8 Years of Bahubali : பாகுபலியை கொன்றது யார்? என்ற சஸ்பென்ஸ் வைத்து, ஒரு நீண்ட இடைவேளை விட்ட படம் பாகுபலி - தி பிகினிங்!
8 Years of Bahubali : எட்டு ஆண்டுகளை கடந்தாலும் இன்றும் இந்தப்படம் நினைவில் நிற்பதற்கு காரணம், இந்தப்படத்தின் இயக்கம், கதை, விஷீவல் எபெஃக்ட்ஸ், சினிமோட்டோகிராஃபி, தீம்கள், சண்டைக்காட்சிகள், இசை, நடிப்பு என அனைத்தும் நன்றாக இருந்ததால்தான்.

2015ம் ஆண்டு தெலுங்கில் வெளியான திரைப்படம். அதிக தென்னிந்திய மொழிகளில் வெளியான படம் பாகுபலி 1. பிரமாண்டமான இந்தப்படத்தை அப்போது பார்த்து வியக்காதவர்களே இல்லை.
பாகுபலி புராண கதையை அடிப்படையாகக் கொண்ட திரைப்படம். இந்தப்படத்தை தெலுங்கின் புகழ்பெற்ற இயக்குனர் ராஜமௌலி இயக்கியிருந்தார். தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்ட திரைப்படம். பிரபாஸ், அனுஷ்கா இந்தப்படத்தில் நன்றாக நடித்திருப்பார்கள். அவர்கள் இருவருக்கும் நல்ல பெயரை பெற்றுக்கொடுத்த திரைப்படம்.
பாகுபலி தி பிகினிங்கில், கதை, ரம்யாகிருஷ்ணன் ஒரு குழந்தையுடன் ஆற்றில் இறங்கி வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டு, அந்த குழந்தையை காப்பாற்றும் படி இறைவனிடம் வேண்டிவிட்டு, நீரில் முழ்கும் காட்சியில் துவங்கும். அந்த குழந்தை அந்தப்பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு கிடைக்கும். அதில் குழந்தை இல்லாத ரோகிணி, பொன்வன்னன் தம்பதிகள் எடுத்து வளர்ப்பார்கள். அந்தக் குழந்தை தான் பிரபாஸ்.