவில் எண்ணற்ற ரசிகர்களின் அபிமானம் பெற்று திரைப்படமான பாகுபலி படத்தின் அனிமேட்டட் சீரிஸை சமீபத்தில் அறிமுகம் செய்தது.
இரத்தத்தின் மணிமகுடம்
ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் பாகுபலி: க்ரௌன் ஆஃப் பிளட் (இரத்தத்தின் மணிமகுடம்) என்ற பெயரில் உருவாக்கப்பட்டிருக்கும் இக்கதையில், மஹிஸ்மதி நாட்டையும் மற்றும் அரியணையையும், அதன் மிகப்பெரிய எதிரியான ரக்ததேவா என்ற பெயர் கொண்டவனின் பயங்கரமான அச்சுறுத்தலுக்கு எதிராக நின்று, பாகுபலியும், பல்லாலதேவாவும் பாதுகாக்கின்றனர்.
மிகச்சிறப்பான நடிப்புத்திறனுக்கும் மற்றும் பல பிரபலமான திரைப்படங்கள் சீரிஸ்களுக்கு பின்னணி குரல் கொடுப்பதற்காகவும் நாடெங்கிலும் பரவலாக அறியப்படும் நடிகர் சரத் கெல்கர், பாகுபலி சீரிஸின் கதாநாயகனான பிரபாஸ்-க்கு பின்னணி குரல் கொடுத்து இருக்கிறார். அதற்காக அவருக்கு பல்வேறு தரப்பில் இருந்து பாராட்டுகள் வந்து கொண்டிருக்கின்றன.
ஷரத் கல்கர் பேட்டி:
இது தொடர்பாக ஷரத் கல்கர் பேசுகையில், “டப்பிங் பணியை நான் சிறப்பாக செய்கிறேன். ஆனால், ஒரு நல்ல குரல் தேவைப்படுகின்ற ஒரு குறிப்பிட்ட வகையான கதாபாத்திரத்திற்கு மட்டுமே அதனை நான் செய்வேன் என்று அர்த்தமில்லை. முதலில் நான் ஒரு நடிகர். நான் சிறப்பாக நடிக்கக்கூடியவன். எனது குரலைப் பொறுத்தவரை எந்தவொரு பரிமாணத்திற்கும், அதனை என்னால் எடுத்துச்செல்ல முடியும்.
ஆனால், அதிஷ்டவசமாக கடந்த இரண்டு ஆண்டுகளில் ஏராளமான நபர்கள், என்னிடம் ஆழமான நம்பிக்கையை வெளிப்படுத்தி இருக்கின்றனர். ஒரே மாதிரியான முத்திரை என் மீது குத்தப்படாமல் இருப்பதற்காக, வெவ்வேறு வகையான கதாபாத்திரங்களை ஏற்று நடிக்கவும், பின்னணி குரல் கொடுக்கவும் நான் முயற்சி செய்கிறேன். நல்ல நேரங்கள் வருவதற்காக நான் காத்திருக்கிறேன். சிறப்பானது நிச்சயமாக வரும் என்று நான் நம்புகிறேன்.” என்று கூறினார்.
பாகுபலி பற்றி ஷரத் கல்கர்:
பாகுபலி பற்றி அவர் மேலும் பேசுகையில், “பாகுபலியின் குரலாக என்னை ஆக்கியதற்கான அனைத்துப் புகழும், பெருமையும் எஸ்எஸ் ராஜமௌலி சாருக்கே உரித்தானது. அதற்காக என்னை அவர் தேர்வு செய்தார். அந்த கதாபாத்திரத்தை நான் கற்பனை செய்த கண்ணோட்டத்தின் அடிப்படையில், அதற்குப் பின்னணி குரல் கொடுக்கும் முழு சுதந்திரத்தையும் எனக்கு அவர் தந்தார்.
பாகுபலி முதல் பகுதியின்போது மாலை வேளைகளில் வரும் அவர் செய்து முடிக்கப்பட்டிருக்கின்ற டப்பிங்கை சரிபார்ப்பார். பாகுபலி இரண்டாவது பகுதி டப்பிங் பணி நடைபெறும்போது, அவர் வரவேயில்லை. எங்கள் மீது முழுமையான நம்பிக்கை வைத்து “உங்களது பணியை நீங்கள் செய்யுங்கள்” என்று சொல்லி விட்டார் ” என்று தனது மகிழ்ச்சியையும், நன்றியையும் தெரிவித்தார்.
குறிப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பேட்டியில் பேசிய நபரின் தனிப்பட்ட கருத்துக்கள் ஆகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இந்த தகவல்களுக்கும் ஹிந்துஸ்தான் தமிழ் இணையதளத்திற்கும் சம்பந்தம் கிடையாது.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

டாபிக்ஸ்